ஞாயிறு, 25 நவம்பர், 2012

கர்கரேவை கொலை செய்தது யார் ?

கர்கரேவை கொலை செய்தது யார் ? என்ற புத்தகத்தின் தமிழாக்கம் மதுரையில் வெளியிடப்பட்டபோது தாருல் இஸ்லாம் பௌண்டேஷன் டிரஸ்ட் இன் தலைவர் குலாம் முஹம்மத் அவர்கள் உரை 


பகுதி 1 


பகுதி 2 


பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7


வியாழன், 15 நவம்பர், 2012

தீவிரவாதிகளை உருவாக்கும் இரானுவக்கல்லூரிக்கு பவள விழா


இந்துக்களின் இராணுவ குணத்தை மீண்டும் உயிர் தந்து எழுப்பிட வேண்டும்.  இந்துக்கள் தங்கள் தாய் நாட்டின் பாதுகாப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்றிடச் செய்திட வேண்டும்.  அவர்களை சனாதன தர்மத்தில் பயிற்றுவித்திட வேண்டும்.  அவர்களுக்கு தேசிய பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, இவற்றின் கலை மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்கிட வேண்டும்.”

AIM OF CENTRAL HINDU MILITARY EDUCATION SOCIETY NMML.  MUNJE PAPERS; SUBJECT files N: 24.1932-36 = ஆதாரம் மத்திய இந்து இராணுவ கல்விச் சங்கத்தின் இலட்சியம்.  மூஞ்ஜே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.24,1932-36.






இந்தப் பயிற்சியில் நமது பையன்மார்களை சுட்டுக் கொலைகளைச் செய்யும் விளையாட்டில் வெற்றிகளை ஈட்டிடும் இலக்குகளை நோக்கி பயிற்சி தந்திட வேண்டும்.  இந்தக் கொலை செய்யும் விளையாட்டுகளில் அவர்கள் முடிந்த அளவுக்கு நிறைய இழப்புகளை ஏற்படுத்திட வேண்டும். எதிரிகளில் மடிந்தவர்களும் நொடிந்தவர்களும் பிணக்காட்டின் கோலங்களாகக் காட்சித்தந்திட வேண்டும்.

(Source: Preface to the scheme of the central Hindu Military Society, And its Military School. NMML: MUNJE PAPERS.  Subject files : N:25.1935)  ஆதாரம்: மத்திய இந்து இராணுவப்பள்ளி சங்கத்திற்கான திட்டங்களின் முன்னுரையிலிருந்து மூஞ்சே ஆவணங்கள் பாட கோப்புகள் எண்.25:1935.

புதன், 14 நவம்பர், 2012

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்..

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்..அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது.
உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றது அமெரிக்கா. ஆனால் அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுத்திட முடியவில்லை.
அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த ஆய்வினை சுருக்கமாகப் பார்ப்போம்!.
அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு
US Religion Census

என்றொன்று ஆண்டு தோறும் நடைபெறுகின்றது இதனை அமெரிக்காவில் இயங்கும் மத அமைப்புக்கள் நடத்தி வருகின்றன. இதனை Association of Statisticians of American Religious Bodies

(அமெரிக்க மதங்களின் புள்ளிவிபர கணக்காயம்) என்ற அமைப்பு முன்னின்று ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது.
இவர்கள் இந்த புள்ளி விவரத்தை  ( Association of Religion data Archives
) புள்ளி விவர குழுமத்தின் ஆவணக் காப்பகத்தில் வைத்து வருகின்றார்கள்.
இந்த வருடம் இந்தப் புள்ளிவிபரங்கள் மே,1,2012 இல் வெளியிடப்பட்டன.
இதில் கடந்த பத்து வருடங்களாக அதாவது 2000மாவது ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை உள்ள ஆண்டில் எந்தெந்த மதம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற கணக்கை சமர்ப்பித்திருக்கின்றார்கள்
2000ம் ஆண்டில் அமெரிக்காவில் 10 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள்.   (1 மில்லியன்)
2010ம் ஆண்டில் 20 லட்சத்து  அறுபது ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள்.
அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 66.77சதவிகிதம்
ஏனைய மதங்கள் :
அப்படியானால் ஏனைய மதங்களின் நிலைமை என்ன?
மோர்மான்ஸ்
mormons

 (இவர்கள் ஒரு தனி மதப்பிரிவினர்)  +45.5% சதவிகிதம் அதாவது இவர்கள் தங்களது முந்தைய எண்ணிக்கையை விட 45.5% விழுக்காடுகள் வளர்ந்துள்ளார்கள்.
எவாங்கிளிக்கல் புரட்டன்ஸ்டேன்ஸ் : evangelical protestants:+1.7% இவர்கள் கிருத்தவத்தின் ஒரு பிரிவு. ஏனைய மத நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு பார்த்திடும் போது இவர்கள் தாம் மிகவும் பின் தங்கி நிற்கின்றார்கள்.
கத்தோலிக்க கிருத்தவர்கள் (-5.0%) கத்தோலிக்க கிருஸ்த்தவர்கள் ஐந்து சதவிகிதம் விழுக்காடுகள் எண்ணிக்கையில் குறைந்திருக்கின்றார்கள் . அதாவது இந்த மதத்திலிருந்து பலர் தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள்.
பொதுவான புரட்டஸ்டான்ட் main line pnotestant -12.8% இதனை மிகப்பெரிய வீழ்ச்சி என்கின்றார்கள் பார்வையாளர்கள்.
இஸ்லாத்தைச் சுற்றி எல்லாம்:
கென்டுக்கி பல்கலைகழகத்தின் பேராசிரியர் Kentucky university
பேக்பை Bagby  என்பவர் அமெரிக்காவில் இஸ்லாமிய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்.
இதனால் இவர் Islamic Studies இஸ்லாமியக் கல்வியை தனது சிறப்புத் துறையாக ஆக்கிக் கொண்டவர். இவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1000 மஸ்ஜித் பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்பொது 2010 இல் 2106மஸ்ஜித்துக்கள் பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்கள். இது அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் மிகப் பெரிய வளர்ச்சி என்கிறார்.
அமெரிக்காவில் எங்கே பார்த்தாலும் மெகா மாஸ்க்ஸ் Mega Mosques என்ற பெரிய மஸ்ஜித்களே நிர்மாணிக்கப் படுகின்றன. இந்தப் பள்ளிவாசல்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நிரம்பி வழிகின்றன. இதுவும் கெண்டுக்கி பல்கலைக் கழகப் பேராசிரியரின் அறிக்கையின் வெளிவந்த உண்மை
அமெரிக்கா டுடே பத்திரிக்கையின் அறிக்கை
அமெரிக்காவின் ஆய்வுபூர்வமான பத்திரிக்கைகளுள் ஒன்று USA Today

