எடை போடுவது எப்படி ? புத்தக வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்
இதுவரை இவ்வுலக நன்மை தீமைகளைப் பற்றிப் பார்த்தோம். இனி மறுமையின் நன்மைகளையும் தீமைகளையும் பார்ப்போம்.
நம்முடைய மறுமை வாழ்வில் நமக்கு எது பலன் தரும் எது இடர் தரும் என்பதை குர்ஆன் சுன்னாவைக் கொண்டே அறியமுடியும். ஈருலக நன்மைகளும் தீமைகளும் பலபடித்தரங்களில் உள்ளன. உயர்ந்தவை, தாழ்ந்தவை, நடுத் தரமானவை என பலபடித்தரங்கள் அவற்றில் உள்ளன. ஒரு செயல் (நன்மை, தீமை) உயர்ந்ததா, தாழ்ந்ததா, நடுத்தரமானதா என்பதை முடிவு செய்வதில் துறை சார்ந்த அறிஞர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதுமுண்டு. கருத்து வேற்றுமை ஏற்படுவதுமுண்டு.
மார்க்கம் கட்டளையிட்டுள்ள எல்லா செயல்களிலும் இம்மை நலனோ மறுமை நலனோ இருக்கும் அல்லது ஈருலக நலன் இருக்கும். மார்க்கம் தடுத்துள்ள எல்லா (தீய) செயல்களிலும் இம்மை அல்லது மறுமையில் தீமை இருக்கம் அல்லது ஈருலகத் தீமை இருக்கும்.
ஒரு செயலால் நல்லதோர் சீர்திருத்தம் ஏற்பட்டால் அது சிறந்த செயல். ஒரு செயலால் மோசமான கேடு விளைந்தால் அது மட்டமான செயல். இறைக் கோட்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வை, இறை நம்பிக்கை (ஈமான்) இறைவனுக்குக் கட்டுப்படுவது ஆகியவற்றை விட மேன்மை மிக்கது வேறொன்றுமில்லை. ஏனெனில் இதர நன்மைகள் அனைத்துக்கும் இவைதான் அடிப்படை.
இறைக்கோட்பாட்டைச் சரியாகப் புரியாமலிருப்பது, (குஃப்ர்) இறை மறுப்பு. பாவங்கள், இறைவனுக்கு அடங்க மறுப்பது ஆகியவற்றை விட மட்டமானது வேறொன்றுமில்லை. ஏனெனில் இதரத் தீமைகள் அனைத்துக்கும் இவைதான் காரணம்.
இவ்வுலகில் செய்யும் நன்மைகளில் தரங்களுக்கு ஏற்ப மறுமையில் கூலியும் பல தரத்தில் வழங்கப்படும். இவ்வுலகில் செய்யும் தீமைகளின் தரங்களுக்கு ஏற்ப மறுமையின் தண்டனையும் பல தரத்தில் வழங்கப்படும். சீர்திருத்தப் பணிகளையும் அதற்குக் காரணமானவற்றையும் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதும் சீர் கேடான செயல்களையும் அதற்குக் காரணமானவற்றையும் செய்யக் கூடாது என்ற எச்சரிப்பதும் தான் திருக்குர்ஆனின் முக்கிய நோக்கம்.
சீர்திருத்தப் பணிகள் மூன்று வகையுண்டு. (1) மார்க்கம் அணுமதிக்கும் சீர்திருத்தப்பணி (2) சுன்னத்தான சீர்திருத்தப்பணி (3) கடமையான சீர்திருத்தப்பணி.
சீர்கேடுகள் இரு வகையுண்டு. (1) மக்ரூஹ் வெறுக்கத் தக்க சீர்கேடு (2) ஹராம்-தடைசெய்யப்பட்ட சீர்கேடு.
மறுமை நலன் என்பது, நிரந்தர கவனத்தைப் பெறுவதும் மாண்புமிக்க இறைவனின் திருமுகம் பார்த்து அவனின் திருப்தியைப் பெறுவதும் ஆகும். இது ஈடு இணையற்ற பாக்கியம்.
மறுமையில் ஏற்படும் கேடு என்பது, நிரந்தர நரகத்தைப் பெறுவதும் இறைவனின் திருமுகம் காணமுடியாமல் இறைக் கோபத்துக்கு இலக்காகி நிற்பதும் ஆகும். இது கடும் தண்டனை.
