புதன், 16 ஜனவரி, 2013

அடுத்த பலிகடா அப்சல் குரு


நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு
அடுத்த பலிகடா அப்சல் குரு .....

     10.12.2012 அன்று நமது மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் அப்சல் குருவின் கருணை மனு மீதான முடிவு இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்குப்பின் எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். The Hindu 11.12.2012
     டிசம்பர் 22, 2012 அன்றே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்துள்ள நிலையில் இனி ஒரு நாள் திடுதிப்பென தூக்கிலிட்டு விட்டோம் என்ற செய்திகள் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அப்சல் குரு நமது நாடாளுமன்ற தாக்குதல் முயற்சியில் (13.12.2001) தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளி. தூக்கிலிடப்பட்ட பின் வளரும் விவாதங்கள் எந்த நியாயத்தையும் வழங்கிவிடமாட்டா. யாருடைய கண்களையும் திறந்து எந்தப் பலனுமில்லை.
     ஆனால் நீதிக்கான நமது போர் தொய்வின்றி தொடரும். இந்த வகையில் அப்சல் குரு விவகாரத்திலும் அவர் குற்றம் சாட்டப்பெற்ற நாடாளுமன்ற தாக்குதலையும் குறித்து நாம் பல தொடர்களை வைகறையில் வெளியிட்டுள்ளோம்.
     அவை நாடாளுமன்ற தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்என்ற பெயரில் நூலாகவும் வெளி வந்துள்ளது. அந்த நூலிலும் அதற்கு பின்னர் வந்த தொடரிலும் இடம் பெறாத பல தகவல்களை இடம் பெற செய்கின்றோம்.

இருட்டடிப்பு செய்யப்பட்ட ஒரு பெரும் உண்மை:

     PUDR People’s for Democratic Rights என்ற ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்பு ஓர் ஆவணத் தொகுப்பை வெளியிட்டது. அதற்கு டிசம்பர் 13 ஜனநாயகத்தின் மேல் தீவிரவாதம் என தலைப்பிட்டிருந்தது
     இதில் வந்த உண்மைகளை நமது தொலைக்காட்சிகள் ஏறெடுத்தும் பார்த்திட்ட தாகத் தெரிந்திடவில்லை.
     அதில் பக்கம் 47 இல் கணீர் என்றொரு பிரகடனம் Finally, parts of Afzal’s 313 when conjoined and interpreted raise daka      issues about the complicity of the security agencies in the conspiracy     புரியும்படியாக இதைச் சொன்னால்:
     அப்சல் குரு நீதிபதியின் முன் கொடுத்த வாக்கு மூலத்தின் ஒரு பகுதியையும் இதர தடயங்களையும் தொகுத்து ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் நாடாளுமன்றத் தாக்குதல் சதியில் பாதுகாப்பு படைகளும் தங்கள் கைவரிசையைக் காட்டி இருக்கின்றன என்ற கசப்பான உண்மை வெளிவருகின்றது.
     நமது நாடாளுமன்ற தாக்குதல் அதை தாக்கிட நடந்த முயற்சியில் நமது பாதுகாப்பு படைகளின் பங்குஎன்பவை எத்துணை பாரதூரமான பதிவு. இதில் இன்றளவும் எந்த விசாரணையும் இல்லை அரசு தரப்பிலிருந்து.
     ஆனால் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி ஆவணத் தொகுப்பொன்றை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கின்றது. அதில் இந்த வரிகள் ஒரு பெரும் சவாலை தொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
     அதனை மீடியாக்கள் கண்டுகொள்ளவே இல்லை.
     மொத்தத்தில் கஷ்மீரின் STF - Special Task Force என்ற சிறப்புப்படையும் ராஜ்பிர் சிங் என்ற டெல்லி காவல்துறை ஆணையரும் ஏற்பாடு செய்ததே இந்த நாடாளுமன்ற தாக்குதல் முயற்சி என அந்த PUDR People’s Union Democracy Rights  அறிக்கை உணர்த்திற்று.
     இதில் கைதிகளாக காவல் துறையின் கட்டுப்பாட்டிலிருந்த பல கஷ்மீர் முஸ்லிம்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
     அப்சல் குருவின் விவகாரத்திலும் இதுவே நடந்தது. அதனை சுருக்கமாக இங்கே தருகின்றோம்.

அப்சல் யார்?

     முஹம்மத் அப்சல் வறுமையில் வாடிய ஓர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தை அவருடைய இளம் பருவத்திலேயே இறந்து  போனார். அவருடைய அண்ணன் ஏஜாஸ் அஹ்மத் தான் அவரை வளர்த்தார். ஏஜாஸால் நன்றாக படித்திட இயலவில்லை. அதனால் அவன் தன் தம்பியை படிக்க வைக்க விரும்பினார். தம்பி அப்சல் குரு படிப்பதில் ஆர்வம் காட்டினான். அப்சல் குரு நன்றாக படித்து ஒரு மருத்துவராக ஆகிட வேண்டும் என்று விரும்பினான். இந்த இலட்சியத்தை அடைந்திட ஏஜாஸ் உதவி செய்தார்.

காஷ்மீரில் போர்:

     அப்சல் மருத்துவ படிப்பின் முதலாண்டில் படித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் கஷ்மீரின் இளைஞர்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அந்தப் போராட்டம் 1987ல் கஷ்மீரில் நடந்த பொது தேர்தலுக்கெதிரான போராட்டம். இந்த தேர்தலில் ஜெயித்தவர்கள் சிறையிலடைக்கப் பட்டார்கள். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் சட்டசபைக்கு அனுப்பப்பட்டார்கள் (ஒரு பெரும் ஜனநாயக படுகொலை நடந்தது)
     இந்த போராட்டம் காலாகாலமாக கஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, ஒடுக்குமுறை இவற்றிற்கு எதிராக எழுந்தது. தாமாக மக்கள் படை திரண்டு பல பத்தாண்டுகளாக நடந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நடத்திய போராட்டம். இந்தப் போராட்டத்தில் நடந்த ஊர்வலங்கள் பல மைல்கள் நீளங் கொண்டவை. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் வெகுண்டெழுந்தார்கள்.
     தாங்கள் உலகில் வைத்திருந்த அபிலாஷைகளைப் புறந்தள்ளிவிட்டு தங்களது இல்லங்களை துறந்து பனிமண்டலங்களைக் கடந்து பள்ளத்தாக்குகளைக் கடந்து பாகிஸ்தான் கைவசமுள்ள கஷ்மீருக்கு சென்று ஆயுத பயிற்சி எடுக்கச் சென்றார்கள். அப்சல் குருவும் அவர்களில் ஒருவன்.
     மூன்று மாதங்களுக்கு பின் அவன் திரும்பி வந்து விட்டான். காரணம் பாகிஸ்தானும் தன் அரசியல் விளையாட்டுகளுக்காக கஷ்மீர் இளைஞர்களை பயன்படுத்துகின்றது என்பதை தெரிந்து கொண்டான். அதனால் அவனது சிந்தனைகள் மாறின. அவன் திரும்பி வந்தான். நமது எல்லைப் பாதுகாப்பு படையிடம் சரணடைந்தான். அவன் சரணடைந்ததற்கு நமது எல்லைப் பாதுகாப்பு படையினர் விதித்த நிபந்தனை அவன் இன்னும் இரண்டு பேரை சரணடைந்திட செய்திட வேண்டும். இந்த நிபந்தனையையும் அவன் நிறைவேற்றிடவே செய்தான்.

     அப்சல் வேலை தேடினான் வாழ்வதற்கு. மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் வேலை ஒன்று அவனுக்கு கிடைத்தது. இது அவனுடைய மருத்துவராக வேண்டும் என்ற ஆசையை ஓரளவுக்கு ஈடு செய்வதாக இருந்தது. இதில் மாதம் ஐந்து ஆயிரம் ரூபாய் வருவாயாகக் கிடைத்தது. அவன் திருமணம் செய்து கொண்டான்.
     திருமணமான இரண்டு நாள் கழித்து கஷ்மீரின் சிறப்புப் படையைச் சார்ந்த சிலர் அவன் வீட்டுக்கு வந்தார்கள். அவனை அவர்களுடைய முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே அவனை அவர்கள் ஏறத்தாழ ஒரு மாதம் வைத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் அவன் குரூரமான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டான்.
     அவனுடைய மலத்துவாரத்தில் பெட்ரோலை ஊற்றினார்கள். குளிர்ந்த நீரில் பல நாள்கள் வைக்கப்பட்டிருந்தான். கடுமையான உதைகளுக்கும் அடிகளுக்கும் ஆளாக்கப்பட்டான்.
     அவனை இந்த சித்திரவதைகளிலிருந்து விடுவித்து வெளியே விட வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாயைத் தந்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள் STF என்ற கஷ்மீர் சிறப்புப்படையினர். இந்த சிறப்புப்படையினர் கஷ்மீர் மக்களிடம் தண்டால் வசூல் செய்வதில் மிகவும் பிரசித்து பெற்றவர்கள்.
     அப்சல் குருவின் மனைவி தபசும் தன்னிடமிருந்த எல்லா அணிமணிகளையும் விற்ற பின் தான் இந்த ஒரு லட்சம் ரூபாயை ஏற்பாடு செய்திட முடிந்தது. அப்சல் பயன்படுத்திக் கொண்டிருந்த ஸ்கூட்டரை அவனுடைய தாய் விற்று விற்றாள், இந்த ஒரு லட்சம் ரூபாய் என்ற இலக்கை அடைந்திட.
     ஒரு லட்ச ரூபாயைத் தந்தார்கள். அப்சலை மீட்டார்கள். ஆனால் அவனை ஒரு நடைபிணமாகவே அவன் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார்கள்.
     அப்சல் சிறப்பு படைகளின் கைகளிலிருந்த நாள்களை அந்தக் குடும்பத்தினரால் மறந்திட இயலவில்லை.
     மக்கள் எழுச்சி : அடுத்து அப்சல் சிறப்பு படையின் (எஸ்டிஎஃப்-இன்) தகிடுதத்தங்களை வெளியே சொன்னால் என்ன நடக்குமோ, இந்தச் சிறப்புப் படையினர் என்ன செய்வார்களோ என்ற பீதியும் பயமும் அப்சலின் குடும்பத்தைத் தொற்றிக் கொண்டது.
     இந்த பயம் அப்சலை விட அவனுடைய அண்ணன் ஏஜாஸை அதிகமாக தொற்றிக் கொண்டது. மொத்த குடும்பமும் பீதி வயப்பட்டது.
     இந்த சிறப்பு படையை அகற்றிட வேண்டும். அது நடத்தும் சித்திரவதைக் கூடங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் போராடினார்கள். உலகெங்கிலுமிருந்து கஷ்மீரைப் பார்வையிட வந்த மனித உரிமை அமைப்புகள் போராடின. ஆனால் நம் நாட்டு ஊடகங்களோ நம் நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகளோ இதை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
     நம் நாட்டு மனித உரிமை அமைப்புகள் கஷ்மீர் மக்களைச் சித்திரவதைச் செய்தால் அது நாட்டுப்பற்று என எடுத்துக்கொள்கின்றார்கள் என்று நந்திதா ஹாக்சர் ஆதங்கப்படுகின்றார்
     இந்த நந்திதா ஹாக்சர் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பிரதான குற்றவாளி SAR ஜீலானிக்காக வாதாடியவர்.
     எஸ்.டி.எஃப் என்ற கஷ்மீர் சிறப்புப் படையின் மீது மக்கள் எந்த அளவுக்கு வெறுப்புக் கொண்டார்கள், அந்த வெறுப்பால் அவர்கள் எவ்வாறு ஒருமுகப்பட்டு நின்றார்கள் என்றால் இந்த சிறப்புப்படையை அகற்றிடு வேன் என்று வாக்குறுதி கொடுத்தால் தேர்தலில் வென்றிடலாம் என்ற நிலை இருந்தது.
     உண்மையில் இப்படியொரு வாக்குறுதியை தேர்தல் வாக்குறுதியாக வழங்கித்தான் முஃத்தி செய்யீத் என்பவர் கஷ்மீர் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தார். (மேலே சொன்ன மேற்கோள்)
     சில நாட்கள் கழித்து இந்த சிறப்பு படையினர் அப்சலிடம் அவர்கள் சொல்லும் நபர்களை வேவு பார்த்து தகவல் தந்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினார்கள். இராம் மோகன் ராண் என்ற 22 ராஷ்டிரிய்ய ரைபிள் படையைச் சார்ந்தவர் அப்சலை அழைத்துச் சென்று அவனுடைய மறைவிடங்களில் மின்சாரத்தை பாய்ச்சினார். அவரை அவமானப்படுத்தினார்கள். வதைத்தார்கள். வைதார்கள்.
தொடரும் சித்திரவதை:     அடிக்கடி அவர்கள் அப்சலை அழைத்து சென்று சித்ரவதை செய்தார்கள். ஒரு நாள் இரவு டி.எஸ்.பி வினாய் குப்தாவும் டி.எஸ்.பி டாரிந்தர் அவர்களும் எங்கள் வீட்டுக்கு வந்து இருந்தவர்கள். அனைவரையும் வாய்க்கு வந்தபடி வைதார்கள். அப்சலை அழைத்து சென்றார்கள். மீண்டும் பணம் கேட்டார்கள். மிச்சம் மீதி இருந்தனவற்றை விற்றுத் தந்து தான் அப்சலை மீட்டிட முடிந்தது.
     இந்த கொடுமைகள் தாழாமல் அவர் டெல்லிக்கு வந்து விடுவது என்று முடிவு செய்தார். அங்கே தனது வியாபாரத்தை தொடர்ந்தார். டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். படித்து பட்டமும் பெற்றார்.
     முஹம்மத் : ஒரு முறை அவர் குடும்பத்தவர்களைப் பார்க்க வந்த போது சிறப்புப் படையினர் அவரை அழைத்துச் சென்றனர். ஹும்ஹாமா என்ற இடத்திலுள்ள சிறப்பு படையின் முகாமில் வைத்து முஹம்மத் என்பவரையும் தாரிக் என்பவரையும் அறிமுகப்படுத்தினார்கள். அதில் முஹம்மத் என்பவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள். அந்த முஹம்மத் யார் என்பதோ அந்த முஹம்மதை எஸ்.டி.எஃப் என்ற சிறப்பு படையினர் ஏன் டெல்லிக்கு அழைத்துச் செல்ல கட்டாயப்படுத்துகின்றார்கள் என்பதோ அப்சலுக்குத் தெரியாது.
     இந்நிலையில் அவர் இனி கஷ்மீரிலிருந்து தன் குடும்பத்தவர்களை டெல்லி அழைத்து வந்திட வேண்டும் என முடிவு செய்தார். அவருக்கொரு மகனும் பிறந்திருந்தான்.
     டெல்லியில் இந்திராவிகாரின் ஒரு வீட்டுக்கு ஏற்பாடு செய்தார். பெருநாளுக்கு கஷ்மீருக்கு வந்து குடும்பத்தினருடன் பெருநாள் கொண்டாடிவிட்டு குடும்பத்தோடு டெல்லி சென்றிட கஷ்மீர் சென்றார். ஸ்ரீநகர் பஸ் நிலையத்தில் இறங்கினார். தயாராக இருந்த கஷ்மீர சிறப்புப்படையினர் அவரைக் கைது செய்தார்கள். நாடாளுமன்றத் தாக்குதலில் இணைத்தார்கள். இப்போது தூக்கு மேடைக்கே கொண்டு சென்று விட்டார்கள்.
     பாட்னாவிலிருந்து தூக்குக் கயிரு தருவிக்கப்பட்டது. தூக்கில் யார் போடுவது என்பதும் முடிவாகி விட்டது.
     ஒருவேளை இறந்த பின் அவர் என்ன என்ன அறிக்கை விட வேண்டும் என்பதும் எழுதி வாங்கப்பட்டிருக்கும்.