இந்தப் பத்திரிக்கை மத்திய அமெரிக்காவின் முக்கிய பகுதியான ஆர்லாண்டோஸ் ஆரஞ்ஜ் கன்ட்ரி-இல் (Orlando’s Orange Country) இஸ்லாத்தின் வளர்ச்சி 473 விழுக்காடுகள் எனக் குறிப்பிட்டுகின்றது.
இதற்கு புதிதாக இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட 10,000 பத்தாயிரம் முஸ்லிம்கள் தாம் காரணம் என்கின்றது.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
அதே “யுஎஸ்ஏ டுடே” பத்திரிக்கை இஸ்லாத்தின் இந்த வேகமான வளர்ச்சிக்கு 9/11 என்று அடையாளப்படுத்தப்படும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னணியில் நடந்த சதியும் உண்மையை அறிந்த அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்திட தொடங்கியதும் முக்கிய காரணங்களாகும் 9/11க்கு பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 9/11 இஸ்லாத்தின் வளர்ச்சியை சூடேற்றி விட்டுவிட்டது என்று கூறுகின்றது. இதனை அந்தப் பத்திரிக்கையில் இடம் பெற்ற சொற்களால் சொன்னால் muslim growth has been fuelled by 9/11 converts முஸ்லிம்களின் வளர்ச்சி 9/11 ல் எரியூட்டப்பட்டு விட்டது.
அதேபோல் மருத்துவ துறையில் உலக முஸ்லிம்கள் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றார்கள். இப்போது அமெரிக்காவில் மருத்துவ துறையில் தான் வேலை வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே இந்தத் துறையில் வந்து குடியேறும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது.
முஸ்லிம் மாணவர்கள்:
இப்போது அமெரிக்காவில் பயின்று கொண்டிருக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பத்து விழுக்காடுகள் 10% முஸ்லிம் மாணவர்களே!
இதனால் இது வரை முஸ்லிம்களின் பெருநாள்களுக்கு விடுப்புக்களைத் தந்திடாத கல்வி நிறுவனங்கள் இப்போது விடுப்புகளை விடுகின்றன.
இதற்குத் தகுந்தாற்போல் மொத்த கல்வியாண்டும் மாற்றி அமைக்கப் படுகின்றது. இது அமெரிக்காவின் கல்வித்துறையின் முகத்தை மாற்றிடத் தலைப்பட்டு வருகின்றது. School Calender பள்ளிகால அட்டவணைகள் ஏற்கனவே மாற்றங்களுக்கு உள்ளாகி விட்டன.
அமெரிக்காவின் முக்கிய நகரமாகிய நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளில் 
Newyork City School District
இலும் இதுவே நிலை. (Source US Today Article quoted in Milli Gazette 16-31 May 2012: Page 16)
கால்பந்து அட்டவணையும் முஸ்லிம்களும்:
அமெரிக்காவின் மற்றொரு முக்கிய பகுதி டெட்ராயிட் detrait அதன் புறநகர் டியர்பார்ன் dearborn இங்கே முஸ்லிம்கள் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றார்கள். Fox News

ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிக்கை இதனை இப்படிக்கூறுகின்றது.
Dearborn is located just outside of Detroit and it contains one of the densest Arab Communities outside the Middle East. Each day when the Loca Mosque’s Call to prayer can be clearly heard through out the city.
அதாவது டியர்போண்ட் என்பது டெட்ராயிட்இன் புறநகரில் இருக்கின்றது/ இங்கே தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு  அடுத்தாற்போல் அரபுக்கள் அடர்த்தியாக வாழுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் அந்த வட்டார மஸ்ஜித்களில் விடுக்கப்படும் தொழுகை அழைப்புக்களை அந்த நகர் முழுவதும் தெளிவாகக் கேட்கலாம்.
கால்பந்து ஆட்டப்பயிற்சி நேரங்களில் மாற்றம்.
கோடைக்காலங்களில் அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் தாம் ரமழான் நோன்புகளும் வருகின்றன.
இதனால் கால்பந்தாட்டப் பயிற்சிகளை மாற்றி வைத்திட வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. காரணம் அமெரிக்க கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகிப்பதில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். அனைவரும் தொழுகையை நிறைவேற்றுபவர்கள். நோன்பு நோட்பவர்கள்.
கோடைக்கால கால்பந்தாட்டப் பயிற்சிகளின் நேரம் இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணி வரை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை ஏனைய மத நம்பிக்கையைக் கொண்ட அன்பர்கள் எதிர்த்தார்களா?
இப்படி ஒரு கேள்வியை ஃபாக்ஸ் நியூசே (fox news) எழுப்பி பதிலும் சொல்லி இருக்கின்றது.
எவரும் எதிர்க்கவில்லையாம்.
காரணம் பெரும்பான்மையாக அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்கள் முஸ்லிம்கள் தானாம்.
மதமற்றோரின் நிலை:
இஸ்லாத்தை தொடர்ந்து இன்னும் வேகமாக வளர்ந்து வருவது மதமற்றவர்களின் எண்ணிக்கையாகும். இவர்கள் 32 சதவிகிதம் வளர்ந்துள்ளார்கள்.
இவர்கள் ஒரு கட்டத்தில் ஆன்மீகத்தையும் இறைவனையும் தேடுவார்கள். அப்போது அவர்கள் நிச்சயமாக இஸ்லாத்தின் பக்கம் திரும்புவார்கள் இன்ஷாஅல்லாஹ்! அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கட்டும்.
கிருஸ்தவத்தின் வீழ்ச்சி:
கிருஸ்தவம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக அதே ஃபாக்ஸ் நியூஸ் அறிவிக்கின்றது.
1990களில் அமெரிக்கர்களில் 86 சதவிகிதம் மக்கள் தங்களை கிருஸ்தவத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் கிருஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கிருஸ்தவர் களாகவே இருந்தார்கள்.
ஆனால் 2008ஆம் ஆண்டில் 76 சதவிகித்தினர் மட்டுமே தங்களைக் கிருஸ்தவத்தோடு அடையாளப் படுத்துகின்றனர்.
இதைச் சொல்லிவிட்டு ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் இன்னொன்றையும் சொல்கின்றார். இஸ்லாம் அமெரிக்காவின் முகத்தை மாற்றி வருகின்றது. அமெரிக்காவை இனி கிருஸ்தவ நாடு என அழைக்க முடியாது. இன்றளவும் அமெரிக்காவை மதசார்பற்ற நாடு என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இதில் அழுத்தமானதொரு செய்தி இருக்கின்றது.
பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்திட படமெடுத்தவர்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் விரக்தி அடைந்தவர்களே!