நாம் இம்மையில் சில நற்செயல்களைச் செய்வதால் (சில இடையூறுகள் வரலாம். அவற்றைச் சகித்துக் கொண்டு அந்த நற்செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன்மூலம்) மறுமையில் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதுபோல இம்மையில் சில தீமைகளைச் செய்வதால் (நமக்கு சுகமும் மகிழ்ச்சியும் கிடைக்கலாம். அவற்றைப் புறக்கணித்து விட்டு தீமையை விட்டு விலகவில்லை எனில்) மறுமையில் கடும் தண்டனை கிடைக்கும்.
எனவே (இம்மையில் சுகமளிக்கும் ஒரு பாவம் மறுமையில் தண்டனை பெறக் காரணமாகிறது. மறுமையில் நற்கூலியும் இறை திருப்தியும் பெறக் காரணமாக அமையும் ஒரு நன்மை இம்மையில் சுகமளிப்பதில்லை.) நலனும் கேடும் இம்மை மறுமையைப் பொறுத்து வேறுபடுகிறது.
ஈருலக நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்கும் வழி:-
முன்னர் இவ்வுலக நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்தோம். பின்னர் மறுமையின் நன்மைகளையும் தீமைகளையும் பற்றி அறிந்தோம்.
இனி ஈருலக நன்மைகளையும் தீமைகளையும் அதைக் கண்டுபிடிக்கும் வழிகளையும் பார்ப்போம்.
ஷரிஅத் எவற்றை ஈருலக நன்மைகள் தீமைகள் என்று கூறுகின்றதோ அவை தான் ஈருலக நன்மைகள் தீமைகள்.
ஒரு செயல் நன்மையா தீமையா என்பதை ஷரீஅத் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்று நமக்குத் தோன்றினால் ஷரீஅத்தின் ஆதாரங்களைக் கொண்டு அதை நாம் கண்டுபிடிக்கலாம்.
குர்ஆன், சுன்னா, இஜ்மாவு, கியாஸ், சரியான வழியில் குர்ஆன், சுன்னாவை அணுகுவது இவைதான் ஷரீஅத்தின் ஆதாரங்களாகும்.
ஃபிக்ஹுல் மகாசித்:-
ஷரீஅத் நமக்கு வழங்கியுள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. அந்த நோக்கங்களை அறிந்து கொள்வது ‘ஃபிக்ஹுல் மகாசித்’ எனப்படும்.
நுண்ணறிவுத்திறன் மிக்கவன் (ஹகீம்) என்பது அல்லாஹ்வின் திருநாமங்களுள் ஒன்று. இது தொன்னூறுக்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. நுண்ணறிவுத்திறன் மிக்க அல்லாஹ் எதையும் வீணாகப் படைக்கவில்லை. (ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணத்தை வைத்துள்ளான்.) அதுபோல எந்தச் சட்டத்தையும் அவன் வீணாக காரணமின்றி அமைக்கவில்லை.
வணக்க வழிபாடுகளுக்கும் கூட அவன் ஒரு காரணத்தை வைத்துள்ளான். அதை திருக்குர்ஆனிலும் கூறியுள்ளான்.
தொழுகை கடமையாக்கப் பட்டதற்குக் காரணம். “அது மானக் கேடான, தீய செயல்களை விட்டும் தடுக்கிறது” (29:45) என்கிறது குர்ஆன்.
ஸகாத் கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் “அது அவர்களை உள்ளும் புறமும் சுத்தப்படுத்துகிறது” (9:103) என்கிறது,
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் “நீங்கள் இறையச்சம் (தக்வா) உள்ளவர்களாவதற்காக” (2:183) என்கிறது.
ஹஜ் கடமையாக்கப்பட்டதற்குக் காரணம் அவர்கள் தமக்குரிய பலன்களை அடைவதற்காகவும் அல்லாஹ் உணவாக வழங்கியுள்ள கால்நடைகள் மீது குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ்வின் திருப்பெர் கூறி (குர்பானி கொடுப்பதற்காகவும்” என்கிறது (22:28)
எனவே ஷரீஅத் விதித்துள்ள கடமைகளின் நோக்கங்களை அறிந்து கொள்வதுதான் ஷரீஅத்தை சரியாகவும் அழகாகவும் புரிந்து கொள்வதாக ஆகும். இதன்மூலம் அந்தந்தக் கடமைகளை அதற்குரிய முறைப்படி நிறைவேற்ற முடியும். ஷரீஅத்துக்குச் சம்பந்தமில்லாத நோக்கங்களையும் இலக்குகளையும் கூறி நம்மையும் இதர மக்களையும் சிரமப்படுத்திக் கொள்ளாமலிருக்கவும் முடியும்.