அப்சல் குருவிடம் வாக்குமூலம் வாங்கியவரின் வாக்குமூலம்

     நமது பாரத நாட்டில் அப்பாவி முஸ்லிம்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி வாக்குமூலங்களை வாங்கிடுவதற்கென ஐந்து சித்திரவதைக் கூடங்கள் இருக்கின்றன. இதனை நாம் வைகறை வெளிச்சத்தில் ஏற்கனவே விரிவாக வெளியிட்டிருக்கின்றோம்.
     இந்த வழியிலேயே காஷ்மீர் எஸ்.டி.எஃப்-ஐ சார்ந்த டிரேவிந்தர் சிங்  என்பவர் அப்சல் குருவையும் சித்திரவதைச் செய்து வாக்குமூலம் வாங்கி இருக்கின்றார். இவர் தான் சித்திரவதை செய்ததை பர்வேஷ் புகாரி என்ற பத்திரிகையாளரிடம் இப்படி கூறுகின்றார்:
     நான் என்னுடைய முகாமில் வைத்து அப்சல் குருவை பல நாட்கள் சித்ரவதைச் செய்தேன். விசாரித்தேன். அவனை கைது செய்ததை நாங்கள் எங்களுடைய எந்தப் பதிவேட்டிலும் பதிந்திடவில்லை. அவனை எங்களுடைய முகாமில் வைத்து எப்படியெல்லாம் சித்திரவதைச் செய்தோம் என்பதை விளக்கியிருக்கின்றானோ அது அத்தனையும் உண்மை. அன்றைய நாட்களில் அது தான் எங்களுடைய வழக்கம். நாங்கள் அவனுடைய மலத்துவாரத்தில் பெட்ரோலை ஊற்றினோம். நான் அவன் மீது மின்சாரத்தை பாய்ச்சி சித்திரவதை செய்தேன். ஆனாலும் அவனுடைய உறுதியை என்னால் உடைத்திட இயலவில்லை. அவனை நாங்கள் எவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்திட இயலுமோ அவ்வளவு குரூரமாக சித்திரவதை செய்தோம். ஆனாலும் அவன் கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள் எங்களால் இயன்ற எல்லா குரூரங்களையும் கட்டவிழ்த்து விட்டோம்.  அவன் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை. காசிபாபா என்ற பாகிஸ்தான் உளவுத்துறையின் ஏஜெண்டுக்கும் அவனுக்கும் தொடர்பிருக்கின்றது என நாங்கள் சொல்லிடச் சொன்னோம். ஆனாலும் அவன் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுத்திடவில்லை. அவன் மலைபோல் நின்று விட்டான். நான் சித்திரவதை செய்வதில் கடுமையானவன். யாரை வேண்டுமானாலும் பணிய வைத்திடுபவன் என்ற பெயரையும் புகழையும் பெற்றவன். என்னுடைய சித்திரவதைக்குப் பின்னும் ஒருவன் குற்றமற்றவனாக வருகின்றான் என்றால் எவனும் அவனை சீண்டிட முடியாது. அவனை நல்லவன் என்றே மொத்த காவல் துறையும் எடுத்துக் கொள்ளும்.
     பர்வேஷ் பாரி இந்தப் பேட்டியை ஒரு பேட்டி என்ற அளவில் அல்லாமல் தனிப்பட்ட சம்பாஷனை என்ற பெயரில் டிரேவிந்தர் சிங் என்ற கஷ்மீரின் சிறப்புப் படையின் தலைவரிடமிருந்து கறந்த தகவலாகும்.
     இதனை தெஹல்கா பாணி என்றும் சொல்வார்கள்.
     டிரேவிந்தர சிங் தான் கொடுமையானவன் சித்திரவதைச் செய்பவன் என்பனவற்றை எள்ளளவும் மறைப்பவனல்ல. ஒரு தொலைக்காட்சியில் இப்படி பேட்டிக் கொடுத்தான். சித்திரவதை தான் தீவிரவாதத்தை தடுக்கும் ஒரே வழி. நான் அதை நாட்டுக்காக செய்கின்றேன். (அதே ஆதாரம் அதே பக்கம்)
     உண்மையில் அப்பாவிகளை இவன் செய்யும் தீவிரவாத செயல்களை ஒத்துக் கொள்வதற்கே இவன் சித்திரவதைகளைச் செய்கின்றான். பதவி உயர்வும் பணமும் தான் இவனது குறிக்கோள்.
     இதே அப்சல் குருவின் குடும்பத்தில் இருந்த கடைசி காசு வரைக்கும் கறந்தெடுத்தவன் இவன். இறுதியில் அவனை தூக்கு மேடையில் கொண்டு நிறுத்தி விட்டான்.

அப்சல் குருவே இலக்கு:

     அப்சல் குருவை தூக்கிலே போட்டுத்தான் எல்லா உண்மைகளையும் மண்மூடிப்போகச் செய்திட வேண்டும் என்பதை இன்னொரு நிகழ்வு உண்மைப் படுத்தும்.
     காவல்துறையினர் நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் அவனை குற்றவாளியாகக் காட்டிட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார்கள். இதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டைச் செய்தார்கள். அது  அப்சல் குருவை பிடித்து வந்து நான் தான் குற்றவாளி என தொலைக்காட்சியின் முன் சொல்லிட வைத்தார்கள்.
தொலைக்காட்சிப்பேட்டி:     டிசம்பர், 13, 2001 இல் நாடாளுமன்றத் தாக்குதல் முயற்சி நடைபெற்று டிசம்பர் 20 2001ல் தொலைக்காட்சி பேட்டி எடுத்தன
     இந்த பேட்டிகள் எங்கு வைத்து எடுக்கப்பட்டன என்பது இன்னும் விநோதமானது.
     இந்த பேட்டி டெல்லியிலுள்ள சிறப்பு காவல் நிலையத்தின் அலுவலகத்தில் வைத்து எடுக்கப்படுகின்றது. பேட்டிகளை ஒருங்கி ணைத்து வழிநடத்திக் கொண்டிருந்தவர் காவல் துறையின் ஸ்பெஷல் செல் பிரிவின் தலைவர் ராஜ்பிர் சிங். கஷ்மீர் எஸ்.டி.எஃப்க்குப் அடுத்ததாக நாடாளுமன்ற தாக்குதலின் மொத்த மூளையும் இவர் தான். அப்சல் குருவை தூக்கில் போட்டு அரசு முகவாண்மைகளின் சதிகளை மொத்தமாக மறைத்திட வெகு நாட்களுக்கு முன்னரே முடிவு செய்திருந்தார் இவர்.
      பேட்டியின் போது அப்சல் குருவிடம் ஒரு கேள்வி. ஒசாமா பின் லேடன் அவர்கள் பற்றிய இலக்கியங்கள் SAR ஜீலானியிடம் இருந்தனவா?
     இந்தக்கேள்விக்கு அப்சல்குரு SAR ஜீலானி என்பவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனப்பதில் சொல்லுகின்றார். உடனேயே டெல்லி சிறப்புப்பிரிவு படையைச் சார்ந்த ராஜ்பிர்சிங் காட்சிகளை நிறுத்த சொல்லுகின்றார். இதனை நீதிமன்றம் இப்படிப்பதிவு செய்கின்றது.
     ஷஹீர்கான் ஆஜ்தக் என்ற தொலைக்காட்சி செய்தி நிறுவனத்தின் முதன்மை செய்தியாளர் சிறப்பு நீதிமன்றத்தில் இப்படி கூறினார்:
     நான் ஆஜ்தக் டிவி சானலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றேன். நான் குற்றம் சுமத்தப்பட்ட முஹம்மத் அப்சல்குரு என்பவரை 20 டிசம்பர் 2001ல் டெல்லி சிறப்பு காவல் பிரிவின் லோடி ரோடு அலுவலகத்தில் வைத்துப் பேட்டிக் கண்டேன். இந்த பேட்டி 15 நிமிடங்கள் தொடர்ந்தன.
     நான் அப்சலிடம் கேட்டக் கேள்வி SAR ஜீலானி இடமிருந்து ஒசாமா பின்லேடன் பற்றி இலக்கியங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டனவா? என்பதாகும்
     அப்சல் குரு தன்னுடைய பதிலில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
     எனக்குப்பின் அதாவது ஆஜ்தக் தொலைக்காட்சிக்குப் பின் வேறு சில தொலைக்காட்சிகளும் பேட்டி     எடுத்தன. நான் பேட்டி எடுக்கும்போது என்.டி.டி.வி தொலைக்காட்சியை சார்ந்தவர்களும் அங்கு இருந்தார்கள். நான் ஆஜ்தக் தொலைக் காட்சிக்காக பேட்டி எடுத்த பின் சில தொலைக்காட்சி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் என்னிடம் ஜீலானியின் நாடாளுமன்றத் தாக்குதலில் பங்கு பற்றி கேட்டார்கள். நான் அவர்களிடம் ஜீலானி அப்பாவி எனக் கூறினேன். உடனேயே காவல் துறை துணை ஆணையர் ராஜ்பீர்சிங் எழுந்து என்னிடம் ஜீலானி பற்றி யாரிடமும் எதுவும் சொல்லிடக் கூடாது என்றார். இந்த சம்பவம் சாட்சியம் எண் 4-கின் முன்னாலேயே நடந்தது. குற்றம் சாட்டப்பெற்ற ஏனையோரை பேட்டிக் காண எங்களை அனுமதிக்கவில்லை.
     அதன் பின் ராஜ்பீர்சிங் எழுந்தார். என்னிடம் வந்தார். அவர் குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவிடம் SAR ஜீலானியைப் பற்றி யார் கேள்வி கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் என என்னிடம் சொன்னதும் உண்மையே.
     ஆனால் ராஜ்பீர்சிங் இப்படிச் சொல்லிடும் போது நான் அப்சல்குருவைப் பேட்டி எடுத்து முடித்திருந்தேன்.
     அதன்பின் ராஜ்பீர்சிங் என்னிடம் வந்து ஜீலானி பற்றி அப்சல் குரு சொன்னவற்றை தொலைக்காட்சியில் காட்டிட வேண்டாம் எனக்கூறினார். அதேபோல் நாங்கள் 20 டிசம்பர் 2001 மாலை 5 மணிக்கு இந்தப் பேட்டியை ஒளிபரப்பு செய்த போது அந்த வரிகளை விலக்கிக் கொண்டோம். ஆனால் 100 நாட்களுக்குப் பின் நாங்கள் மறு ஒளிபரப்பு செய்தபோது அந்த வரிகளையும் சேர்த்துதான் ஒளிபரப்புச் செய்தோம்.


     நீதிமன்ற பதிவுகளிலிருந்து:( (PUDR: report december 13 Terror over democrasy page 208, 209, 210 deposition of aaj tak principal correspondent oct 10 2002 dw4) இங்கே நாம் கவனிக்க வேண்டியது எல்லோமே முன்னரே முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. அப்சல் குருவை மக்கள் மன்றத்தில் பிரதான குற்றவாளியாகக் காட்டி விட்டு அவனை தூக்கில் போட்டு மொத்த சதியையும் ஒன்றாக மூடி விட வேண்டும் என்பதே தொடக்க நாள் முதல் திட்டம்.
     அதனால் காவல் நிலையத்தில் வைத்த ஒரே ஒரு குற்றம் சுமத்தப்பட்டரை பேட்டி எடுத்திருக்கிறார்கள்.   மக்கள் மன்றத்தில் அவரது வாயைக் கொண்டே அவரை குற்றவாளி என சொல்லிட வைத்த பின்பு சாட்சியங்கள் சட்டத்தின் சீரான நடவடிக்கைகள் எல்லாம் எதற்கு?
     குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சுமத்தப்பட்டவரை நிரபராதிஎன்றே கொள்ள வேண்டும் என்ற சட்டத்தின் பொன்னான கோட்பாடுகளை காவல்துறை காற்றிலே பறக்க விட்டது. நீதித்துறை இதனை கண்டித்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையுமில்லை.
     ஆனால் அப்சல் குரு விவகாரத்தில் குறிப்பாக நாடாளுமன்ற தாக்குதலில் இஃது இன்னும் ஒருபடி மேலே நடந்தது. அதாவது காவல்துறை ஜோடித்த மொத்தப் பொய் வழக்கையும் மையமாகக் கொண்டு ஒருபடமே எடுக்கப்பட்டது. இதை ஸீ நியூஸ் நிறுவனம் எடுத்தது. திரைப்படத்தின் பெயர் டிசம்பர் 13”. வழக்கு நடந்துக் கொண்டிருக்கும் போது படம் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் எல்லோருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகின்றது. அந்த தூக்குத் தண்டனையே தீர்ப்பிலும் கீழ் நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்றது. தீர்ப்பு இப்படித்தான் இருக்கவேண்டும் எனத் திரைப்படம் நீதிமன்றங்களுக்கு அழுத்தங்களை தந்தது. அதுதான் மக்கள் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்றது திரைப்படம்.
     அதாவது வழக்கு நடந்து முடிவதற்கு முன்னரே முஸ்லிம்கள் குறிப்பாக கஷ்மீர் முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றும் மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள். இனி வழக்கில் என்ன நடந்தால் என்ன? மக்களில் சிலர் தூக்கு எப்போது எனக் கேட்டார்கள். திரையில் பார்ப்பதெல்லாம் நிஜம் என்று நம்பும் மக்கள் தூக்குப் போட்டாகி விட்டதே என்பார்கள். தூக்கில் போடாவிட்டால் என்ன நமது அரசு தீவிரவாதிகளை விட்டுவிடுகின்றதே இதனால் தான் நாட்டில் தீவிரவாதம் பெருகுகின்றது என்பார்கள்.
     நாட்டில் நடப்பிலிருக்கும் சட்டங்களின் படி குற்றம் சுமத்தப் பட்டவர்களை தொலைக்காட்சியில் காட்டுவதே தவறு. ஆனால் அவர்களை பேட்டியும் எடுக்கின்றார்கள். திரைப்படமும் எடுக்கின்றார்கள்.