எது முதலில் ?

எடை போடுவது எப்படி ? புத்தக வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்

இதுவரை இவ்வுலக நன்மை தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி மறுமையின் நன்மைகளையும் தீமைகளையும் பார்ப்போம்.
நம்முடைய மறுமை வாழ்வில் நமக்கு எது பலன் தரும் எது இடர் தரும் என்பதை குர்ஆன் சுன்னாவைக் கொண்டே அறியமுடியும். ஈருலக நன்மைகளும் தீமைகளும் பலபடித்தரங்களில் உள்ளன. உயர்ந்தவை, தாழ்ந்தவை, நடுத் தரமானவை என பலபடித்தரங்கள் அவற்றில் உள்ளன. ஒரு செயல் (நன்மை, தீமை) உயர்ந்ததா, தாழ்ந்ததா, நடுத்தரமானதா என்பதை முடிவு செய்வதில் துறை சார்ந்த அறிஞர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதுமுண்டு. கருத்து வேற்றுமை ஏற்படுவதுமுண்டு.
மார்க்கம் கட்டளையிட்டுள்ள எல்லா செயல்களிலும் இம்மை நலனோ மறுமை நலனோ இருக்கும் அல்லது ஈருலக நலன் இருக்கும். மார்க்கம் தடுத்துள்ள எல்லா (தீய) செயல்களிலும் இம்மை அல்லது மறுமையில் தீமை இருக்கம் அல்லது ஈருலகத் தீமை இருக்கும்.
ஒரு செயலால் நல்லதோர் சீர்திருத்தம் ஏற்பட்டால் அது சிறந்த செயல். ஒரு செயலால் மோசமான கேடு விளைந்தால் அது மட்டமான செயல். இறைக் கோட்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வை, இறை நம்பிக்கை (ஈமான்) இறைவனுக்குக் கட்டுப்படுவது ஆகியவற்றை விட மேன்மை மிக்கது வேறொன்றுமில்லை. ஏனெனில் இதர நன்மைகள் அனைத்துக்கும் இவைதான் அடிப்படை.
இறைக்கோட்பாட்டைச் சரியாகப் புரியாமலிருப்பது, (குஃப்ர்) இறை மறுப்பு. பாவங்கள், இறைவனுக்கு அடங்க மறுப்பது ஆகியவற்றை விட மட்டமானது வேறொன்றுமில்லை. ஏனெனில் இதரத் தீமைகள் அனைத்துக்கும் இவைதான் காரணம்.
இவ்வுலகில் செய்யும் நன்மைகளில் தரங்களுக்கு ஏற்ப மறுமையில் கூலியும் பல தரத்தில் வழங்கப்படும். இவ்வுலகில் செய்யும் தீமைகளின் தரங்களுக்கு ஏற்ப மறுமையின் தண்டனையும் பல தரத்தில் வழங்கப்படும். சீர்திருத்தப் பணிகளையும் அதற்குக் காரணமானவற்றையும் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதும் சீர் கேடான செயல்களையும் அதற்குக் காரணமானவற்றையும் செய்யக் கூடாது என்ற எச்சரிப்பதும் தான் திருக்குர்ஆனின் முக்கிய நோக்கம்.
சீர்திருத்தப் பணிகள் மூன்று வகையுண்டு. (1) மார்க்கம் அணுமதிக்கும் சீர்திருத்தப்பணி (2) சுன்னத்தான சீர்திருத்தப்பணி (3) கடமையான சீர்திருத்தப்பணி.
சீர்கேடுகள் இரு வகையுண்டு. (1) மக்ரூஹ் வெறுக்கத் தக்க சீர்கேடு (2) ஹராம்-தடைசெய்யப்பட்ட சீர்கேடு.
மறுமை நலன் என்பது, நிரந்தர கவனத்தைப் பெறுவதும் மாண்புமிக்க இறைவனின் திருமுகம் பார்த்து அவனின் திருப்தியைப் பெறுவதும் ஆகும். இது ஈடு இணையற்ற பாக்கியம்.
மறுமையில் ஏற்படும் கேடு என்பது, நிரந்தர நரகத்தைப் பெறுவதும் இறைவனின் திருமுகம் காணமுடியாமல் இறைக் கோபத்துக்கு இலக்காகி நிற்பதும் ஆகும். இது கடும் தண்டனை.
நாம் இம்மையில் சில நற்செயல்களைச் செய்வதால் (சில இடையூறுகள் வரலாம். அவற்றைச் சகித்துக் கொண்டு அந்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன்மூலம்) மறுமையில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுபோல இம்மையில் சில தீமைகளைச் செய்வதால் (நமக்கு சுகமும் மகிழ்ச்சியும் கிடைக்கலாம். அவற்றைப் புறக்கணித்து விட்டு தீமையை விட்டு விலகவில்லை எனில்) மறுமையில் கடும் தண்டனை கிடைக்கும்.
எனவே (இம்மையில் சுகமளிக்கும் ஒரு பாவம் மறுமையில் தண்டனை பெறக் காரணமாகிறது. மறுமையில் நற்கூலியும் இறை திருப்தியும் பெறக் காரணமாக அமையும் ஒரு நன்மை இம்மையில் சுகமளிப்பதில்லை.) நலனும் கேடும் இம்மை மறுமையைப் பொறுத்து வேறுபடுகிறது.
ஈருலக நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்கும் வழி:-
முன்னர் இவ்வுலக நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்தோம். பின்னர் மறுமையின் நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்தோம்.
இனி ஈருலக நன்மைகளையும் தீமைகளையும் அதைக் கண்டுபிடிக்கும் வழிகளையும் பார்ப்போம்.
ஷரிஅத் எவற்றை ஈருலக நன்மைகள் தீமைகள் என்று கூறுகின்றதோ அவை தான் ஈருலக நன்மைகள் தீமைகள்.
ஒரு செயல் நன்மையா தீமையா என்பதை ஷரீஅத் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்று நமக்குத் தோன்றினால் ஷரீஅத்தின் ஆதாரங்களைக் கொண்டு அதை நாம் கண்டுபிடிக்கலாம்.
குர்ஆன், சுன்னா, இஜ்மாவு, கியாஸ், சரியான வழியில் குர்ஆன், சுன்னாவை அணுகுவது இவைதான் ஷரீஅத்தின் ஆதாரங்களாகும்.
ஃபிக்ஹுல் மகாசித்:-
ஷரீஅத் நமக்கு வழங்கியுள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த நோக்கங்களை அறிந்து கொள்வது ‘ஃபிக்ஹுல் மகாசித்’ எனப்படும்.
நுண்ணறிவுத்திறன் மிக்கவன் (ஹகீம்) என்பது அல்லாஹ்வின் திருநாமங்களுள் ஒன்று. இது தொன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. நுண்ணறிவுத்திறன் மிக்க அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை. (ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணத்தை வைத்துள்ளான்.) அதுபோல எந்தச் சட்டத்தையும் அவன் வீணாக காரணமின்றி அமைக்கவில்லை.
வணக்க வழிபாடுகளுக்கும் கூட அவன் ஒரு காரணத்தை வைத்துள்ளான். அதை திருக்குர்ஆனிலும் கூறியுள்ளான்.
தொழுகை கடமையாக்கப் பட்டதற்குக் காரணம். “அது மானக் கேடான, தீய செயல்களை விட்டும் தடுக்கிறது” (29:45) என்கிறது குர்ஆன்.
ஸகாத் கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் “அது அவர்களை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துகிறது” (9:103) என்கிறது,
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் “நீங்கள் இறையச்சம் (தக்வா) உள்ளவர்களாவதற்காக” (2:183) என்கிறது.
ஹஜ் கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் தமக்குரிய பலன்களை அடைவதற்காகவும் அல்லாஹ் உணவாக வழங்கியுள்ள கால்நடைகள் மீது குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ்வின் திருப்பெர் கூறி (குர்பானி கொடுப்பதற்காகவும்” என்கிறது (22:28)
எனவே ஷரீஅத் விதித்துள்ள கடமைகளின் நோக்கங்களை அறிந்து கொள்வதுதான் ஷரீஅத்தை சரியாகவும் அழகாகவும் புரிந்து கொள்வதாக ஆகும். இதன்மூலம் அந்தந்தக் கடமைகளை அதற்குரிய முறைப்படி நிறைவேற்ற முடியும். ஷரீஅத்துக்குச் சம்பந்தமில்லாத நோக்கங்களையும் இலக்குகளையும் கூறி நம்மையும் இதர மக்களையும் சிரமப்படுத்திக் கொள்ளாமலிருக்கவும் முடியும்.
இங்கே இரு உதாரணங்களைக் காண்போம்.
‘ஸதகத்துல் ஃபித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கமென்ன? அந்தப் பெருநாள் தினத்தில் எந்த ஏழையும் யாசகம் கேட்டுத் திரியக் கூடாது என்பதுதான். எனவே உலகின் எல்லாப் பகுதிகளிலும் உணவுப் பொருளை மட்டும் தான் ஃபித்ரா தர்மம் வழங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில் ஒரு நன்மையுமில்லை என்றே நான் கருதுகிறேன். (தமக்கு விருப்பமான உணவை வாங்கிச் சாப்பிட வசதியாக ஏழைகளுக்கு பணமாகவும் ஸதகத்துல் ஃபித்ர்-ஐ தரலாம்.)
இதுபோல, ஹஜ் வாகனத்தில் (அய்யா முத்தஷ்ரீக் எனப்படும் பிரகாசமான நாட்களில், பிறை 11, 12, 13) ஷைத்தானுக்கு கல்லடிப்பதன் நோக்கம் திக்ருல்லாஹ் அல்லாஹ்வை நினைவு கூர்வதுதான். சூரியன் உச்சியிலிருந்து மேற்கே சாய்ந்த (ஸவால்) பிறகுதான் கல்லடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது பொருளற்ற, அர்த்தமற்ற செயல் என்றே நான் கருதுகிறேன். நெருக்கடியில் சிக்கி மிதிபட்டு நூற்றுக்கணக்கான ஹாஜிகள் இறந்தாலும் சரி கல்லடிக்கும் நேரத்தை மாற்றக் கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலுள்ள சிரமங்களை நீக்கி வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கே முக்கிய விஷயமொன்றை கவனிக்க வேண்டும்.
ஷரீஅத் கூறும் இதுபோன்ற காரணங்கள் உறுதியானவை, மாற்ற முடியாதவை. இதில் நாம் இரும்பைப் போல் உறுதியாக இருக்கிறோம். அந்த நோக்கத்தை அடையும் வழிகள் (காலத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப) மாறிக்கொண்டிருக்கும் என்பதில் நாம் பட்டுபோல் மென்மையாக இருக்கிறோம்.
“கைஃப நத்தஆமலு மஅஸ் சுன்னத்தின் நபவிய்யா” (நபிவழியை அணுகுவது எப்படி?) என்ற எனது நூலில் இதை நான் விளக்கமாகக் கூறியுள்ளேன். (அதில் “சுன்னாவின் உறதியான லட்சியமும் மாறிவரும் வழியும்” என்ற அத்தியாயம் உண்டு காண்க.)
ஃபிக்ஹுன் நுசூஸ்:-
குர்ஆன் மற்றும் ஹதீசின் மூலச் சொற்கள் நுசூஸ் எனப்படும்.
திருக்குர்னும் ஹதீசும் எதற்காக வழங்கப்பட்டதோ (மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அருளப்பட்டன) அந்த நோக்கத்தை விளங்கிக் கொண்டு, குர்ஆனிலும் ஹதீசிலும் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டங்களையும் கடமைகளையும் விதிகளையும் விளங்கும் போது அவை வழங்கப்பட்ட மூல நோக்கத்திலிருந்து பிறழாமல் விலகாமல் சிந்திப்பதே ஃபிக்ஹுன் நுசூஸ் எனப்படும்.
நுசூஸ் எனப்படும் குர்ஆன் ஹதீசின் மூலச் சொற்களில் உறுதியான வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு. உறுதியற்ற வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு.
நேரடியான வாக்கியத்தால் கூறப்படும் சட்டங்களுமுண்டு. பல பொருளுக்கு இடமளிக்கும் வாக்கியத்தால் கூறப்படும் சட்டங்களுமுண்டு.
இவற்றுக்கிடையிலான வேறுபாட்டைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். உறுதியான வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களில் ஒளியிலேயே உறுதியற்ற வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களை விளங்கிட வேண்டும்.
நேரடியான வாக்கியத்தால் கூறப்பட்ட முஹ்கம்) சட்டங்களின் ஒளியிலேயே பலபொருள் தரும்படியான வாக்கியத்தால் கூறப்பட்ட (முதஷாபிஹ்) சட்டங்களை விளங்கிட வேண்டும்.
ஃபிக்ஹுன் நுசூஸ் எனப்படும் இக்கலை குர்ஆனைவிட அதிகமாக ஹதீசுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஏனெனில் குர்ஆன், சட்டங்களையும் விதிகளையும் பொதுவாகக் கூறிவிடுகிறது.
ஹதீஸ் அப்படியல்ல சூழல்கள் நிகழ்வுகள் ஆகியவற்றின் பின்னணியில், ஹதீஸ் சட்டங்களைக் கூறுகிறது.
எனவே தான் குர்ஆனை விளங்குவதில் ஏற்படும் தவறுகளைவிட ஹதீஸை விளங்குவதில் அதிகமாக தவறுகள் ஏற்படுகின்றன.
இஃதன்றி, ஹதீசில் கூறப்பட்டுள்ளவை ‘ஷரீஅத்’-இன் சட்டங்களாகவும் இருக்கின்றன. (ஹதீஸ்களை நபி(ஸல்) கூறியதும் அதற்காகத்தான்) ஷரீஅத் சட்டங்களாக அல்லாதவையும் ஹதீசில் கூறப் பட்டுள்ளன.
இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் பேரீத்த மரத்தை ஆணுடன் பெண்ணை இணைப்பதாகக் கருதி ஒட்டுப்போட்டு வைத்திருப்பதைக் கண்டார்கள். “இது என்ன?” என்று நபி (ஸல்) விசாரித்த போது விளைச்சல் அதிகமாகக் கிடைப்பதற்காக இவ்வாறு செய்திருப்பதாக கூறினர் மக்கள்.
இதைக்கேட்ட நபி (ஸல்) “இதனாலெல்லாம் விளைச்சல் அதிகமாகி விடும் என்று நான் கருதவில்லை. இவ்வாறு செய்யாமலிருப்பதே நல்லது” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் அப்படிச் செய்வதை விட்டு விட்டார்கள். அந்த வருட விளைச்சல் குறைந்துவிட்டது. இதுபற்றி மக்கள் நபி(ஸல்) இடம் கூறினார்கள்.
அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள்; “அது அவர்களுக்கு பலன் தருமென்றால் அதைச் செய்யட்டும். நானும் உங்களைப் போன்ற மனிதனே என் கருத்தை நான் கூறினேன். அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் சில கட்டளைகளை நான் கூறினால் அதைப் பின்பற்றுங்கள். ஏனெனில் அல்லாஹ் கூறியதாக எதையும் நான் பொய்யாகக் கூற மாட்டேன். என் சொந்த அபிப்பிராயத்தை நான் கூறினால் நானும் உங்களைப் போன்ற மனிதனே. உங்களின் உலக விஷயத்தை நீங்கள் நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள். (நூல்:-முஸ்லிம்)
இங்கே நபி (ஸல்) பேரீத்த மரங்களை ஒட்டுப் போட வேண்டாம் எனத் தடுத்தது மார்க்கக்கட்டளை அல்ல.
ஹதீசில் கூறப்பட்டுள்ள சில சட்டங்கள் நிரந்தரமாக அமலில் இருக்க வேண்டியவை. வேறு சில சட்டங்கள் இடைக்காலச் சட்டங்கள். ஹதீசில் எல்லோருக்கும் பொதுவாகக் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கூறப்பட்ட சட்டங்களும் ஹதீசில் உண்டு.
துறை சார்ந்த அறிஞர்கள் இதுபற்றி விரிவாக எழுதியுள்ளனர். நானும் இதுபற்றி நூல்கள் எழுதியுள்ளேன். எனவே ‘ஃபிக்ஹுன் நுசூஸ்’ கலையில் இவை பற்றியெல்லாம் நன்கறிந்திருக்க வேண்டும்.
இந்த ‘ஃபிக்ஹுன் நுசூஸ்’ கலைக்கும் ‘ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத்’ (எதுமுதலில்) கலைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. எதற்கு எப்போது முன்னுரிமை தர வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டுமென்றால் ஃபிக்ஹுன் நுசூஸ் கலையும் தெரிந்திருக்க வேண்டும்.
-தொடரும்
தமிழில்:- இல்யாஸ் ரியாஜி

தரீக்குல் குரான் - மவுலவி கே. எம். இல்யாஸ் ரியாஜி

புத்தக வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்
இதற்கு முந்தைய வசனங்களில் இஸ்ரவேலர்கள் இழிவுக்கும் இறைவனின் கோபத்திற்கும் ஏன் ஆளாயினர் என்பதன் காரணங்கள் கூறப்பட்டன.  எனினும் எல்லா இஸ்ரவேலர்களுக்கும் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிவிட்டனர் என்பதல்ல.  அவர்களில் நல்லோரும் இருந்தனர் என்ற தகவலும், அந்த நல்லோருக்கு அவர்கள் செய்த அறச்செயல்களுக்கான கூலி வீணடிக்கப்படாமல் அவர்களுக்கே வழங்கப்படும் என்பதும், யூத, கிறிஸ்தவ, இன்னபிற இனத்தில் பிறந்து விட்டதாலேயே ஒருவன் கதி மோட்சம் பெற்றிட முடியாது; நற்செயல் புரிந்தோரே நற்கூலி பெறமுடியும் என்பதும் இவ்வசனத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
 இவ்வசனம் நான்கு வகையினர் பற்றிப் பேசுகிறது.
1. நம்பிக்கை கொண்டோர்: நம்பிக்கை கொண்டோம் என்று வாயளவில் கூறிக்கொண்டு இதயத்தில் இணை வைப்பையும் இறைமறுப்பையும் சுமந்து திரியும் நயவஞ்சகர்கள் போன்றில்லாமல் உளப்பூர்வமாக ஈமான் கொண்டவர்கள்.
2. யூதர்கள்: இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தினர், யஅகூப் (அலை) அவர்களின் மூத்த புதல்வரான யஹுதா என்பவரின் வழித்தோன்றல்கள் என்பதால் இஸ்ரவேலர்களுக்கு இப்பெயர் வந்தது.  இவர்கள் மூஸா நபிக்குப் பின்னர் இறைத்தூதராக வந்த ஈஸா நபியையோ அவர்களை அடுத்து வந்த இறுதித் திருத்தூதர் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களையோ நம்பிக்கை கொள்ளாமல் யூதர் கொள்கையிலேயே இருந்து கொண்டு “நேர்வழியில் இருப்போர் நாங்களே” எனப் பேசினர்.
3. நஸாரா: இஸ்ரவேலர்களில் ஈஸா நபியைப் பின்பற்றியோர் நஸாரா என அறியப்படுகின்றனர்.  உதவியாளர்கள் என்பது இதன் பொருள்.  இவர்கள் தங்களிடையே பரஸ்பரம் உதவிக் கொள்வதால் இப்பெயர் அவர்களுக்கு வந்தது.  (இப்னு கதீர்)
 அல்லாஹ் கூறுகின்றான்: “ஈஸா எனக்கு அல்லாவுக்காக உதவி செய்வோர் யார் எனக் கேட்டார்.  அதற்கு (அவருடைய) சீடர்கள், அல்லாஹ்வுக்காக நாங்கள் உதவி செய்வோராக (அன்சார்) இருப்போம் எனக் கூறினர்.” (திருக்குர்ஆன் 61:14) இவ்வசனத்தை சான்றாக வைத்து அன்சார் என்று (கிறிஸ்தவர்களுக்கு) ஒரு பெயர் உண்டு.  (குர்த்துபீ, இப்னு கதீர்)
 மேலும் நாஸிரத்(ழிணீக்ஷ்மீக்ஷீணீtலீ) எனும் ஊரில் வாழ்ந்து வந்ததால் இவர்களுக்கு இவ்வாறு (நஸாரா என்று) பெயர் வந்ததாக சிலர் கருதுகின்றனர். (ரூஹுல் மஆனி, இப்னு கதீர்)
 இறைத்தூதர் ஈஸா நபியைப் பின்பற்றும் இவர்கள் ஈஸா நபியை அடுத்து வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நாங்களே நேர்வழி பெற்றோர் எனக் கூறிக்கொண்டனர்.
4. ஸாபிஈன்: நபித்துவத்திற்கு முன்னர் அரபுலகில் வாழ்ந்து கொண்டிருந்த இணை வைப்போரில் ஒரு பிரிவினர்தான் இவர்கள்.  தங்களின் சமுதாயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருப்பது சரிதானா அது மெய்யான மார்க்கம் தானா என்ற சந்தேகம் இவர்களை சூழ்ந்து நின்றது. இதனால் தாங்கள் விரும்பும் ஒரு மார்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.  ஓரிறைக் கோட்பாடே நேர்வழி எனக் கண்டு கொண்டனர்.  இவர்கள் தான் ஸாபிஈன் ஆவர்.  இதுவே சரியான கருத்து.
 மேலும் இப்றாஹீம் (அலை) அவர்கள் காட்டிய பூர்வீக நேர்வழியின் அடிப்படையில் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொண்டு நேர்வழிக்கான எந்த அழைப்பும் (தஃவா) இன்றியே சிலை வணக்கத்தை விட்டு தூர விலகி நின்றனர். இவர்களை ‘முன்னோரின் மார்க்கத்தைக் கைவிட்டோர்’ (ஸாபிஈ) என்று மக்கா வாழ் இணை வைப்போர் அழைத்தனர்.  (பின்னாளில் முஸ்லிம்களையும் இவ்வாறே அவர்கள் அழைத்தனர்) இதனால் அவர்கள் ஸாபிஈன் என்றழைக்கப்பட்டனர்.  சில விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருப்பது போல ஸாபிஈன் என்றால் நட்சத்திரத்தை வணங்குவோர் என்று கூறுவதை விட இதுவே சரியான கருத்து. (நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)
 ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் அக்காலத்தில் அனுப்பப்படும் இறைத்தூதரை ஏற்று நம்ப வேண்டும்.
 மூஸா நபியை இறைத்தூதர் என ஏற்று தவ்ராத் காட்டும் வழி முறைப்படி வாழ்வோர் அக்காலத்தில் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவார்.  இது ஈஸா நபி அவர்கள் இறைத்தூதராக வரும் வரைதான், அவர்கள் வந்த பின்னரும் ‘நான் ஈஸாவை நம்பமாட்டேன்; மூஸா நபியையே நம்புவேன்; தவ்ராத்தை மட்டுமே ஏற்பேன்; இன்ஜீலை ஏற்கமாட்டேன் என்று கூறினால் அப்படிக் கூறுபவன் யூதன் என அறியப்படுவான், ஆனால் வெற்றி பெற்ற இறைநம்பிக்கையாளனாக அவன் ஆக முடியாது.
 இது போலவே, ஈஸா நபியை இறைத்தூதர் என ஏற்று, இன்ஜீல் வேதம் காட்டும் வழியில் வாழ்வோர் அக்காலத்தில் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவர்.  இது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரும் வரைதான்.  அவர்கள் வந்த பின் ஈஸாவையே நம்புவேன்.  முஹம்மது நபியை நம்பமாட்டேன்.  இன்ஜிலையே ஏற்பேன்.  திருக்குர்ஆனை ஏற்கமாட்டேன் என்று கூறினால் அப்படிக் கூறுவோர் நஸாரா (கிறிஸ்தவர்) என அறியப்படுவர்.  ஆனால் வெற்றி பெற்ற இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது.      (இப்னு கதீர்)
 ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: முதலில் இந்த 62வது வசனம் இறங்கியது.  பின்னர், “இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து ஒரு போதும் அது ஏற்கப்படாது.  அவர்கள் மறுமையில் நஷ்டமடைந்தோருடன்தான் இருப்பர்”  (திருக்குர்ஆன் 3:85) என்ற வசனம் இறங்கிற்று.  எனவே 2:62வது வசனத்தின் கருத்தை 3:85 வசனம் மாற்றிவிட்டது.   (நூல்: இப்னு கதீர், குர்த்துபீ)
 இந்த 2:62 வசனத்தின் கருத்து என்னவெனில், மேற்கூறப்பட்ட வகையினரில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி நற்செயல் புரிந்தோருக்குக் கவலை ஏதுமில்லை.  அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.  (மனதில் உள்ள அகீதா) நம்பிக்கைதான் கவனிக்கப்படுகிறது.  இவர் எந்தக் குலத்தில் பிறந்துள்ளார், எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர் என்று கவனித்து நன்மை வழங்கப்படுவதில்லை.  இது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருத்தூதராக வரும் வரைதான்.  அதற்குப் பின்னர் ஈமான் இறுதி வடிவம் பெறுகின்றது.  (எனவே அண்ணல் நபியை ஏற்றுக் கொண்டவர்தான் அல்லாஹ்வின் உண்மையான அடியார் ஆவார்.) (நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)
 அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்ட (வேதத்)தையும் இன்னும் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கி அருளப்பட்டவற்றையும் இன்னும் மூஸா ஈஸா இன்னும் மற்ற நபிமார்கள் ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை (வேதங்)களையும் நாங்கள் நம்பினோம்.  அவர்களில் யாரையும் பிரித்து வேற்றுமை காட்டமாட்டோம்.  அவனுக்கே கட்டுப் பட்ட முஸ்லிம்கள் ஆவோம் என்று (நபியே) கூறுங்கள்.”   (அல்குர்ஆன் 3:84)
 இந்த வசனத்தில் எல்லா இறைத்தூதர்களையும் எல்லா வேதங்களையும் உண்மைதான் என நம்புபவரே உண்மையான இறை நம்பிக்கையாளர் எனத் தெளிவாக்கப்பட்டு விட்டது.  நபிமார்களின் சிலரை ஏற்று சிலரை ஏற்காமல் புறக்கணிப்பவர்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் அல்ல.
 யூதர்கள் ஈஸா நபியை இறைத்தூதர் என ஏற்பதில்லை.  கிறிஸ்தவர்கள் (நஸாராக்கள்) மூஸா நபியை ஏற்பதில்லை.  எனவே இருவரும் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் இல்லை.
 ஆனால் முஸ்லிம்கள் எல்லா இறைத் தூதர்களையும், எல்லா வேதங்களையும் நம்புகின்றனர்.  இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நம்பி அவர்கள் காட்டிய நேர்வழியில் நடக்கின்றனர்.  எனவே இவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் ஆவர், 3:84 வது வசனத்தின்படி,
 மேலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் இரு இனத்தவருமே இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களின் மார்க்கத்தைச் சார்ந்தவரே என்று கூறி வந்தனர்.  இதன் மூலம் தங்களின் கொள்கையே சரியானது என்று இரு தரப்புமே நிறுவிட விரும்பினர்.
 ஆனால் உண்மை என்னவெனில் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோர் இறைத்தூதர்களாக ஆனதும் தவ்ராத், இன்ஜீல் ஆகிய வேதங்கள் இறக்கி அருளப்பட்டதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்துக்குப் பின்னர்தான்.  பிறகு எப்படி அவர்கள் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்திட இயலும்? உங்களுக்கு சிறிது கூட ஞானம் இல்லாத விஷயத்தில் ஏன் விவாதம் செய்கின்றீர்கள் என்று அவ்விரு சமுதாயத்தினரையும் பார்த்து அல்லாஹ் கேட்கின்றான்.
 அதுமட்டுமல்ல இப்றாஹீம் (அலை) அவர்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை.  இணை வைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.  அல்லாஹ்விடம் முற்றிலும் சரணடைந்து நேர்மையான முஸ்லிமாக இருந்தார்.  மேலும் மனித சமுதாயத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் யாரென்றால் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும் இந்த இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மற்றும் அல்லாஹ்வையும் இந்த இறுதித்தூதரை நம்புவோரும் தானே அன்றி இந்த இறுதித்தூதரைப் புறக்கணித்து வாழ்கின்ற யூத, கிறிஸ்தவர்கள் இப்ராஹீம் நபிக்கு  நெருக்கமானவர்களாக ஆகிவிட முடியாது என்றும் அல்லாஹ் திட்டவட்டமாக கூறிவிட்டான்.
 இது தொடர்பான தகவல்கள் திருக்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஆலஇம்ரானில் 65 முதல் 68 வரையுள்ள வசனங்களில் காணலாம்.
 இந்த வசனங்களிலும் (இறுதித்தூதர் உள்ளிட்ட எல்லா இறைத்தூதர்களையும் நம்ப வேண்டும் என்ற) அகீதாவின் அடிப்படையிலேயே நற்கூலி வழங்கப்படும்; யூத, கிறிஸ்தவ இனத்தில் பிறந்து விட்டதாலேயே அவர் நேர்வழி பெற்றவராக கருதப்பட மாட்டார் என்று தெளிவாக்கி யுள்ளான் அல்லாஹ்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