இங்கே இரு உதாரணங்களைக் காண்போம்.
‘ஸதகத்துல் ஃபித்ர்’ எனும் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கமென்ன? அந்தப் பெருநாள் தினத்தில் எந்த ஏழையும் யாசகம் கேட்டுத் திரியக் கூடாது என்பதுதான். எனவே உலகின் எல்லாப் பகுதிகளிலும் உணவுப் பொருளை மட்டும் தான் ஃபித்ரா தர்மம் வழங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவதில் ஒரு நன்மையுமில்லை என்றே நான் கருதுகிறேன். (தமக்கு விருப்பமான உணவை வாங்கிச் சாப்பிட வசதியாக ஏழைகளுக்கு பணமாகவும் ஸதகத்துல் ஃபித்ர்-ஐ தரலாம்.)
இதுபோல, ஹஜ் வாகனத்தில் (அய்யா முத்தஷ்ரீக் எனப்படும் பிரகாசமான நாட்களில், பிறை 11, 12, 13) ஷைத்தானுக்கு கல்லடிப்பதன் நோக்கம் திக்ருல்லாஹ் அல்லாஹ்வை நினைவு கூர்வதுதான். சூரியன் உச்சியிலிருந்து மேற்கே சாய்ந்த (ஸவால்) பிறகுதான் கல்லடிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது பொருளற்ற, அர்த்தமற்ற செயல் என்றே நான் கருதுகிறேன். நெருக்கடியில் சிக்கி மிதிபட்டு நூற்றுக்கணக்கான ஹாஜிகள் இறந்தாலும் சரி கல்லடிக்கும் நேரத்தை மாற்றக் கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதிலுள்ள சிரமங்களை நீக்கி வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கே முக்கிய விஷயமொன்றை கவனிக்க வேண்டும்.
ஷரீஅத் கூறும் இதுபோன்ற காரணங்கள் உறுதியானவை, மாற்ற முடியாதவை. இதில் நாம் இரும்பைப் போல் உறுதியாக இருக்கிறோம். அந்த நோக்கத்தை அடையும் வழிகள் (காலத்துக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப) மாறிக்கொண்டிருக்கும் என்பதில் நாம் பட்டுபோல் மென்மையாக இருக்கிறோம்.
“கைஃப நத்தஆமலு மஅஸ் சுன்னத்தின் நபவிய்யா” (நபிவழியை அணுகுவது எப்படி?) என்ற எனது நூலில் இதை நான் விளக்கமாகக் கூறியுள்ளேன். (அதில் “சுன்னாவின் உறதியான லட்சியமும் மாறிவரும் வழியும்” என்ற அத்தியாயம் உண்டு காண்க.)
ஃபிக்ஹுன் நுசூஸ்:-
குர்ஆன் மற்றும் ஹதீசின் மூலச் சொற்கள் நுசூஸ் எனப்படும்.
திருக்குர்னும் ஹதீசும் எதற்காக வழங்கப்பட்டதோ (மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அருளப்பட்டன) அந்த நோக்கத்தை விளங்கிக் கொண்டு, குர்ஆனிலும் ஹதீசிலும் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டங்களையும் கடமைகளையும் விதிகளையும் விளங்கும் போது அவை வழங்கப்பட்ட மூல நோக்கத்திலிருந்து பிறழாமல் விலகாமல் சிந்திப்பதே ஃபிக்ஹுன் நுசூஸ் எனப்படும்.
நுசூஸ் எனப்படும் குர்ஆன் ஹதீசின் மூலச் சொற்களில் உறுதியான வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு. உறுதியற்ற வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு.
நேரடியான வாக்கியத்தால் கூறப்படும் சட்டங்களுமுண்டு. பல பொருளுக்கு இடமளிக்கும் வாக்கியத்தால் கூறப்படும் சட்டங்களுமுண்டு.
இவற்றுக்கிடையிலான வேறுபாட்டைக் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். உறுதியான வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களில் ஒளியிலேயே உறுதியற்ற வாக்கிய அமைப்பில் கூறப்பட்ட சட்டங்களை விளங்கிட வேண்டும்.
நேரடியான வாக்கியத்தால் கூறப்பட்ட முஹ்கம்) சட்டங்களின் ஒளியிலேயே பலபொருள் தரும்படியான வாக்கியத்தால் கூறப்பட்ட (முதஷாபிஹ்) சட்டங்களை விளங்கிட வேண்டும்.