உச்சநீதிமன்றத்தின் உச்சபட்ச (அ)நீதி:

     இப்படிப் படம் எடுப்பது தவறு, அதை திரையிட்டது தவறு, அதை உடனேயே நிறுத்த வேண்டும் என நீதிமன்றம் சென்றார்கள். டெல்லி உயர் நீதிமன்றம் ஸ்டே ஐ தடையை வழங்கியது. படமெடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்கள். உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஊடகங்களின் அழுத்தங்களுக்கு ஆளாகமாட்டார்கள் எனக்கூறி டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடைய அகற்றியது. திரைப்படம் தங்குதடையின்றி ஓடியது. இறுதியில் திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனையே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தரப்பட்டது. கீழ்நீதிமன்ற நீதிபதி திங்காரா கங்காரா என்பவரால் வழங்கப்பட்ட இந்த மொத்த தீர்ப்பும் உயர்நீதிமன்றத்தில் பல திருத்தங்களுக்கும் தலைகீழ் மாற்றங்களுக்கும் உள்ளாகியது.
     திரைப்படத்தில் காட்டப்பட்டதைப் போல் நாடாளுமன்ற தாக்குதலின் மூளை என குற்றம் சாட்டப்பட்ட டெல்லி பல்கலைகழக பேராசிரியர் ஷிகிஸி ஜீலானி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பெற்றது. ஆனால் உயர் நீதி மன்றம் அவரை விடுவித்தது.

     உச்சநீதிமன்றத்தின் அநீதியும் அந்த திரைப்படத்தின் தாக்கமும் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை நந்திதா ஹாக்சர் என்ற மூத்த வழக்கறிஞர் இப்படி குறிப்பிடுகின்றார்: The Supreme court however  vacated the stay on grounds that judges could not be influenced. it failed to appreciate how such film are responsible for creating a climate of fear and mistrust.Today even post acquittal Geelani cannot get a house on rent. His children find it hard to lead a normal life(source:13 december A Reader with an introduction by Arunthathi Rai Page no:9)
     அதாவது உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கிற்று. நீதிபதிகள் ஊடகங்களின் பாதிப்புகளுக்கு உள்ளாகமாட்டார்கள் என காணம் சொன்னது. அதுபோன்ற திரைப்படங்கள் மக்களிடையே அச்சத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதில் பொறுப்பு வகிக்கின்றன என்பதை கண்டு கொள்ள உச்சநீதிமன்றம் தவறிவிட்டது. இப்போது ஜீலானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார். ஆனால் அவர் ஒரு சாதாரண வாழ்க்கையை மக்கள் மத்தியில் நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றார். அவருக்கு ஒரு வாடகை வீடு கிடைப்பதில்லை. அவருடைய குழந்தைகளும் ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திட முடிவதில்லை (டிசம்பர்13 A Reader page no9)
     ஆனால் அப்சல்குருவுக்கு திரைப்படத்தில் தரப்பட்ட தண்டனை மக்கள் மனதில் கடைசிவரை நீடித்தது.
பொடா
அப்சல்குரு விவகாரத்தில் இன்னும் பல விளையாட்டுக்கள்: நாடாளுமன்றத் தாக்குதல் முயற்சி டிசம்பர் 13 2001ல் நடைபெற்று அப்சல் குருவை டிசம்பர் 15 2001  ஆம் ஆண்டு கைது செய்தார்கள். பொடா என்ற பாசிச பயங்கரவாத சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். டிசம்பர் 20ம் நாள் நாடாளுமன்றத் தாக்குதலை பொடாவின் கீழ் கொண்டு வந்தார்கள்.
     ஏனெனில் பொடாவின் கீழ் வாங்கப்படும் வாக்குமூலம் சட்டப்படி செல்லும். அதைக் கொண்டே அவனை தண்டிக்கலாம். அத்தோடு தனி நீதிமன்றம் அமைக்கவும் அது வழிவகுத்தது.
     இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னொது விவகாரம் என்னவெனில் பொடாவைக் கொண்டு வருவதற்காக திட்டமிடப்பட்டதே இந்த நாடாளுமன்றத் தாக்குதல். அதுபோது நாட்டை ஆட்சி செய்து கொண்டு இருந்த பாரதீய ஜனதா கட்சியின் ஊழல் ஊரெல்லாம் நாடெல்லாம் பரவி நாடாளுமன்றத்தையும் அதிர்வுகளுக்குள்ளாக்கி கொண்டிருந்தது.
ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன : தொடர் சித்திரவதை பொடா இவையெல்லாவற்றையும் பயன்படுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலத்தையும் கூட உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கறிஞர் நந்திதா இப்படி குறிப்பிட்டார் வழக்கின் புலனாய்வில் நடந்தது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவை. நீதிமன்றங்களே அக்கறையுடன் சாட்சியங்கள் புகுத்தப் பட்டுள்ளன, டெல்லி காவல் சிறப்பு நிலையத் தின் காவல் துறை அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் எடுத்து நீதிமன்றங்களில் பொய் சாட்சியம் சொன்னார்கள், அதேபோல் உச்ச நீதி மன்றம் காவல்துறையினர் அப்சல் குருவை சித்திரவதைச் செய்து ஒப்புதல் வாக்குமூலங்களை பெற்றிருக்கின்றார்கள்  என்பதை ஒத்துக் கொள்கின்றது. December 13 A Reader Page : Arundhati Roy & Haksar Page No. 26/27
     உச்ச நீதி மன்றம் இப்படி சொன்னது
“All these Lapses and violations of proceedural safeguards guaranteed in the statue itself impell us to hold that it is not safe to act on the alleged confessional statement of Afsal and Place reliance on this item of evidence on which the prosecution places heavy reliance”
Extracted from the Supreme Court Judgement 4/8/2005/ Nirmalang shree Mukerjee. Should Muhammed Afzal die. Page No.128.
      அதாவது வாக்குமூலங்கள் வாங்குவதில் சட்டங்கள் உறுதியளித்துள்ள பாதுகாப்புகளில் செய்யப்பட்டுள்ள அத்துமீறல்கள் தொய்வுகள் இவை எங்களை அப்சலின் இந்த வாக்குமூலங்களை சார்ந்திருப்பது சரியல்ல என்பதை உணர்த்துகின்றன. அதை ஒரு சாட்சியம் என எடுத்துக் கொள்வதும் சரியல்ல. ஆனால் அந்த வாக்குமூலத்தின் மீதுதான் அரசு அதிகமாகச் சார்ந்திருக்கின்றது.

     இப்படி அப்சலின் வாக்கு மூலம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது. அப்சல் மீதான மொத்த வழக்கும் அவன் வழங்கிய வாக்கு மூலத்தை நம்பியே இருக்கின்றது. அது முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட பின் அவனை எப்படித் தூக்கில் போட முடியும்?

அப்சல்குரு தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவரா?

     நாடாளுமன்ற தாக்குதல் நடந்தவுடன் லஸ்கரே-இ-தொய்பா, ஜெய்சே முஹம்மது ஆகிய பாகிஸ்தான் அமைப்புகளைச் சார்ந்தவர்களே இந்த தாக்குதலை செய்தார்கள் எனப் பிரகடனப்படுத்தினார்கள். அத்வானி இதில் முன்னிலையில் நின்றார். இதனை அடிப்படையாகக் கொண்டு பாகிஸ்தானோடு ஒரு போருக்கு தயாரானார்கள். 10000 கோடி ரூபாய் செலவில் படைகள் எல்லைகள் நோக்கி நகர்த்தப்பட்டன. இந்த அவசர நடவடிக்கையில் நமது இந்திய இராணுவத்தினர் 800 பேர் இறந்தார்கள். 100 குழந்தைகள் மடிந்தார்கள் நிலத்தில் புதைத்த கண்ணிவெடிகளில் சிக்கி பலநூறு விவசாயிகள் மாண்டார்கள். அணு ஆயுதங்களைப் பற்றிய பேச்சுகளும் வந்தன. ஆனால் எந்த தீர்ப்பும் அப்சல் குருவோ மற்றவர்களோ தீவிரவாத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்பதை குறிப்பிடவில்லை. அவர்கள் யாரும் எந்த அமைப்பும் சார்ந்தவர்களல்லர். குறிப்பாக அப்சல் குரு 1990ல் நமது எல்லை பாதுகாப்பு படையிடம் சரணடைந்தவர். அன்று முதல் அவர் நமது பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பில் கீழிலிருந்தார். அப்படியிருக்க அவர் பாதுகாப்பு படைகளை விஞ்சி எதுவும் செய்திட இயலாது.
     பிரதான மூளை: இத்தனைக்கும் மேலாக அப்சல் குருவின் பிரதான மூளை என்று யாரும் குறிப்பிடப்படவோ குற்றம் சாட்டப்படவோ இல்லை. நாடாளுமன்ற தாக்குதலின் பிரதான மூளை எனக் குற்றம் சாட்டப்பெற்றவர் ஜீலானிதான். ஆனால் அவரை அனைத்துக் குற்றங்களிலிருந்தும் விடுவித்து விட்டார்கள். இந்நிலையில் ஏன் அப்சல் குருவை தூக்கிலிட வேண்டும் எனத் துடிக்கின்றார்கள்.

அப்சல்குருவுக்கு அடிக்கடி வந்த போன்

     அப்சல் குரு தான் தனது வழக்கறிஞர் சுஷில் குமாருக்கு எழுதிய கடிதத்தில் எனக்கும் நாடாளுமன்ற தாக்குதலில் கொலை செய்யப்பட்ட முஹம்மத் என்பவருக்கும் பல தொலைபேசி அழைப்புகள் கஷ்மீர் எஸ்டிஎஃப்-ஐ சார்ந்த டிராவிந்தர் சிங் என்பவரிடமிருந்து தான் வந்தது என்பதை நீங்கள் எங்கள் செல்போன்களை ஆய்வு செய்தால் கண்டு கொள்ளலாம் என கூறியுள்ளார். (Arundhati Roy Dec-13 Page No.19)
     ஆனால் இன்றளவும் அது குறித்து எந்த ஆய்வும் செயல்படவில்லை. அதனால் தான் இந்த எஸ்.டி.எஃப் என்ற கஷ்மீர் சிறப்புப் படையின் ஏற்பாட்டில் தான் நாடாளுமன்ற தாக்குதல் நடந்திருக்கின்றது என்கின்றது நாடாளுமன்ற தாக்குதலில் ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம் இவை வைக்கும் முறையீடு.
The Right thing to-do would be to a order a retrail Page XXI
     அப்சலின் வழக்கை முற்றாக விருப்பு வெறுப்பற்ற ஒரு மறுஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். அதேபோல் நாடாளுமன்ற தாக்குதல் பற்றியும் குழு புலனாய்விற்கு உத்தரவிட வேண்டும்.
     நாடாளுமன்ற தாக்குதலில் உளவுத்துறையின் பங்கு, பாதுகாப்புப் படையினரின் பங்கு, கஷ்மீரில் இயங்கும் எஸ்.டி.எஃப் என்ற கிளர்ச்சிகளுக்கு எதிரான படைகளின் பங்கு, இவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சாட்சியங்கள் வாக்கு மூலங்கள் இவற்றில் பல அத்துமீறல்கள் நடந்திருக்கின்றன என்பது ஏற்கனவே நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் எந்த அரசும் இதைச் செய்யும் என எதிர்ப்பார்ப்பதற்கில்லை - அருந்ததிராய் Dec 13 A Reader Page XXI
“Mohamed Afzal was a pawn in the design of the state” Page 13
     முஹம்மத் அப்சல் அரசின் ஏற்பாட்டில் ஒரு பொம்மை - நிர்மலாங்ஹு முகர்ஜி.
     அதாவது நிர்மலாங்ஹு முகர்ஜி அப்பட்டமாக அறிவிக்கின்றார் நாடாளுமன்ற தாக்குதலை (ஏற்பாடு செய்த) அரசின் கைகளில் இருந்த ஒரு பொம்மை தான் அஃப்சல். பக்கம் 13 A Reader
     ஆனால் யாரும் கொலை செய்யப்படவும் இல்லை. தாக்குதல் நடந்த இடத்திற்கு அவன் செல்லவுமில்லை. இது இந்திய நாடாளுமன்ற தாக்குதல் என்பதால் இதன் எல்லாப் பகுதிகளும் எல்லோருடைய பங்கும் சரியாக சீராக திறந்த மனதுடன் ஆராயப்பட வேண்டும் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் கழகம்.
எல்லா சாட்சியங்களும் தோற்றுப் போனதால் தான் மக்களின் மனங்களை திருப்திப்படுத்திட ஒரு தூக்கு ஒரு உயிர் பலி என தீர்ப்பளித்திருக்கின்றது உச்ச நீதி மன்றம் நரபலி நிலையிலிருந்து நம் நாடு இன்னும் மீளவில்லை.   

மொத்த நாடாளுமன்ற தாக்குதலும் ஒரு மகத்தான உள்ளிருப்பு வேலை

     கசாப் விவகாரம் அப்சல் குரு விவகாரம் இந்த இரண்டும் நமக்கு பல படிப்பினைகளைத் தந்திடும்.
     1. இங்கே உளவுத்துறை, கஷ்மீரின் சிறப்பு பாதுகாப்பு படை இவற்றில் ஒரு முஸ்லிமை பிரதிநிதியாக காட்டுவது, அதாவது மொத்த தீவிரவாத தாக்குதலுக்கும் ஒரு முஸ்லிமையே பிரதிநிதியாக்குவது, இதனால் தொடர்ந்து முஸ்லீம்களை தீவிரவாதிகள்எந்த மனசாட்சியுமில்லாமல் தாக்குதலை தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருப்பது, இப்படி முஸ்லிம்களை முற்றாக வெறுக்கின்ற ஒரு தலைமுறையை வளர்த்தெடுத்து விட்டார்கள். இது இவர்கள் இந்த நாட்டுக்கு செய்த மாபெரும் துரோகம்.
     2. இப்படி மொத்த தாக்குதலுக்கும் ஒரு முஸ்லிமை பிரதிநிதித்துவப்படுத்தி அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கியவுடன் உள்ளிருப்பு வேலைகளைச் செய்த உளவுத்துறையின் கறுப்பாடுகளும் பாதுகாக்கப்பட்டு விடுகின்றனர். இவர்களால் அபிநவ் பாரத் போன்ற இவர்களின் எடுபிடிகளும் உண்மையான குற்றவாளிகளும் பாதுகாக்கப் படுகின்றார்கள். அவர்கள் எப்போதும் பிடிபடாமல் குண்டு வைப்புகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் தொடருகின்றார்கள். இதனால் தான் இந்தியாவில் குண்டுவடிப்புகள் தொய்வின்றி நடக்கின்றன.
     3. அப்சல் குரு கசாப் இவர்கள் இருவருக்கும் வழங்கிய தீர்ப்பில் நமது உச்ச நீதி மன்றம் தரப்பட்ட சாட்சியங்களையும் ஆவணங்களையும் ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கியதை விட நாட்டு மக்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காகவே இவர்களை தூக்கில் போட வேண்டும் என கூறியது.  “The attack on the indian parliment resulted in heavy casualities has shaken the entire nation on the collective conscience of the society will only be satisfied if capital punishment awarded to the offendent”
     இதே சொற்களைத் தான் கசாப்-இன் விவகாரத்திலும் உச்சநீதிமன்றம் கூறியது இப்படி. The case has shocked the collective conscience of the indian people as few others cases have Page 350 of the supreme court judgement on 26/11 delivered on....
     அதாவது இந்த வழக்கு இந்திய மக்களின் ஒட்டுமொத்தமான மனசாட்சியையும் உலுக்கிற்று வேறு சில வழக்குகளைப்போல். பக்கம் 350 மும்பை தாக்குதலில் உச்ச நீதி மன்ற தீர்ப்பிலிருந்து.
     இந்திய அரசியல் நிர்ணய சட்டத்திற்கு அப்பால் நின்று ஒரு புதுக்கொள்கையை உச்ச நீதிமன்றம் வகுக்கின்றது. அதுதான் நாட்டுமக்களின் ஒட்டுமொத்தமான மனசாட்சி என்ற கொள்கை.
     மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் வேறு சில வழக்குகளைப்போல் என்ற சொற்களையும் பயன்படுத்தியுள்ளது. இந்தசொற்கள் வரும் நாட்களில் பல வழக்குகளில் அப்பாவிகளைத் தூக்கிலிடவும் அபிநவ் பாரத் போன்ற அமைப்புகளின் தளகர்த்தர்களை காப்பாற்றவும் பயன்படும்.
     காலப்போக்கில் உயர் நீதிமன்றங்களும் மாவட்ட முதன்மை நீதிபதிகளும் இந்த உச்ச நீதிமன்ற சொற்களை பயன்படுத்துவார்கள். அப்பாவிகளை தண்டிப்பார்கள்.
     காலப்போக்கில் பல உச்சநீதிமன்ற தீர்ப்புகளைப்போல் ஒரு சட்டவிதி என்றாகி விடும்.
     இதனை இப்போதே நாம் எதிர்த்தாக வேண்டும். இதில் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சி என்ற சொற்களுக்கு என்ன இலக்கணம்? வரையறை? மீடியாக்களில் அடிக்கடி குற்றவாளி எனக்காட்டப்படுவதே போதுமா? உச்ச நீதி மன்றம் தான் சொல்லும் வேறு சில வழக்குகளைப்போல் என்பதில் என்னென்ன வழக்குகள் வருகின்றன? அந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் எப்படி ஒட்டுமொத்த மக்களின் மனசாட்சியை அறிந்தது? இதுவும் இனி தெளிவுக்கு வந்தாக வேண்டும். இங்கே இன்னொரு கேள்வியும் எழுகின்றது. நாட்டின் மனசாட்சி உச்ச நீதிமன்றத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட விஷயமா? அப்பாவிகளை தூக்கிலே தொங்கவிடும் போது உலுங்காத கலங்காத மனசாட்சியும் ஒரு மனசாட்சியா? இந்திய குடிமக்களின் மனசாட்சி உச்சநீதிமன்றம் அப்பாவிகளைத் தூக்கிலே தொங்கவிடும் போதெல்லாம் உலுங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்திட வேண்டும்.
     4. அப்சல் குரு விவகாரத்தில் காவல்துறை நீதிமன்றங்களில் அவனுடைய குற்றங்களை நிரூபிக்க வேண்டும் என்பதை விட மக்கள் மன்றத்தில் அவனை ஒரு குற்றவாளியா காட்டிட வேண்டும்ட என்பதற்காக ஒரு பெரும் ஏற்பாட்டைச் செய்தது அஃது அப்சல் குருவை பிடித்து வந்து தொலைக்காட்சி முன் அமர வைத்து நான் தான் குற்றவாளி எனச் சொல்லிடச் செய்தார்கள்
     ஆனால் அவன் உண்மையைச் சொல்லிட தலைப்பட்டபோது காட்சியை துண்டித்துவிட்டார்கள்
     டிசம்பர் 13 2001ல் நாடாளுமன்றத் தாக்கிடும் முயற்சி நடைபெற்றது குற்றம் சுமத்தப்பட்ட அப்சல் குருவை டிசம்பர் 20 2001ல் தொலைக்காட்சிகள் பேட்டி எடுக்கின்றன இந்த பேட்டி எங்குவைத்து எடுக்கின்றன என்பது இன்னும் விநோதமானது
     இதில் நாம் பெறும் பாடம் என்னவெனில் முஸ்லிம்களை தீவிரவாதப் பரம்பரையினர் என மக்களை சகோதர சமுதாயத்தவர்களை நம்ப வைக்கும் ஒரு பெரும் முயற்சி இடைவிடாமல் நடந்து கொண்டிருக்கிறது
     ஒரு முறை இதனை செய்து சாதித்து விட்டால் அதன் பின் முஸ்லிம்களை எப்படி எப்போது வேண்டுமானாலும் கூட்டாகக் கொலை செய்யலாம் என்ற அனுமதி லைசென்ஸ் எல்லோருக்கும் கிடைத்துவிடுகின்றது
     இப்படி ஒரு முயற்சி இடைவிடாமல் நாட்டிலே நடந்து கொண்டிருக்கின்றது என்பதை அண்மையில் தஞ்சை பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் ஒன்று தெள்ள தெளிவாக விளக்குகின்றது இப்படி: நவம்பர் 20 2012 இல் நமது உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் அப்சல் ஐயும் இன்னும் வரிசையில் இருக்கும் பலரையும் தூக்கிலிட முடியாது என்கின்றது தி ஹிந்து பத்திரிகை அத்தோடு ஓய்வு பெற்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் 13 வழக்குகளில் தாங்கள் வழங்கிய தூக்குத்தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்றிட வேண்டும் என குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதம் நீதிமன்றங்கள் செய்து கொண்டிருந்த கொலைகளில் பெரும் திருப்பம்

நாடாளுமன்ற தாக்குதலில் நமது பாதுகாப்பு முகவாண்மைகளின் உள்ளிருப்பு வேலை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் பிரிதொரு அத்தாட்சி.

ஹம்சா என்றொருவரை நமது நாடாளுமன்ற வளாகத்தில் வைத்துக் கொலை செய்தார்கள். இந்த ஹம்சா தீவிரவாதிகள் வந்த அம்பாசிடர் காரில் நாடாளுமன்றத் திற்குள் வந்தவர்களில் ஒருவன் எனவும் காட்டப்பட்டது
ஆனால் இவன் 2000ஆம் ஆண்டு முதலே எஸ்டிஎஃப் என்ற கஷ்மீரின் சிறப்புபடையின் பாதுகாப்பில் இருப்பவன். இவனை மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்ட காவல்துறையினர் 2000ஆம் ஆண்டில் கைது செய்து ஜம்மு கஷ்மீர் காவல் துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். 2000ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப் பட்டவர் எப்படி 2001 இல் நாடாளுமன்றத்தைத் தாக்க வந்தான்.
இது நாடாளுமன்ற தாக்குதல் முயற்சியில் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் படையின் கைகள் இருக்கின்றன என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றது 




செவ்வாய், 15 ஜனவரி, 2013

பாபரி மஸ்ஜித்-இன் வழக்கும் மத்தியப்புலனாய்வுத்துறையின் மெத்தனப்போக்கும்


பாபரி மஸ்ஜித்-இன் வழக்கும்  மத்தியப் புலனாய்வுத்துறையின் மெத்தனப் போக்கும்

பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டவுடன் அதனை உடனேயே கட்டித்தருவோம் என வாக்களித்தார் நாட்டு மக்களிடம் நரசிம்மராவ் என்ற அப்போதைய பிரதமர். இவர் இந்து தீவிரவாத அமைப்புகளின் பிறப்பிடமாகிய சித்பவன் என்னுமிடத்தை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அந்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டார். அடுத்தாற்போல் அபார நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகம் பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின்னால் ஒரு சதி இருந்ததா? என்பதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் அதற்காக மிகவும் ஆழமான விசாரணை ஒன்றை நடத்திட போவதாகவும் பிரகடனப் படுத்தினார்.
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட நான்காவது நாள் ஒரு விசாரணைக்கு (16.12.1992 அன்று) உத்தரவிட்டார். ஒரு விசாரணை கமிஷனையும் நியமித்தார். 
இந்த விசாரணை கமிஷனின் தலைவராக லிபர்ஹான் என்ற உயர்நீதிமன்ற (ஓய்வு) நீதிபதியை நியமித்தார். 
இவர் கிடைத்த இந்தப் பதவியை 17 ஆண்டுகள் பயன்படுத்தி பலகோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றார். முடிவில் சங்பரிவாரங் களிடம் வாங்கிட வேண்டியதை வாங்கிவிட்டு “Conspiracy” என்ற சதி என்று பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குப் பின் இல்லை என்று கூறினார். ஆனால் முஸ்லிம்கள் சதி இருக்கிறது என்றும் அதில் அத்வானி உள்ளிட்டோர் உண்டு என்றும் வழக்குத் தொடர்ந்தார்கள். பின்னர் இந்த வழக்குகள் சிபிஐ என்ற மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சதியைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னாள் துணை பிரதமர் எல்.கே அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, விஷ்வ ஹிந்து பரீஷத் அமைப்பைச் சார்ந்த பிரவின் தொகாடியா, சிவசேனை அமைப்பைச் சார்ந்த பால்தாக்கரே இன்னும் பலர். இதை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றம் அப்படியொரு சதி இருக்கவில்லை எனக்கூறி சதி குறித்த குற்றச்சாட்டுகளை விட்டுவிட வேண்டும் எனக்கூறியது.
முஸ்லிம்கள் தொடர்ந்து தந்த நெருக்கடிகளால் சி.பி.ஐ இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் கொண்டு சென்றது. உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை இப்படிக் கூறிற்று:
“அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபரி மஸ்ஜித் இடிப்பு சதி குற்றச்சாட்டை விட்டுவிட இயலாது. அதேபோல் இந்த வழக்கை நாம் ஏனைய வழக்குகளிலிருந்து பிரித்திடவும் இயலாது.”
ஏனைய வழக்குகள்: (ஏனைய வழக்குகள் என்பது, 1992இல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் இரண்டு வழக்குகள் பதியப்பட்டன. ஒன்று 197/1992 பிறிதொன்று 198/1992. வழக்கு எண் 198/1992 என்பது பாபரி மஸ்ஜித் இடிப்பில் நேரடியாக தங்களை ஈடுபடுத்திய கரசேவகர்கள். மற்றொன்று சற்று தொலைவில் போடப்பட்ட மேடையில் நின்று உற்சாக உரைகளை நிகழ்த்தி பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு உறுதுணையாக நின்றவர்கள். இவர்கள் வழக்கு எண் 197/1992. இப்போது சிபிஐ சொல்வது இரண்டு வழக்குகளும் ஒன்று தான். எல்லோரும் இடித்தவர்களும் இடிக்க செய்தவர்களும் ஒன்று போலவே விசாரிக்கப்படவேண்டும் என்பதே) இது தான் நமது சட்டங்கள் சொல்லுபவையும்.
சி.பி.ஐ என்ற மத்திய புலனாய்வுத்துறை மேலும் கூறியது, வழக்கு எண் 197/1992 என்பதும் வழக்கு எண் 198/1992 என்பதும் வேறு வேறு என்று கூறுவது சரியல்ல. மத்திய புலனாய்வுத்துறை மேற்கொண்ட ஆய்வுகள் பாபரி மஸ்ஜித்-ஐ இடிக்க நடந்த சதி ஒரே பெரிய சதி, இடித்ததும் அந்த பெரிய சதியின் பிரிக்க முடியாத ஒரு பகுதிதான். இது குறித்து நாங்கள் 49 வழக்குகளை ஒரே வழக்காக பதிவு செய்திருக்கின்றோம். இதில் பாபரி மஸ்ஜித் இடிக்க வேண்டும் என்ற பெரிய சதியை நிறைவேற்றிட ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கினைக்குறிப்பிட்டுள்ளோம்.
இந்த வழக்குகள் பாபரி மஸ்ஜித் இடிப்பில் ஒவ்வொருவரும் ஆற்றிய பங்கினைத் தனித்தனியாகச் சாட்சி யங்களுடன் விரித்துரைக்கின்றன. வழக்கு எண் 198/1992 இல் பெயர் குறிப்பிடப் பட்டவர்கள் அங்கே போடப்பட்டிருந்த மேடையில் நின்றுக் கொண்டு குழுமி இருந்த கூட்டத்தை சட்டத்திற்குப் புறம்பாக வன்முறைகளில் ஈடுபடுத்தினார்கள். இதுதான் (பாபரி மஸ்ஜித்) அந்தக் கட்டடம், இடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதனால் இவர்கள் தாம் முக்கிய குற்றவாளிகள்.
பள்ளிவாசலின் டூம் வீழ்ந்தவுடன் இவர்கள் தங்களுடைய கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதோடு இனிப்புகளையும் வழங்கினார்கள். ஒருவரை ஒருவர் ஆறத் தழுவி அல்லோல கல்லோலப்பட்டார்கள். இவர்கள் மேடையில் நின்றுக் கொண்டு பேசிய பேச்சுகள் மத ஒற்றுமையைச் சீர்குலைத்தது. தேசிய ஒருமைப்பாட்டையும் பாதித்தது. அந்தக் கட்டடத்தை இடித்தது. அத்தோடு ஊடகத்தைச் சார்ந்தவர்களையும் தாக்கினார்கள். இத்தனையும் ஒரே குற்றந்தான். அவற்றை வெவ்வேறாகப் பிரித்திட இயலாது. இப்படி உச்ச நீதிமன்றத்தில் மத்தியப் புலனாய்வுத்துறை கூறியுள்ளது.
சிபிஐ -இன் தகிடுதத்தங்கள்: பாபரி மஸ்ஜித் இடிப்பில் சதி என்றொன்று இல்லை என்று அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துத் தான் இந்த மேல்முறையீட்டை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதுது. இந்த வழக்கு டிசம்பர் 6 2012 அன்று நமது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய புலனாய்வுத்துறை சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகிட வேண்டிய வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கே வந்திடவில்லை. அவர் சார்பில் ஒருவர் நீதிபதியிடம் ஆறு வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். நீதிபதிகளே மத்திய புலனாய்வுத்துறை இந்த வழக்கில் மிகவும் மெத்தனமாக இருப்பதாகக் கூறியுள்ளது. (செய்தி ஆதாரம் தி ஹிந்து 7.12.2012)
அதே போல் மத்திய புலனாய்வுத்துறை தன்னுடைய மேல் முறையீட்டில் இடிக்கப்பட்டது வெறும் கட்டடம் தான் என்பதாகவே  குறிப்பிடுகின்றது.
கி.பி.1528இல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கதொரு மஸ்ஜித் என்பது தான் பாபரி மஸ்ஜித்-இன் பெருமை. இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்று. ஆனால் இங்கே ஒரு வெற்றுக் கட்டடம் தான் என்பதாகவே காட்டப்படுகின்றது. இப்படித்தான் சிபிஐ இன் மனுவிலும் கூறப்பட்டுள்ளது.
இது மொத்த வழக்கும் பெற வேண்டிய மதிப்பையும் முக்கியத் துவத்தையும் குறைத்துக் காட்டுவதாகும்.
20 ஆண்டுகளாகியும் மத்திய புலனாய்வுத்துறைக்கு இந்த வழக்கு முக்கிய வழக்காகத் தெரிந்திடவில்லை. இங்கே வழக்கை நடத்துவதைப் போல் ஒரு பாசாங்குக் காட்டினால் போதும் என்ற முடிவுக்கு மத்திய புலனாய்வுத்துறை ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகின்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகளே இந்த மெத்தனப்போக்கு குறித்து தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்
பால்தாக்கரே: இவர் பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பெற்ற முக்கிய குற்றவாளிகளுள் ஒருவர். இவர் நீதிமன்றங்களை எட்டிப்பார்க்காமலேயே இறந்து போய் விட்டார். இப்படி குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் தாமாகவே இறந்து போகும் வரைக்கும் வழக்குத் தொடரும். இதுவே இந்தியாவில் சிறுபான்மையினருக்கு கிடைக்கும் நீதி. 

பாபரி மஸ்ஜித் வழக்கின் இப்போதைய நிலை:வழக்கறிஞர் ஜாஃபர் ஜீலானியுடன் ஒரு பேட்டி:

வழக்குகளின் இப்போதைய நிலை:
வழக்குக் குறித்த ஆவணங்களை அலஹாபாத் உயர்நீதி மன்றம் இன்னும் உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பவில்லை உச்ச நீதிமன்றம் அவற்றை கேட்கவில்லையா?
பலமுறை உச்ச நீதிமன்றம் கேட்டுவிட்டது. ஆனால் அலஹாபாத் நீதிமன்றம் அனுப்பவில்லை. காரணம் அவர்கள் இன்னும் சில அறிக்கைகள் தயாராக வேண்டியுள்ளது எனக் கூறுகின்றார்கள். எதெல்லாம் தயாராக இருக்கின்றனவோ அவற்றை அனுப்பி இருக்கலாம். ஆனால் அவற்றையும் அனுப்பவில்லை. நாங்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டிருக்கின்றோம்.
அத்வானி முதலானோர் மீதான சதி வழக்கு அது நடந்து கொண்டிருக்கின்றது. 24 12 2012 இல் வந்தது மீண்டும் 5 1 2013 ல் வரும்.

வெள்ளை அறிக்கை


வெள்ளை அறிக்கை 

திருவாளர் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த நாட்களில் தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப் போகின்றேன் என மிரட்டினார்.
எத்துணை விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கப் போகின்றீர்களோ அத்துணை நன்மைகள் விளையும் என்றார்கள் முஸ்லிம்கள். ஆனால் கடைசி வரைக்கும் மிரட்டலில் காலத்தை ஓட்டிவிட்டார்.
இந்தியன் முஜாஹித்தீன் என்றொரு அமைப்பு இருப்பதாக செய்திகள் வந்த போது முஸ்லிம்கள் அதை மறுத்தார்கள். ஆனால் உளவுத்துறையும் காவல் துறையினரும் எடுத்ததற்கெல்லாம் இப்படி ஒரு அமைப்பையே காரணம் காட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் மாநாடு போட்டு அதை எதிர்த்தார்கள்.
அந்த மாநாட்டில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார்கள். அதில் இந்தியன் முஜாஹிதின் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரினார்கள்.
பார்க்க வைகறை வெளிச்சம்
ஆனால் அந்த வெள்ளை அறிக்கை வெளியே வரவே இல்லை. ஆதலால் முஸ்லிம்களே ஒரு வெள்ளை அறிக்கையைத் தயார் செய்கின்றார்கள்
அது குறித்து தகவல்களை கீழே இடம் பெறச் செய்கின்றோம்.
வெள்ளை அறிக்கை
முஸ்லிம்கள பீதியால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். காரணம் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் தீவிரவாதி என முத்திரைக் குத்தப்படலாம். அந்த இளைஞர்களின் வாழ்க்கையும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையும் ஒட்டு மொத்தமாக நசுக்கப்படலாம்.
தீவிரவாதிகள் என்று பொய் வழக்குகளில் முஸ்லிம்களைச் சிக்க வைப்பவர்கள் அரசு இயந்திரம், மத்திய உளவுத்துறை ஐபி, காவல்துறை இவற்றுள் புகுந்துள்ள காவி சிந்தனையில் ஊறியக் கறுப்பாடுகள் தாம்.
இந்தக் கொடுமையை எதிர்த்து நாம் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றோம்.
ஆனாலும் இந்தக் கருப்பாடுகள் தங்கள் கைவரிசையைத் தினம் தினம் காட்டி வருகின்றார்கள். இதனால் All India Muslim Mushawarath அகில இந்திய முஸ்லிம் முஷாவரா என்ற அமைப்பு ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்து வருகின்றது.
சுமார் 600 முதல் 700 பக்கங்கள் வரை உள்ள ஒரு பெரிய அறிக்கையாக அஃது அமையும் (இன்ஷாஅல்லாஹ்)
இதில் TADA தடா சட்டம், பொடா PODA என்ற சட்ட விரோதமாக குழுமுதல் தடை சட்டம் இடம் பெறும். இவற்றில் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் பட்டார்கள் என்பவையும் இடம் பெறும். அதேபோல் எதிர் தாக்குதல் (என்கவுன்டர்) என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்வது பற்றிய ஆய்வும் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.
இன்னும் ஒரு படி மேலே போய் மத்திய உளவுத்துறை, காவல்துறை, ஊடகங்களின் மாச்சர்யம், சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், இந்தியன் முஜாஹிதீன் என்ற காட்டுக்கதைகள் இவை பற்றிய நேர்மையான ஆய்வு ஒன்றும் இடம் பெறும் இன்ஷாஅல்லாஹ்.
அதேபோல் ஆஸம் கார்க் பட்கல், மாலேகான் ,டார்பங்கா போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளும் கணக்கில் கொண்டுவரப்படும். இதனை டெல்லியிலிருந்து வெளிவரும் மில்லிகெஜட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்கான் அவர்கள்தாம் செய்கின்றார்கள். டாக்டர் ஜபருல் இஸ்லாம்கான் தான் மஜ்லிசே முஷாவரத் என்ற அமைப்பின் தலைவருமாவார். இந்த அமைப்பின் சார்பில் தான் இஃது வெளியிடப்படவுள்ளது.
இதற்கு உதவியாக வாசகர்கள் தங்கள் கைவசமுள்ள தகவல்களை அனுப்பிக் கொடுக்கலாம்.
இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட ரூபாய் 25 லட்சம் ஆகும். இதற்காக நன்கொடைகள் வழங்கிட விரும்புவோர் இதர விபரங்களுக்குத் தொடர்புகொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
All India Muslim Majlis-E-Mushawarath, D.250 Abul Fazal Enclave, Part 1, Jamia Nagar, New Delhi- 110025.

Announcement by : Milligazette : 16-30-09-2012

அதிர்ச்சியும் அதிசயமும் நிறைந்த திருக்குரான் நூலகம்


அதிர்ச்சியும் அதிசயமும் நிறைந்த திருக்குரான் நூலகம் 


இஃது டெஹ்ரடூன் இந்தியா எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கின்றது. இந்த நூலகத்தின் பெயர் தாஸ்மியா நூல்நிலையம்.Tasmia Library.
இதில் பல அதிசயமான திருக்குர்ஆன் பிரதிகள் இருக்கின்றன.
1907 ஆம் ஆண்டில் 7 வண்ணங்களில் எழுத்துக்களைக் கொண்ட கையெழுத்துப் பிரதி திருக்குர்ஆன் ஒன்று வெளியிடப்பட்டது. 7 வண்ணங்களில் வெளிவந்த முதல் திருக்குர்ஆன் பிரதி இதுதான்.
இஃது வெளியிடப்பட்ட இடம் லூதியானா. இதனை ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர் அமீர் அப்துல்லாஹ் கான்பகதூர் அவர்கள் தாம் வெளியிட்டார்கள்.
இங்கே உலோகத்தாலான ஓர் உருண்டை இருக்கின்றது. அதில் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இந்த உலக உருண்டை மன்னர் அப்துல்லாஹ் கான் பகதூர் அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானதாக இருந்தது. காரணம் அவரது ஆட்சியின் எல்லை முகலாய மன்னர்களின் ஆட்சியின் எல்லையை விட விரிந்து பரந்து இருந்தது.
இங்கே ஒரு திருக்குர்ஆன் பிரதி மிகவும் சின்னதாக இருக்கின்றது. சட்டைப் பைக்குள் வைத்துக் கொள்ளலாம்.
இன்னொரு பிரதி ஒரு கரும்பலகை அளவுக்கு அகல நீளங்களை உடைய பக்கங்களை கொண்டது.
ஒரு திருக்குர்ஆன் பிரதியில் ஒரு காகிதத்தின் எடை 2 கிராம் மற்றொரு பிரதியில் ஒரு காகித்தின் எடை 4 கிலோ கிராம். அது துத்தநாகத்தால் ஆன திருக்குர்ஆன் பிரதி. துத்தநாகத தட்டில் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டு இருக்கும் இந்த திருக்குர்ஆன் பிரதியின் மொத்த எடை 21.2 குவிண்டால்.
மிகவும் ஆச்சர்யப்படத்தக்க திருக்குர்ஆன் பிரதி ஒன்று இந்த நூல் நிலையத்தில் இருக்கிறது. அதில் நறுமணம் எப்பொழுதும் கமழ்ந்து கொண்டே இருக்கும். இதன் எவ்வொரு பக்கத்திலிருந்தும் இந்த நறுமணம் வருகின்றது.
இதில் இன்னும் அனைவரின் புருவத்தையும் அகலவிரியச் செய்யும் விஷயம் என்னவென்றால் இந்தத் திருக்குர்ஆன் பிரதி கடந்த 64 அறுபத்து நான்கு ஆண்டுகளாக அங்கே இருக்கின்றது. எனினும் அதிலிருந்து வரும் நறுமனம் சற்றும் குறைந்திடவில்லை.
அதேபோல் திருக்குர்ஆன் வசனங்கள் தென்னைமர ஓலைகள், மரம், உலோகங்கள், துணிகள், ஆட்டுத்தோல்கள், ஒட்டகைத் தோல், மான்தோல், குதிரைத்தோல், மீன் தோல் இவற்றின் மேலும் எழுதப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பல மொழிகளில் வெளிவந்த திருக்குர்ஆன் மொழியாக்கங்கள் அங்கே உள்ளன. 
உலக மகா அறிஞர்கள் எழுதிய திருக்குர்ஆன் விளக்க உரைகளும் அங்கே அணிகலன்கலாய் அமர்ந்தள்ளன. ஒரு திருக்குர்ஆன் பிரதி இருக்கின்றது அதைத்தொட்டுப்பார்வையற்றோரும் ஓதலாம். (Brailli Print)
விதம் விதமான முசல்லாக்கள் இன்னொரு பகுதியை அலங்கரிக்கின்றன. பல வகை தொப்பிகள் பல பொருள்களில் தோல்களில் கோர்க்கப்பட்ட தொப்பிகள் இவையும் இங்கே இடம் பெறுகின்றன.
சென்ட் இதர வாசனைப் பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் இடம் பெறும் பொருட்கள் spices  வேர்கள் மரங்களின் பகுதிகள் இன்னும் இது போல் திருக்குர்ஆனில் இடம் பெறும் பொருட்கள் இவையெல்லாம் ஒரு மரப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பெட்டி Peepal Tree Wooden Box என்று செய்யப்பட்டது. இந்தப் பெட்டியைச் சுற்றியும் திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டிருக்கும்.
இவையெல்லாம் நீண்ட நெடும் நாள்களாக மக்கள் பார்வைக்கு வராமலிருந்தன. ஆனால் 2005 ஆம் ஆண்டு முதல் திருக்குர்ஆன் மஜீத் எழுத்துகலை வரைவுகளில் Quran Majeed in the light of the Art of Calligraphy என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி நடத்தப்படுகின்றது.
இந்த கண்காட்சி ரமழான் மாதத்தில் நடத்தப்படுகின்றது. இந்த வருடம் இந்த கண்காட்சியை உத்திரகான்ட் கவர்னர் அஜீஸ் குறைஷி தொடங்கி வைதத்தார்.

அளவை மிஞ்சிய அநீதி மதானியின் பார்வையைப் பறித்து விட்டார்கள்...

அளவை மிஞ்சிய அநீதி மதானியின் பார்வையைப் பறித்து விட்டார்கள்...

பெங்களூர் சிறையில் அடைப்பட்டு கிடக்கின்றார் நாசர் மதானி அவர்கள். K.P..சசி திரைப்பட தயாரிப்பாளர் அரசியல் விற்பன்னர். அண்மையில் அவர் எழுதி, பல பத்திரிக்கைளிலும் வெளிவந்த செய்தி அறிக்கை ஒன்று அனைவரின் கண்களையும் கலக்கிற்று. அதனை இங்கே தருகின்றோம்.
நான் அப்துல் நாசர் மதானி அவர்களை பெங்களூர் சிறையில் சந்தித்தேன். அவர் பெங்களூர் குண்டு வெடிப்புஎன்று அழைக்கப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய கண்களின் அமைதி என் இதயத்தில் பேரிடியாய் வீழ்ந்தது. அவருடைய கண்கள் பார்வையை வேகமாக இழந்து வருகின்றன. காரணம் போதிய அளவு மருத்துவம் அவருக்குக் கிடைக்கவில்லை
நான் பல முறை அவரை சந்தித்திருக்கின்றேன். அவரது கண்களின் கதை எனக்குத்தெரியும்
என்னைப் பொறுத்தவரை அவருடைய கண்கள் இஸ்லாமிய அபாயம் என்பதற்கும் மத சார்பின்மை கேரளாவில் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றது என்பதற்கும் அத்தாட்சிகள்.
என்னால் அவருக்குச் சொல்ல முடிந்த ஆறுதல் எல்லாம் என்னைப் போன்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யமுடியும்? இந்த கேள்விக்கு நான் மட்டுந்தான் இந்த கதிக்கு ஆளாகி இருக்கின்றேன் என எண்ணாதீர்கள். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பெற்று சிறையில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றார்கள். சில நேரங்களில் எனக்கு சிதறிய சிறிய ஆதரவுகள் அவ்வப்போது கிடைத்து விடுகின்றது.
 இதற்கோர் எடுத்துக்காட்டையும் எங்கள் கண்களின் முன்னாலேயே காட்டினார்கள். ஆமாம் அவருடைய தள்ளும் நாற்காலியைத் தள்ளிச் சென்று உதவிசெய்யும் ஒருவர் மூலம் ஜக்கரிய்யா என்பவரை எங்களுக்குக் காண்பித்தார். இந்த ஜக்கரிய்யா 21 ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றான். இந்த ஜக்கரிய்யாவின் கதை இந்தியாவின் நீதித்துறையின் மிகவும் கேவலமான அத்தியாயம். அவனுக்கு ஏன் அவன் சிறையில் இருக்கின்றான் என்பது தெரியாது. சிறையில் தொடர்ந்து நடக்கும் கொடுமைகளால் அவன் உடலாலும் உள்ளத்தாலும் சிதைந்து போனான்.
அதேபோல் மதானியின் தள்ளும் நாற்காலியைத் தள்ளிச் செல்பவன், ஏற்கனவே நடமாடும் பிணமாக ஆகிப் போனான். அவனுக்கும் போதிய மருந்து கிடைக்காததே காரணம் என நான் கேள்விப்பட்டேன். தொடர்ந்து கேரளாவிலுள்ளவர்கள் ஒரு வேளை அவருடைய மரணத்திற்காகக் காத்திருக்கின்றார் களோ என எண்ணிடத் தோன்றுகின்றது. அவர் இறந்தவுடன் அவர்கள் அவரை ஒரு பெரும் தியாகியாகக் காட்டி தங்கள் அரசியல் ஆட்டத்தை ஆடிடத் தொடங்கி விடுவார்கள்.
கோவை சிறையில் மதானியை 9 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து சிறையில் வைத்த பின்பே அப்பாவி எனக் கண்டு பிடித்தார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகள் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் ஊடகங்கள் இவைதாம் மதானி மீது கற்பனை வழக்குகளைப் புனைவதற்குக் காரணம்.
நாமெல்லாம் ஜாண்லிலோன் என்பவரின் பாட்டு ஒன்றை மீண்டும் மீண்டும் பாடுவோம். அதிசயதக்க அளவில் மதானியும் நான் மட்டுமல்ல என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றார். அன்பார்ந்த வாசகர்களே! நம்புங்கள் நாசர் மதானியின் மேல் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் பொய். புனையப்பட்டவை.
ஆனால் அவர் சிறை, சித்திரவதை இவற்றாலேயே தான் இப்போது கண்களையும் சில காலம் கழித்து தன் உயிரையும் இழக்கப்போகிறார்.
கர்நாடகாவில் சிறைகளில் பல முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள். ஆனால் இன்றளவும் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள்? ஏன் சிறையிலடைக் கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கும் சொல்லப்படவில்லை. உலகுக்கும் தெரியாது. ஏன் அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகளுக்கும் தெரியாது. காவல் துறையினர் கொண்டு வந்தார்கள். இவர் மீது சந்தேகம் இருக்கின்றது என்றார்கள். நீதிபதிகள் சிறையிலடைத்தார்கள்.
சங்க பரிவாரத்தவர்கள் அவரது கால்களை குண்டுவீசி கொய்தார்கள்.அரசு பரிவாரம் அவரது கண்களைப் பறித்தது காலப்போக்கில் உயிரையும் பறிப்பார்கள். காரணம் அவர் குற்றமற்றவர். ஆனால் முஸ்லிம்.
மதானிகள் ஜக்கரியாக்கள் இவர்களுக்கு வாழ்க்கை மரணத்திற்குப் பின்வரும் மறுமையில் தாம் வாழ்க்கை. அவர்களும் பூமிக்கு மேல் இருப்பதை விட பூமிக்கு கீழிருப்பதையே நாடுகின்றார்கள்.
அல்லாஹ் பிரகடனப் படுத்துகின்றான் உங்களையுடைய வானத்தின் மீது சத்தியமாக மேலும் சாட்சிகள் மீதும் சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக நெருப்புக்குண்டங்களை உடையவர்கள் கொல்லப்பட்டனர்.
விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக்குண்டம் அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது அல்லாஹ்வை நம்பி நின்ற மூமின்களை அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை செய்தார்கள். அதற்கு அவர்களே சாட்சியாக இருந்தார்கள்.
அனைத்தையும் மிகைத்தவனும் புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கிடவில்லை.
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
நிச்சயமாக எவர்கள் முஃமினான ஆண்களையும் முஃமினான பெண்களையும் துன்புறுத்திய பின்னர் தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு (அல்குர்ஆன் 85:1-10)
அல்லாஹ்விடமிருந்தே வந்தோம் அவனிடமே திரும்புவோம். நாசர் மதானி அவர்களுக்கு இதைவிட பெரிய நம்பிக்கையும் ஆறுதலும் வேறுஇல்லை!
                -எம்.ஜி.எம்

அமெரிக்க முஸ்லிம்களின் இன்னொரு சாதனை


அமெரிக்க முஸ்லிம்களின் இன்னொரு சாதனை ....

உலகை உலுக்கிய நிகழ்வு 2001இல் செப்டம்பர் 11 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்து தரைமட்டமாக்கிய நிகழ்வு. 9/11 என இதனை அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள்.
இதற்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் பழிசுமத்தப்பட்டார்கள் உலகெங்கும். ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் சற்றும் தலை தாழ்ந்திடவில்லை.
காரணம் அவர்கள் நன்றாக அறிவார்கள். அஃது, யூத அமெரிக்க உளவுத்துறைகளின் உள்ளிருப்பு வேலைகள்தாம் என்பதை.
அமெரிக்கா இந்த காரணங்காட்டி உலகெங்கும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் நாடுகள் மீதும் ஒரு பெரும் போரைத்தொடுத்து வருகின்றது. கடந்த பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாக.
ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட இடத்தில் ஒரு பெரும் மஸ்ஜித்-ஐ (பள்ளி வாசலை) கட்டி முடிப்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.
9/22 (2011 அன்று) பத்து ஆண்டுகள் பதினொரு நாட்கள் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலை திறந்து அதில் தொழவும் செய்தார்கள்
இஃது இன்று Ground Zero கிரவுண்ட் ஜீரோ பள்ளிவாசல் என வழங்கப்படுகின்றது. இந்த இடத்தில் இப்போது 13 மாடி கட்டடம் ஒன்று வரவிருக்கின்றது.
இந்த Ground Zero என்ற பெயரை 2001 செப்டம்பர் 11 ஆம் நாள் தகர்க்கப்பட்ட இரண்டு கோபுரங்களையும் அதில் இறந்த வர்களையும் நினைவுகூருவதற்கு, அமெரிக்கா தான் வைத்தது. இதை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அடையாளமாகக் காட்டிடவும் முடிவு செய்தது. பிரச்சாரங்களைச் செய்து வருகின்றது.
இந்த இடத்தில் வருடந்தோறும் செப்டம்பர் திங்கள் 11ம் நாள் இறந்தவர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் மெழுகுவர்த்திகளைக் கொழுத்துவதையும் ஒரு வழக்கமாக கொண்டு வருகின்றது.
ஆனால் அந்த இடம் இனி முஸ்லிம்கள் தினமும் ஐந்து நேரமும் தொழுகையை நிறைவேற்றிடும் இடமாக ஆக்கப்பட்டு விட்டது.
எத்தனையோ எதிர்ப்புகளையும் தடைகளையும் கொண்டு வந்து குறுக்கே நின்றார்கள் அமெரிக்கர்கள். அத்தனை யையும் தாண்டினார்கள் முஸ்லிம்கள்.
எதிர்த்தவர்களால் இயன்றதெல்லாம் செப்டம்பர் 11 (9/11) அன்றே  திறக்க இருந்த பள்ளிவாசலின் திறப்பை பதினோரு நாட்கள் தள்ளிப்போட்டது தான். அதற்கு மேல்  ஒன்றும் இயலவில்லை. 9/11 அன்று வென்று காட்டினார்கள் முஸ்லிம்கள். இன்னும் விளக்கமாக அறிந்திட பார்க்க வைகறை வெளிச்சம்
இப்போது இந்த ரமளானில் இன்னொரு சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்கள்.
அது முர்ஃபிர்றிஸ்போரோ என்னுமிடத் தில் ஒரு பள்ளிவாசலைத் திறந்திருக்கின்றார்கள். பல நூறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவிலுள்ள இந்த இடத்தில் குறிப்பாக இந்த முர்ஃபிர்றிஸ் போரோ என்னுமிடத்தின் மையப்பகுதியாகிய டென்னீஸ் நகரில் ஒரு பள்ளிவாசலைத் திறந்திருக்கின்றார்கள்.
இங்கே ஈராக்கிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் எகிப்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் சிரியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வாழும் முஸ்லிம்களும் அமெரிக்காவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களும் ஒரு பெரும் முஸ்லிம் சமுதாயமாக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனால் இவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப கடமையும் அடிப்படைக் கடமையுமான தொழுகையை நிறைவேற்றிட இயலவில்லை.
அவர்கள் இஸ்லாமிய மையம் இஸ்லாமிக் சென்டர் என்றொன்றை அமைத்து அதன் தலைமையகத்திலேயே தொழுது வந்தார்கள்.
இந்த இஸ்லாமிய மையத்தையே அவர்கள் தங்களுடைய ஜமாஅத்தாக ஆக்கிக் கொண்டார்கள்.
இந்த ஜமாஅத்இன் கீழ் ஒரு பள்ளி வாசலை அமைத்திட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
ஆனால் அதற்கு அங்கே ஆயிரம் தடைகளை வெட்டிப் போட்டார்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த முர்பிரீஸ் ஃபாரோ என்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.
வரும் செய்திகளைப் படிக்கின்ற போது இந்த முர்ஃபிரீஸ் பாரோ என்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்களை யாரோ தூண்டி விட்டிருக்கின்றார்கள் என்றே படுகின்றது.
காரணம் முர்ஃபிரிஸ்பாரோ என்ற இந்த சமுதாயத்தவர்கள் இன்றளவும் முஸ்லிம்களுக்கெதிராக எதையும் செய்ததில்லை. செய்யும் எண்ணத்திலு மில்லை.
இன்னும் சொன்னால் அவர்கள் முஸ்லிம்களோடு சிறந்த உறவையும் உற்றத் தோழமையும் கொண்டவர்களாக இருந்து வந்தவர்கள்.
முஸ்லிம்கள் இவர்களைப் பற்றிச் சொல்லிடும் போது அவர்கள் எப்போதும் ஒரு வரவேற்கும் சமுதாயமாகவே இருந்தார்கள் என்றே குறிப்பிடுவார்கள்.
ஆனால் பள்ளிவாசலை எதிர்ப்பதில் அவர்கள் அபார வேகத்தோடு செயல் பட்டார்கள்
இரண்டாண்டுகளாகப் பள்ளி வாசலைக் கட்டுவதை நிறுத்திட போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் என்றெல்லாம் அந்தப் பகுதிகளை அல்லோல கல்லோலப் படுத்தினார்கள். பள்ளிவாசலை எழுப்பும் சஃபஃலீ ஃபாத்தி நான் இங்கே முப்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றேன். எங்களுக்கும் (முஸ்லிம்களுக்கும்) இந்த முர்ஃபிறிஸ் சமுதாயத்திற்குமிடையில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. இரண்டு ஆண்டுகளாகத் தான் அவர்கள் எங்களுக்கு எல்லாப் பிரச்சனைகளையும் உருவாக்கினார்கள் என்கிறார்.
அமைதியாக சமூகமாக உறவோடு வாழ்ந்த சமுதாயம் பள்ளிவாசலைக் கட்டும் பணிக்காக வந்த கட்டடப் பொருள்களைக் கொள்ளையடித்தார்கள். சில பல நேரங்களில் அந்த லாரிகளையே கடத்திச் சென்றார்கள்.
கலவரங்களை உருவாக்கி மஸ்ஜித் கட்டினால் பெரும் கொந்தளிப்பு எழும், சட்டம் ஒழுங்கு கெடும் என எச்சரித்தார்கள்.
ஆனாலும் முஸ்லிம்கள் தளரவில்லை. தங்கள் முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றார்கள்
நீதி மன்றங்களுக்குச் சென்றார்கள். நீதிமன்றத்தில் பயங்கரமானதொரு வாதத்தை முன்வைத்தார்கள் முர்ஃபிறிஸ் சமுதாயத்தினர். அஃது முஸ்லிம்கள் மத சுதந்திரப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள். அவர்களின் மத சுதந்திரத்தைப் பாதுகாத்திட இயலாது. தேவையுமில்லை. காரணம் முஸ்லிம்கள் அமெரிக்காவின் அரசியல் நிர்ணயச் சட்டத்தை மாற்றிவிட்டு அந்த இடத்தில் ஷரீயாசட்டத்தைக் கொண்டு வந்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இப்படி ஒரு வாதத்தை வைத்தார்கள் அல்லாமல் அவர்களால் எந்த சாட்சியத்தை யும் நீதிமன்றத்தில் வைத்திட இயலவில்லை. இதனால் நீதிமன்றம் அவர்களுடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை நிராகரித்து விட்டது பள்ளிவாசலைக்கட்டிட அனுமதி அளித்துவிட்டது.
முஸ்லிம்கள் மெத்த சிரமத்தோடு பள்ளிவாசலை கட்டி முடித்துவிட்டார்கள்.
ஆனால் கட்டி முடித்த பள்ளிவாசலை முஸ்லிம்களால் திறந்திட இயலவில்லை. காரணம் பள்ளி வாசலை திறக்கவிடக் கூடாது என கங்கணம் கட்டிச் செயல்பட்டவர்கள் நீதிமன்றத்திடம் ஒரு ஸ்டே (தடையை) ஐ வாங்கிவிட்டார்கள்.
முஸ்லிம்கள் இப்போது அதற்கெதிராகப் போராடிட வேண்டியவர் களானார்கள்.
கிஞ்சிற்றும் தளராமல் நீதிமன்றத்தில் தங்கள் போரைத் தொடர்ந்தார்கள்.
பள்ளிவாசல் இரகசியமாகக் கட்டப்பட்டுவிட்டது போதிய அளவுக்கு பொதுவிவாதங்கள் நடக்கவில்லை என்று கூறியே திறக்க தடை விதித்தது நீதிமன்றம்
முஸ்லிம்கள் போதிய அளவுக்கு விவாதங்களை நடத்தவே செய்தார்கள்.
ரமழான் மாதத்தில் தொழுகைக்கு இடமில்லை. ஆதலால் நாங்கள் சாலைகளில் தொழவேண்டியது வரும் அப்போது பொது விவாதங்கள் மட்டுமல்ல பொது வருத்தங்களும் வழக்குகளும் வரும் என முரட்டுவாதம் ஒன்றை முன் வைத்தார்கள் அப்போதுதான் நீதிபதிகளின் கண்கள் திறந்தன.
உடனேயே பள்ளிவாசலைத் திறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றினார்கள்.

ரமளானில் பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

இத்தனை போரையும் முன்னே நின்று நடத்தியவர்களுள் ஒருவர் மாட்முல்லர் என்பவர். அவர் அண்மையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்.
இப்போதெல்லாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களைக் கொண்டே அல்லாஹ் இஸ்லாத்திற்கு அதிகமாக வேலைகளை வாங்குகின்றான். அதில் நிறைவையும் தருகின்றான்.

பெண்களின் பங்கு

இந்தப்பள்ளிவாசலை நிறுவுவதிலும் அதனை கட்டிமுடிப்பதிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை எதிர் கொள்வதில் பெண்கள் காட்டிய ஆர்வம் வீரமும் அலாதியானது.
ஒரு பெட்ரூம் படுக்கை அறைக்குள் தொழுது கொண்டிருந்தோம். இப்போது 12,000  சதுர அடியிலுள்ள பெரிய பள்ளியில் தொழவிருக்கின்றோம் என்கிறார் 10 கிலோ மீட்டர் தனது காரை ஓட்டிகொண்டு வந்து குடும்பத்தோடு இரவு தொழுகைகளில் கலந்து கொள்ளும் அமீராபாத்திமா என்ற பெண்மணி.

எது முதலில் ?


தேவை தரமான மனிதர்கள் 

நபித்தோழர்களுள் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது(ரழி) அவர்கள் ஒரு மரத்தில் ஏறினார்கள். அப்பொழுது அவர்களின் இரு கெண்டைக்கால்களும் வெளியே நன்றாகத் தெரிந்தன. அவை மெலிந்தும் சிறுத்தும் இருந்ததைக் கண்ட நபித்தோழர்களில் சிலர் வாய்விட்டுச் சிரித்து விட்டனர். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘இவரின் கெண்டைக் கால் மெலிந்திருப்பதைக் கண்டுதானே நீங்கள் (ஏளனமாகச்)சிரிக்கிறீர்கள். என் உயிர் யார் வசமுள்ளதோ அந்த அல்லாஹ்மீது சத்தியமாகச் சொல்கிறேன் (நன்மை தீமைகளை சீர்தூக்கிப் பார்த்திடும்நியாயத்) தராசுத்தட்டில் இவரது கால்களிரண்டும் உஹது மலையை விட அதிக கனமானதாக இருக்கும்’ என்று கூறினார்கள் (நூல்: அஹ்மது, தப்ரானி, அபூயஅலா, பஸ்ஸார்)
அப்படியானால் தூய உள்ளமும் கூர்த்த மதியும் இல்லாமல் வாட்ட சாட்டமாக மட்டும் இருப்பதில் எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதானே அதன் பொருள்.
அரபுப் பழமொழியொன்று “பேரீத்தம் மரம் போல் இளைஞர்களெல்லாம் இருப்பதைப் பார்க்கிறாய் உள்ளே என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்கிறது.
ஒரு கூட்டத்தின் மக்கள் குள்ளமாகவோ உயரமாகவே இருப்பது தவறல்ல. உருவத்தில் கோவேறு கழுதை போல் இருந்துக் கொண்டு அறிவில் சிட்டுக்குருவி போல் (சிறுத்து) இருப்பதே தவறு என்று ஒரு கூட்டத்தை இகழ்ந்து பாடியுள்ளார்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித்(ரழி)அவர்கள். எனவே அறிவும் திறனும் தான் முக்கியமேயன்றி உருவம் அல்ல.
இப்படிக் கூறிவிட்டதால் உடல் ஆரோக்கியத்தை இஸ்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று எண்ணிவிடாதீர்கள். உடல் ஆரோக்கியத்தை இஸ்லாம் பெரிதாய் போற்றுகிறது. தாலூத் என்ற அரசரை அல்லாஹ் புகழ்வதைப் பாருங்கள்
அல்லாஹ் அவருக்கு உடல், அறிவு ஆகியவற்றை தாராளமாக வழங்கியுள்ளான் (அல்குர்ஆன் 2:247)
அதாவது அவர் உடலாரோக்கியம், சிந்தனையாற்றல் இவற்றை அதிகம் பெற்றுத் திகழ்ந்தார் என்று அல்லாஹ் பாராட்டுகிறான்
அண்ணல் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: உன் உடலுக்கு நீ செய்ய வேண்டிய கடமையுண்டு (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின்அம்ரு(ரழி), நூல்: புஹாரி, முஸ்லிம்)
இப்படியெல்லாம் இஸ்லாம் கூறியிருந்தாலும் ஒருவரின் மேன்மைக்குரிய அளவுகோலாக உடல் ஆரோக்கியத்தை கூறவில்லை.
கட்டுமஸ்தான உடலமைப்பும் உடல் வலிமையும் ஒருவரின் ஆண்மைக்கு அளவுகோல் அல்ல. அவன் மனிதர்களில் சிறந்தவன் என்பதற்கு இது அளவுகோல் அல்ல. ஒருவனின் அழகும் தோற்றப்பொலிவும் அவனின் மனிதப்பண்புக்கு அளவுகோல் அல்ல. இதுபோல ஒருவனின் உடலில் நோய்கள் இல்லை என்பது அவன் சிறந்த மனிதன் என்பதற்கு அளவுகோல் ஆகாது.
அண்ணல் நபி(ஸ்ல்) கூறினார்கள்: அல்லாஹ் உங்களின் உடலமைப்பையோ உருவங்களையே பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே அவன் பார்க்கிறான் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி), நூல்:முஸ்லிம்)
கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வான் அவர்களை ஒரு கவிஞர் இப்படிப் புகழ்ந்து கவிபாடினார்.
“அவரின் நெற்றிக்கு மேலுள்ள தலை வகிடு மீது கிரீடம் தங்கம் போல் ஜொலிக்கிறது” என்று பாடினார். இதைக்கேட்ட அப்துல் மலிக் பின் மர்வான், “முஸ்அப் பின் உமைர்(ரழி)அவர்களை ஒரு கவிஞர் புகழ்ந்தாரே அது போல் என்னை நீ புகழ்ந்திருக்கலாமே” என்று கூறிவிட்டு அந்தக் கவிதையைப் பாடினார்.
முஸ்அப்(ரழி) அல்லாஹ்வின் தீச்சுவாலை அவரால் இருள்கள் வெளிச்சம் பெற்றன. அவரின் ஞானம் வலிமையானது அதில் ஆணவமோ பெருமையோ இல்லை”.
இப்படி முஸ்அப்(ரழி) பற்றிப் பாடியது போல் என்னை நீ புகழ்ந்திருக்கலாம் என்றார் அப்துல் மலிக்.
இதற்கு காரணம் அப்துல் மலிக் பற்றி கவிஞர் கூறிய வரிகள் அவரை மறைமுகமாக இகழ்ந்தன. அவரின் கிரீடம் தான் தங்கம் போல் ஜொலிக்கிறது. அவரின் அறிவு ஜொலிக்க வில்லை. முஸ்அப்(ரழி)வின் ஞானம் போல இருளில் வெளிச்சம் தரவில்லை என்பது அக்கவிதையின் மறுபொருள்.
ஆம் தலையில் இருக்கும் அறிவையும் இதயத்தில் இருக்கும் ஈமானையும் ஈமானால் விளையும் அறப்பணிகளையும் வைத்தே ஒரு மனிதன் மதிப்புப் பெறுகிறான்.
ஒருவன் செய்யும் நற்செயல் எவ்வளவு எண்ணிக்கையுள்ளது எவ்வளவு பெரியது என்று இஸ்லாம் பார்ப்பதில்லை எவ்வளவு உளப்பூர்வமாகவும் பயபக்தியுடனும் அச்செயல் செய்யப்பட்டுள்ளது என்றே இஸ்லாம் பார்க்கிறது.
இஹ்ஸான்(உளத்தூய்மையுடன் பணியாற்றுதல்) என்பது முஸ்லிம்கள் அனைவர்மீதும் இஸ்லாம் விதித்துள்ள கடமை. அது நஃபில் அல்ல. நோன்பு உள்ளிட்ட எந்தக் கடமையை நிறைவேற்றினாலும் இஹ்ஸான் மிகமிக அவசியம்.
அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: எல்லாச் செயல்களுக்கும் இஹ்ஸான் அவசியம் என்று அல்லாஹ் விதித்துவிட்டான்.(ஒரு கொலைக் குற்றவாளியை) நீங்கள் கொன்றால் அழகிய முறையில் கொல்லுங்கள். அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். நீங்கள் கத்தியைத் தீட்டுங்கள். பலிப்பிராணிக்கு சிரமம் தராமல் அறுத்து முடித்து விடுங்கள். (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ்(ரழி), நூல்: முஸ்லிம்)
இந்த நபிமொழியில் இடம் பெற்றுள்ள “கதப” விதித்துள்ளான் எனும் சொல் கடமையாக்கியுள்ளான் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
நபி(ஸல்)கூறினார்கள்: அனைவரும் அழகிய முறையில் (இஹ்ஸானுடன்) பணியாற்றுவதையே அல்லாஹ் விரும்புகிறான் (அறிவிப்பாளர் : குலைப்(ரழி) நூல்:முஸ்லிம், பைஹகீ)
ஆக எல்லாச் செயல்களும் அழகிய முறையில் செய்யப்படவேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் அதையே விரும்புகிறான் அவர்களையே விரும்புகிறான்.
பொறுப்புள்ள ஒவ்வொரு மனிதனும் அழகிய முறையில் செயல்பட்டால் போதாது மிக அழகிய முறையில் செயல்படவேண்டும் என அழைப்பு விடுக்கிறது அருள் மறையாம் திருக்குர்ஆன்
உங்கள் இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்ட மிக அழகியதைப் பின்பற்றுங்கள்(39:55)
சொற்களைச் செவியேற்று அவற்றுள் மிக அழகானவற்றைப் பின்பற்றும் அடியார்களுக்கு நல்வாழ்த்து கூறுவீராக. (39:17,18)
மாற்றுக் கருத்துடையோரிடம் மிக அழகிய முறையில் தர்க்கம் செய்திடப் பணிக்கிறது திருக்குர்ஆன்.
(நபியே) மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கம் செய்வீராக (16:125)
ஒரு தீமையை மிக அழகிய நன்மையால் மாற்றும் படி பணிக்கிறது.
நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு அதைத் தடுப்பீராக. (41:34)
அனாதையின் பொருளுக்கு அருகில் மிக அழகிய வழிமுறையிலன்றி நெருங்க வேண்டாம் என்கிறது.
அனாதையின் பொருளின் பக்கம் அவன் பருவம் அடையும் வரை மிக அழகான முறையிலன்றி நெருங்காதீர்கள். (6:152)
பூமியையும் வானங்களையும் அவற்றிலிருப்பவற்றையும் ஏன் படைத்தான் அல்லாஹ்? வாழ்வையும் மரணத்தையும் ஏன் படைத்தான்? இதோ கூறுகிறான் அல்லாஹ்
மனிதர்களில் மிக அழகிய முறையில் செயல்படுவோர் யார் என்று சோதிக்கவே நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கினோம் (18:7)
உங்களில் யார் மிக அழகாக செயல்படுகிறார் என்று சோதிக்கவே வாழ்வையும் மரணத்தையும் அல்லாஹ் படைத்தான் (67:2)
அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷ் நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் மிக அழகிய முறையில் செயல்படுகின்றீர்கள் என்று சோதிக்கவே இவற்றைப் படைத்தான் (11:7)
இந்த வசனங்களை நன்றாகப் படியுங்கள். இவை நமக்குச் சொல்வதென்ன? மனிதர்களுக்கிடையே நடக்கும் போட்டி நன்மைக்கும் தீமைக்குமிடையே நடக்கும் போட்டியல்ல. அழகியதற்கும் மிக அழகியதற்குமிடையே நடக்கும் போட்டியாக இருக்கவேண்டும். இறை நம்பிக்கையுள்ள ஒருவர் எப்போதும் மிக அழகியதையும் மிக உயர்ந்ததையும் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்தைக் கேட்டால் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க்கத்தைக் கேளுங்கள். ஏனெனில் இதுவே உயர்ந்த உன்னதமான சொர்க்கம். இதற்கு மேல் தான் அல்லாஹ்வின் அர்ஷ் உள்ளது ( நூல் : புஹாரீ, கிதாபுத் தவ்ஹீத்)
ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித உருவத்தில் வந்து நபியிடம் கேள்விகள் கேட்க நபி(ஸல்) அவர்கள் பதில்அளித்தார்கள் என்பது மிகப்பிரபலமான ஒரு ஹதீஸ் தான். அதில் இஹ்ஸான் என்றால் என்ன? என்று ஜிப்ரீல்(அலை) கேட்டதற்கு அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் அவனை வணங்க வேண்டும். நீ அவனைப்பார்க்கா விட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான் என்று நபி(ஸல்) பதில் கூறினார்கள்(அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
வணக்க வழிபாடுகளில் இஹ்ஸான் என்றால் இதுதான். ஓர்மை ஒருங்கிணைந்த சிந்தனை ஆகியவற்றுடன் வணங்க வேண்டும். அல்லாஹ் எந்த நற்செயலின் வடிவத்தையும் அளவையும் பார்த்து அங்கீகரிப்பதில்லை. மாறாக அதன் தரத்தையும் சத்தையும் தான் பார்க்கிறான்.
நிறைவான நற்செயல்கள்போல் தோன்றும் செயல்கள் பல உண்மையில் உயிரற்றதாக இருக்கின்றன அதனால் அவற்றை மார்க்கம் பொருட்படுத்துவதில்லை அவை அங்கீகாரம் பெறுவதுமில்லை இதோ அல்லாஹ் கூறுகிறான்:
கவனமற்ற தொழுகையாளிகளுக்குக் கேடுதான் இவர்கள் தம் தொழுகையில் கவனமின்றி இருப்போர் முகஸ்துதிக்காகவே தொழுகின்றவர்கள் (107:4,5,6)
நபி(ஸல்)அவர்கள் நோன்பை பற்றி இப்படி சொன்னார்கள்: தீய சொற்களையும் தீய செயல்களையும் கைவிடாமல் நோன்பு நோற்பவர் தமது உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை (அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரழி) நூல்:புஹாரீ)
நபி(ஸல்) கூறினார்கள்: எவ்வளவோ நோன்பாளிகளுக்கு அவர்கள் பசித்திருந்ததைத்தவிர வேறு எதுவும் நன்மை இல்லை. இரவு வணக்கத்தில் ஈடுபட்ட எவ்வளவோ பேருக்கு அவர்கள் விழித்திருந்ததைத்தவிர வேறு எதுவும் நன்மை இல்லை (நூல்: இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹுசைமா)
அல்லாஹ் கூறுகிறான்: வணக்க வழிபாட்டை அல்லாஹ்வுக்காக மட்டும் அமைத்துக் கொள்ளவே அவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர் (98:5)
அண்ணல் நபி(ஸல்) கூறினார்கள்: செயல்களெல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யார் அல்லாஹ்வுக்காகவும் அவனின் தூதருக்காகவும் தியாகப்பயணம் மேற்கொண்டாரோ அவர் அல்லாஹ்வுக்காகவும் அவனின் தூதருக்காகவும் தியாகப்பயணம் மேற்கொண்ட (கூலியைப் பெறு)வார். யார் உலகத்தை அடையவும் பெண்ணைத் திருமணம் செய்யவும் தியாகப்பயணம் மேற்கொள்கிறாரோ அவரின் தியாகப்பயணம் அதற்கென அமையும். (அதனையே அவர் அடைவார்) (அறிவிப்பாளர்: உமர்(ரழி) நூல்: புஹாரீ, முஸ்லிம்)
இப்படியெல்லாம் எண்ணங்கள் பெரும் முக்கியத்துவம் பெறுவதனால் தான் இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் இந்த ஹதீஸை முக்கியமான நபிமொழியாகப் பதிவு செய்கின்றனர் இமாம் புஹாரி அவர்கள் தமது பிரபல ஹதீஸ் தொகுப்பில் முதல் ஹதீஸாக இதைப் பதிவு செய்துள்ளார்கள்
இது இஸ்லாத்தின் கால்பகுதி என்றும் மூன்றில் ஒரு பகுதி என்றும் அறிஞர்கள் கூறுவதற்குக் காரணம் எல்லாச் செயல்களும் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறவேண்டு மானால் அதற்கு நல்ல நிய்யத் எண்ணம் அவசியம் என்பதால்தான்.
மார்க்கத்தில் கூறப்படாத புதிய செயலை (பித்அத்)ஐ யார் செய்தாலும் அது புறந்தள்ளப்படவேண்டும் ஏனெனில் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்கத்தில் இல்லாத புதிய செயலை ஒருவன் செய்தால் அது மறுக்கப்படும் (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்)
ஆக ஒரு செயல் சமுதாயத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டுமானால் மார்க்கம் கூறிய செயலாக இருக்கவேண்டும் ஒரு செயல் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெறவேண்டுமா னால் அது உளத்தூய்மையுடன் நல்ல எண்ணத் துடன் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவ்விரு நபிமொழிகளும் கூறும் பாடம்.
இறைநேசர் ஃபுளைல் பின் இயாழ்(ரஹ்)விடம் ஒருவர் அழகிய செயல் என்று அல்லாஹ் குர்ஆனில் (18:7, 67:2, 11:7) கூறும் அழகிய செயல் எது என்று கேட்டார். அதற்கு எந்த செயல் நேர்த்தியாகவும் உளப் பூர்வமாகவும் செய்யப்படுகிறதோ அதுவே அழகிய செயல். இவ்விரண்டில் எது இல்லா விட்டாலும் அந்த செயல் அழகிய செயல் அல்ல. ஏற்புக்குரியதுமல்ல. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் நோக்கத்தில் செயல் படுவதே உளப்பூர்வமாக செய்வதாகும். நபி(ஸல்)சொன்ன வழியில் செயல்படுவதே நேர்த்தியாகச் செய்வதாகும் என்று ஃபுளைல் பின் இயாழ்(ரஹ்) பதில் அளித்தார்கள்.
அல்லாஹ்வோ அவனின் திருத்தூதரோ கட்டளையிடாத ஒரு செயலை ஒருவன் மார்க்கத்தின் பெயரால் செய்தால் அதை சமுதாயம் புறக்கணிக்க வேண்டும் அல்லாஹ்வோ ரசூலோ கூறிய செயலை உளத்தூய்மையின்றிச் செய்தால் அதை அல்லாஹ் புறக்கணித்து விடுவான் எனவே எந்த செயலையும் நேர்த்தியாகவும் செய்யவேண்டும் உளப்பூர்வமாகவும் செய்ய வேண்டும்
இதை வலியுறுத்தும் நபிமொழிகள் ஏராளம் உள்ளன. நபி(ஸல்) கூறினார்கள்: ஒரே அடியில் ஒருவர் ஒரு பல்லியைக் கொன்றால் அவருக்கு நூறு நன்மை கிடைக்கும். இரண்டாவது அடியில் கொன்றால் நூறை விடக் குறைவான நன்மையும். மூன்றாவது அடியில் கொன்றால் அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்கும் (அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்)
பல்லியைக் கொல்வது ஒரு சிறிய வேலை தான் அதைக்கூட நேர்த்தியுடன் செய்து முடித்திட வலியிறுத்துகிறது என்றால் எல்லாச் செயல்களையும் அதற்குரிய ஒழுங்குடன் முறைப்படி செய்வதையே இஸ்லாம் விரும்புகிறது.
கொல்வதாக இருந்தால் கூட அழகிய முறையில் கொல்லுங்கள் (நூல்: முஸ்லிம்) இந்த ஹதீஸ் கூறுவதென்ன? விரைவாக உயிரைப் பறித்துவிட்டால் கொல்லப்படுபவர் மனிதனோ மிருகமோ யாராக இருப்பினும் சித்ரவதையின்றி விஷயம் முடிந்துவிடுமல்லவா?
எனவே எந்தச் செயலும் அது எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதே முக்கியம் எத்தனை முறை செய்யப்பட்டுள்ளது என்பதை விட.
இதுபோலத்தான் மனிதர்களும் எத்தனை ஆண்டு உயிர்வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்ந்தான் என்பதில் தான் அவனது மரியாதை இருக்கிறது.
சிலபேர் நீண்ட நெடிய காலம் வாழ்ந்திருப்பான். அவனால் ஒரு நன்மையும் விளைந்திருக்காது. சிலர் குறைவான காலம் வாழ்ந்தாலும் நேர்த்தியுடன் செய்யப்பட்ட நற்செயல்களால் அவர்களது வாழ்க்கை ஜொலிக்கும்.
இதோ இப்னு அதாவுல்லாஹ்வின் தத்துவ வரிகள்: நெடுங்காலம் வாழ்ந்த பலரால் ஒரு சமூகம் பெற்ற பலன்கள் குறைவு. குறைவான காலம் வாழ்ந்த பலரால் சமூகம் பெற்ற பலன்கள் அதிகம். யாருடைய ஆயுளில் அல்லாஹ் பரக்கத் அருள்வளம் பொழிந்து விட்டானோ அவர் குறைவான காலத்தில் அல்லாஹ்வின் ஏராளமான அருள்களைப் பெறுவார் வார்த்தைகளால் அதை வடிக்க முடியாது. விரல்களால் அதை சுட்டிக் காட்டவும் இயலாது. அவ்வளவு தாராளமான அருள் கிடைத்துவிடும்.
நம் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களை விட இதற்கு இன்னோர் உதாரணம் வேண்டுமா?
ஓர் இறைத்தூதராக அவர்கள் வாழ்ந்தது வெறும் இருபத்து மூன்றாண்டுகள் மட்டுமே. அதில் எவ்வளவு சாதனைகள்.
மாபெரும் மார்க்கத்தை உலகில் நிறுவினார்கள். சிறந்த சமுதாயத்தை உருவாக்கினார். மனிதர்களை புனிதர்களாக வார்த்தெடுத்தார்கள். நீதியானதோர் அரசை நிலைநாட்டினார்கள். இறை மறுப்பாளர்களின் சிலை வணக்கத்தை வென்றார்கள். சதிகார யூதர்களை வீழ்த்தினார்கள். இறைவேதத்துக்கு அடுத்தபடியான சுன்னாவை அழகிய வாழ்க்கை வழிமுறையை வழங்கினார்கள். ஆஹா எவ்வளவு சாதனைகள் குறுகிய காலத்தில்.
இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் வீற்றிருந்த கலீஃபா அபூபக்ர் சித்தீக்(ரழி)யவர்கள் சாதித்த சாதனைகள் சாதாரணமானவையா?
போலி நபிகளாகத் தோன்றிய பொய்யர்களை ஒழித்துக் கட்டினார்கள். மதம் மாறிச் சென்றவர்களை மீண்டும் இஸ்லாத் தின் அரவணைப்புக்குள் வரவைத்தார்கள். அறியப்பட்ட உலகின் இருபெரும் வல்லரசுக ளான ரோம் பாரசீகம் ஆகிய நாடுகளுக்கு எதிராக படையை அனுப்பினார்கள். ஸகாத் ஐ தர மறுத்தோரை ஒழுங்குபடுத்தினார்கள். செல்வந்தர்களின் செல்வங்களில் ஏழைகளுக் குரிய பங்கை உரிமையை பேணிப் பாதுகாத்தார்கள்.
ஏழைகளின் நலனுக்காக தம் சொந்தக்குடி மக்களுக்கு எதிராகவே யுத்தம் செய்திடத் துணிந்த ஓர் அரசு உலக வரலாற்றில் உண்டென்றால் அது இஸ்லாமிய அரசு தான் என்ற பெருமையை இஸ்லாத்துக்குப் பெற்றுத் தந்தார்கள்.
பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலீஃபா உமர்(ரழி) அவர்களின் சாதனைகளை அடுக்கினால் ஏடுகள் கொள்ளாது. நாட்கள் போதாது
பல நாடுகளை வென்றார்கள். மக்களிடம் ஆலோசனைகள் கேட்டு இயங்கும் நீதியான அரசுக்கு அடிகோலினார்கள். தமக்குப்பின்னர் வரும் தலைமுறைக்கு அழகிய வழிகளை அறிமுகப்படுத்தினார்கள். அவ்வலிய்யாத்து உமர் ( உமர் அறிமுகப்படுத்திய சாதனைகள் ) என்ற பெயரில் வரலாற்றில் என்றும் வாழும் சாதனைகளைப் படைத்தார்கள்
குடிமக்களிடையே கூட்டுப் பொறுப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மார்க்கத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முரண்படாமல் மக்கள் நலப்பணிகளுக்கு முன்னுரிமை தந்தார்கள். பொதுமக்களை காப்பதில் அரசின் பணி என்ன? அரசுக்கு பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை தெளிவுப்படுத்தினார்கள்.
அரசை வழிநடத்தவும் விமர்சிக்கவும் மக்களுக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். குடிமக்களே அரசை வழி நடத்த தேவையான ஆலோசனைகளையோ அரசு தவறிழைத்தால் அரசு மீது விமர்சனங்களையோ நீங்கள் சொல்லாமல் மவுனமாக இருந்தால் உங்களிடம் எந்த நன்மையுமில்லை. அதைக் கேட்காமல் இருந்தால் எம்மிடம் எந்த நன்மையும் இல்லை என்றார்கள்.
உலகத்தின் சுகபோக வாழ்வில் நாட்டமின்றி சமத்துவம் சமநீதி இவற்றை நிலைநாட்ட வலிமையைப் பிரயோகித்தார்கள். இதற்காக தம் கவர்னர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கூட கண்டிக்க தண்டிக்க தயங்கவில்லை
உமர் பின் அப்துல் அஸீஸ்(ரஹ்) முப்பது மாதங்கள் மட்டுமே கலீஃபாக இருந்தார். பாழ்பட்டுப்போன நீதியை புதைந்துபோன நேர்வழியை மீட்டார். அநீதிகளையும் வழிகேட்டையும் புதைத்தார். மனித உரிமைகளை மக்களுக்குப் பெற்றுத்தந்தார். மக்களிடமிருந்து பறிபோன இஸ்லாத்தின் இனிய பண்புகளை மீட்டார். அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் குடிமக்களை விடுவிடுத்தார்.
இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பெங்கும் செல்வம் பெருகிற்று. இவரின் ஆட்சியில் ஸகாத்-ஐ கொடுப்பதற்கு ஆள்கள் இருந்தனர். பெறுவதற்கு எவருமில்லையே என்று கொடுப்போர் கவலைப்பட்டனர். அப்படி ஒரு ஆட்சியைத்தந்தார் முப்பதே மாதங்களில்
பேரறிஞர் இமார் ஷாபிஈ(ரஹ்) வாழ்ந்தது (ஹிஜ்ரி 150-204) ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தான். ஏராளமான கல்வி ஞானத்தை தம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றார்கள் தம் சொத்தாக.
இமாம் கஸ்ஸாலி (ரஹ்) வாழ்ந்ததும் (ஹிஜ்ரி 450-505) ஐம்பத்து நான்கு ஆண்டுகள் தாம். அறிவுத்துறையில் பெரும்புரட்சிகளை செய்தார்கள். அவரின் நூல்கள் இந்த சமுதாயத்தின் மாபெரும் செல்வம்.
அறிஞர் இமாம் நவவீ (ஹிஜ்ரி 631-676) வாழ்ந்தது நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் தான். இவர்கள் சட்டத்துறையிலும் ஹதீஸ்கலையிலும் பதித்த தடங்கள் ஆழமானவை. இவர்கள் எழுதிய அர்பஈன் முஸ்லிம் நூலுக்கு விரிவுரை சட்டத்துறையில் மின்ஹாஜ், ரவ்ளத்துத் தாலிபீன், மஜ்மூஉ, இதன்றி தஹ்தீபுல் அஸ்மா, வல்லுகாத். இவைமட்டுமா இன்னும் எவ்வளவோ நூல்கள் சமுதாயத்தின் பெரும் பொக்கிஷம் அல்லவா?
இவர்கள் மட்டுமா இப்னுல் அரபீ, சர்கசீ, இப்னுல் ஜவ்சீ, இப்னுகுதாமா, கராஃபீ, இப்னுதைமிய்யா, இப்னுல் கய்யிம், ஷாத்பீ, இப்னு கல்தூன், இப்னு ஹஜர், இப்னுல் வசீர், இப்னுல் ஹுமாம், சுயூத்தி, தஹ்லவீ, ஷவ்கானீ (அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருள் நிலவட்டுமாக) இன்னும் ஏராளமான மேதைகள் இப்பாருலகை தம் ஞானத்தால் அறிவுத்திறனால் நிரப்பினார்கள் அல்லவா? எண்ணிப்பாருங்கள் எவ்வளவு பெரிய சாதனை.
இறந்தும் வாழ்வோர் சிலர். உயிருடன் வாழ்ந்தும் மரணித்துப் போனவர்களாகி விட்டோர் பலர். தம் அறிவுத் திறனால் சாதனைகள் படைத்து திறமையானவர்களை உருவாக்கி வரலாற்றில் என்றும் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றனர் சிலர்.
இப்படிப்பட்ட வரலாற்று நாயகர்கள் தேவையா? கூட்டத்தோடு கும்பலாக வாழ்ந்து மரணித்து மறைந்து மண்மூடிப் போனவர்கள் தேவையா? இவர்களில் யார் முக்கியமானவர்கள். முதன்மையானவர்கள்
..........தொடரும்:
தமிழ் வடிவம்: இல்யாஸ் ரியாஜி