அருந்ததியர் சமுதாயம் அறுதி விடுதலையைப் பெறுமா?


புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்

சென்னையில் துப்புரவு தொழிலாளி ஒருவர்  “Manhole” என்றழைக்கப்படும் திறப்புக் குழிக்குள் மூழ்கி இறந்தார் என்றொரு செய்தி மக்களை வந்து தாக்கிற்று.
அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தாம் இந்த மலம் அள்ளும் தொழில் முதற்கொண்டு எல்லா துப்புரவு பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையைச் சொன்னால் அவர்களை வேறு தொழில்களை செய்திட அனுமதிப்பதில்லை, இந்திய சமுதாய அமைப்பு.
இந்த மரணம் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்ற ஒன்றல்ல. ஆண்டொன்றிற்கு 22,120 அருந்ததியர் இப்படி இறந்து போகின்றார்கள். அல்லது இந்திய சமுதாய அமைப்பால் கொலை செய்யப்படுகின்றார்கள்.
இந்தியாவில் 10 லட்சம் அருந்ததியர் இந்தப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் 95 விழுக்காடுகள் பெண்கள் (
Safai -Karmachari andolam. website
)“சதா சர்வகாலமும் துர்நாற்றம் , ஆரோக்கியமற்ற அருவெருப்பான  சூழ்நிலை இவற்றில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பதால் அருந்ததியர் சமுதாயத்தின் சராசரி வாழ்நாள் மிகவும் சுருங்கிப்போய் விடுகின்றது என்கின்றன“ ஆய்வுகள்.
ஆரோக்கியமற்ற சூழலில் வாழ்வதால் பல கொடுமையான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றார்கள்.
டெல்லி மாநகரில் 1,26,000 திறப்புக்குழிகளும் சென்னையில் 46,000 திறப்புக்குழிகளும் இருக்கின்றன. இவற்றில் மூழ்கி அடைப்பெடுக்கும் கடினமான பணி இந்தச் சமுதாயத்தின் திருப்பணி. இதில் தான் இவர்கள் தங்களை இழக்கின்றார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் சமுதாயத்தின் தீண்டத்தகாதவர்களாகவும் அருவெருப்பானவர்களாகவும் ஒதுக்கி வைக்கப் படுகின்றார்கள். இவர்களின் உயிருக்காக உரிமைக்காக கண்ணியத்திற்காக வாதாடுவோர் போராடுவோர் மிகக் குறைவு.
தமிழகத்தில் தந்தை பெரியாரின் சீரிய தொண்டால் அவர்களின் பிரச்சனைகள் மக்கள் மன்றத்தில் வந்தன.
நீதியின் குரல்கள் ஒலித்தன. அதன் பயனாகப் பதவிகள் பல அவர்களுக்கு கிடைத்தன. இதனால் 1946களிலேயே தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக பேரவைத்தலைவராக தலித் பெருங்குடி மக்களைச் சார்ந்த சுப்பிரமணிப்பிள்ளை   அமர்த்தப்பட்டார்கள். 1955ஆம் ஆண்டு வரை அதாவது ஏறத்தாழ பத்தாண்டு காலம் பேரவைத்தலைவராக வீற்றிருந்தார்.
கலைஞர் ஆட்சியிலும் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரே துணை சபாநாயகராக இருந்தார். அருந்ததியர் சமுதாயத்தவர்கள் இடஒதுக்கீட்டைப் பெற்றார்கள்.
அதிமுக ஆட்சியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த தனபாலன் அவர்கள் துணை சபாநாயகராக அமர்த்தப்பட்டார். இப்போது அவர் சபாநாயகராக அதாவது பேரவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராட்டுக்கள்.
வழங்கப்படும் பதவிகள் அருந்ததியர் சமுதாயத்தை அதாவது தலித் சமுதாயத்தின் இழிவை நீக்கிட வில்லை என்பது தாம் நமது இந்திய ஜனநாயகத்தில் கண்டு வரும் கசப்பான உண்மை.
இந்தியாவின் குடியரசு தலைவர், தலைமை நீதிபதி, அமைச்சர் பதவிகள், நாடாளுமன்ற சபாநாயகர் என தலித் பெருங்குடி மக்கள் அலங்கரிக்காத பதவிகளே இல்லை.
ஆனால் இவையெல்லாம் அவர்களுக்கு “மனிதன்” என்ற அடிப்படை கண்ணியத்தை பெற்றுத்தந்திடவில்லை.
தமிழகத்தின் பேரவைத்தலைவராக பதவி ஏற்ற தனபாலன் அவர்களை வாழ்த்திப்பேசிடும் போது முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சிவசண்முகம் பிள்ளை அவர்களை மேற்கோள் காட்டி ஓர் உண்மையை பொட்டில் அறைந்தார் போல் சொன்னார். அது “மன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மட்டும் தாழ்த்தப்பட்டோருக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தந்துவிடாது. மற்ற சமுதாய மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் தான் தாழ்த்தப்பட்டோர் தடையேதுமின்றி முன்னேற முடியும்” (முரசொலி, 11.10.2012)
மற்ற சமுதாயங்களின் மனமாற்றம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை சாட்சியம்.
இதற்கு பரமக்குடி துப்பாக்கிச் சூடு இன்றைய தடயம். இதனால் தான் இந்த மக்களின் கண்ணியத்திற்காக தன் வாழ்நாளை செலவிட்ட தந்தை பெரியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த இழிநிலை நிரந்தரமாக அகலும் என்றார்கள்.
1947 மார்ச்சு திங்கள் 18ஆம் நாள் திருச்சியில் ரெயில்வே தொழிலாளர்களிடம் உரை நிகழ்த்திய தந்தை பெரியார் அவர்கள் இஸ்லாத்தை சாதியின் பெயரால் கற்பிக்கப்படும் அநியாயங்களுக்கு தீர்வாக சொன்னார்கள். சிலர் அதை எதிர்த்து சில கடிதங்களை பெரியாருக்கு எழுதினார்கள்.
அவற்றிற்கு பெரியார் இப்படி பதில் சொன்னார்கள்.
“இஸ்லாத்தில் ஒரே ஒரு இறைவன் தான், அவனுக்கு உருவம் கிடையாது. அங்கே சாதி இல்லை. பேதங்கள் இல்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இல்லை. இவையே திராவிடத்தின் அடிப்படை கொள்கை. பல தெய்வ கொள்கையில் ஆரியர்கள்  பல வசதிகளையும் நன்மைகளையும் அடைந்துள்ளார்கள். அதே நேரத்தில் திராவிடர்கள் பல தீமைகளைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். ஆரியர்கள் இஸ்லாத்தை வெறுத்தார்கள். காரணம்  சூத்திரர்களுக்கும் பறையர்களுக்கும் நன்மையை ஊட்டுகின்றது இஸ்லாம்.
எல்லாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் பிராமணர்களுமில்லை. பல தெய்வ கொள்கையுமில்லை....இதனால் இந்துக்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்க அவர்கள் இஸ்லாத்திற்கெதிராகப் பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார்கள்.” Source : The way to solvation : By Dr. B.R. Ambedkar & Periyar E.V.Ramasamy : AMAN Publications : Delhi : 53 (Promoted by Prof. A.M. Dharmalingam)
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற செயல்முறையை இஸ்லாம் தெளிவான அடிப்படைகளின் கீழ் அமைக்கின்றது. இறைவன் இதனை இப்படி பிரகடனப்படுத்துகின்றான். “மனிதர்களே ! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்தே அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள்...அல்குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 1
இன்னும் இறைவன் கூறுகின்றான்:
“ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)
அல்லாஹ்வை அஞ்சும் ஒழுக்கத்தில் உயர்ந்தோரே உயர்ந்தோர், மற்றெல்லாரும் தாழ்ந்தோர்.
இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : “அரபுக்களை விட அரபி அல்லாதவர்கள் உயர்ந்தவர்களல்ல, அரபி அல்லாதவர்களை விட அரபுக்கள் உயர்ந்தவர்களல்ல”
இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இன இழிவுகளுக்கெதிராக நிரந்தரமாக வாகை கண்டனர். இந்த இஸ்லாத்தை ஏற்போம்! இழிவுகளை அகற்றுவோம். இன்ஷா அல்லாஹ்
குறிப்பு :
தந்தை பெரியார் அவர்கள் திராவிடர்களின் கொள்கையும் ஏகத்துவமேயென குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனை ஆய்வுகள் மூலம் நிரூபித்தால் இன்ஷா அல்லாஹ் மொத்த திராவிடமும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படலாம். அறிஞர் பசுங்கதிர் எம்.கே.ஈ. மௌலானா அவர்கள் எழுதிய “சேதுமுதல் சிந்து வரை” என்ற நூலில் பல தகவல்கள் உள்ளன. ஆய்வு செய்திட விரும்புவோர்க்கு. - எம்.ஜி.எம்