ஃபிக்ஹுன் நுசூஸ் எனப்படும் இக்கலை குர்ஆனைவிட அதிகமாக ஹதீசுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஏனெனில் குர்ஆன், சட்டங்களையும் விதிகளையும் பொதுவாகக் கூறிவிடுகிறது.
ஹதீஸ் அப்படியல்ல சூழல்கள் நிகழ்வுகள் ஆகியவற்றின் பின்னணியில், ஹதீஸ் சட்டங்களைக் கூறுகிறது.
எனவே தான் குர்ஆனை விளங்குவதில் ஏற்படும் தவறுகளைவிட ஹதீஸை விளங்குவதில் அதிகமாக தவறுகள் ஏற்படுகின்றன.
இஃதன்றி, ஹதீசில் கூறப்பட்டுள்ளவை ‘ஷரீஅத்’-இன் சட்டங்களாகவும் இருக்கின்றன. (ஹதீஸ்களை நபி(ஸல்) கூறியதும் அதற்காகத்தான்) ஷரீஅத் சட்டங்களாக அல்லாதவையும் ஹதீசில் கூறப் பட்டுள்ளன.
இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) வந்த போது அங்குள்ள மக்கள் பேரீத்த மரத்தை ஆணுடன் பெண்ணை இணைப்பதாகக் கருதி ஒட்டுப்போட்டு வைத்திருப்பதைக் கண்டார்கள். “இது என்ன?” என்று நபி (ஸல்) விசாரித்த போது விளைச்சல் அதிகமாகக் கிடைப்பதற்காக இவ்வாறு செய்திருப்பதாக கூறினர் மக்கள்.
இதைக்கேட்ட நபி (ஸல்) “இதனாலெல்லாம் விளைச்சல் அதிகமாகி விடும் என்று நான் கருதவில்லை. இவ்வாறு செய்யாமலிருப்பதே நல்லது” என்று கூறினார்கள். இதைக் கேட்ட அம்மக்கள் அப்படிச் செய்வதை விட்டு விட்டார்கள். அந்த வருட விளைச்சல் குறைந்துவிட்டது. இதுபற்றி மக்கள் நபி(ஸல்) இடம் கூறினார்கள்.
அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள்; “அது அவர்களுக்கு பலன் தருமென்றால் அதைச் செய்யட்டும். நானும் உங்களைப் போன்ற மனிதனே என் கருத்தை நான் கூறினேன். அல்லாஹ்விடமிருந்து ஏதேனும் சில கட்டளைகளை நான் கூறினால் அதைப் பின்பற்றுங்கள். ஏனெனில் அல்லாஹ் கூறியதாக எதையும் நான் பொய்யாகக் கூற மாட்டேன். என் சொந்த அபிப்பிராயத்தை நான் கூறினால் நானும் உங்களைப் போன்ற மனிதனே. உங்களின் உலக விஷயத்தை நீங்கள் நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள். (நூல்:-முஸ்லிம்)
இங்கே நபி (ஸல்) பேரீத்த மரங்களை ஒட்டுப் போட வேண்டாம் எனத் தடுத்தது மார்க்கக்கட்டளை அல்ல.
ஹதீசில் கூறப்பட்டுள்ள சில சட்டங்கள் நிரந்தரமாக அமலில் இருக்க வேண்டியவை. வேறு சில சட்டங்கள் இடைக்காலச் சட்டங்கள். ஹதீசில் எல்லோருக்கும் பொதுவாகக் கூறப்பட்ட சட்டங்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கூறப்பட்ட சட்டங்களும் ஹதீசில் உண்டு.
துறை சார்ந்த அறிஞர்கள் இதுபற்றி விரிவாக எழுதியுள்ளனர். நானும் இதுபற்றி நூல்கள் எழுதியுள்ளேன். எனவே ‘ஃபிக்ஹுன் நுசூஸ்’ கலையில் இவை பற்றியெல்லாம் நன்கறிந்திருக்க வேண்டும்.
இந்த ‘ஃபிக்ஹுன் நுசூஸ்’ கலைக்கும் ‘ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத்’ (எதுமுதலில்) கலைக்கும் நெருக்கமான தொடர்புண்டு. எதற்கு எப்போது முன்னுரிமை தர வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டுமென்றால் ஃபிக்ஹுன் நுசூஸ் கலையும் தெரிந்திருக்க வேண்டும்.
-தொடரும்
தமிழில்:- இல்யாஸ் ரியாஜி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக