வெள்ளி, 2 ஜனவரி, 2015

எது முதலில்? இடம், காலம், சூழ்நிலை இவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு பணிகள் முன்னுரிமை பெருகின்றன.




வைகறை வெளிச்சம் நவம்பர் 2014 இதழ்

இடம், காலம், சூழ்நிலை இவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு பணிகள் முன்னுரிமை பெருகின்றன.

அதிமுக்கிய விடயம் ஒன்றை தெளிவுப்படுத்திட விரும்புகிறேன் இப்போது.பல்வேறு நன்மைகளில் எதை முதலில் செய்ய வேண்டும். எது சிறப்பான செயல் என்பதையெல்லாம் நாம் கூறி விடும்போது ஒன்றை நீங்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

முன்னுரிமை தரப்பட வேண்டியவை என்றும் மிகச் சிறப்பு வாய்ந்தவை என்றும் நாம் கூறி வருபவற்றில் பெரும்பாலானவை எல்லாக் கால கட்டத்துக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும், எல்லா இடங்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை என்று கருதிவிடாதீர்கள்.இடம், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நன்மைகளின் தரங்கள் மாறுகின்றன. 

இதுவரை நாம் பார்த்தவற்றில் பெரும்பாலானவை இப்படிப்பட்டவைதான். காலங்கள், தனிமனிதர்கள், பருவ மாறுதல்கள், இவைகள்தான் எவை சிறந்த செயல்கள் என்பதை தீர்மானிக்கின்றன. 

இதற்கு சில உதாரணங்களைத் தற்போது நாம் பார்ப்போம்.விவசாயம், சுயதொழில், வியாபாரம், இவற்றுள் எது ஏற்றமானது, அல்லாஹ்விடம் அதிக நன்மைகளை பெற்றுத் தருவது என்பதை முடிவு செய்வதில் அறிஞர்கள் மத்தியில் மாறுபட்டக் கருத்துகள் இருக்கின்றன.இவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நபிமொழிகள்தான் இவ்வாறான கருத்து வேறுபாடு எழுந்திடக் காரணமாக இருக்கின்றன.

பின் வரும் நபிமொழி விவசாயத்தின் சிறப்பைக் கூறுகிறது.`` யாரேனும் ஒரு முஸ்லிம் ஏதேனுமொரு செடியை நட்டு வைத்தாலோ அல்லது விவசாயம் செய்தாலோ அதிலிருந்து ஏதேனுமொரு பறவையோ மனிதனோ மிருகமோ சாப்பிட்டால் அது அந்த முஸ்லிமுக்கு தர்மத்தின் நன்மையத் தருகிறது ``( அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி, முஸ்லிம் )

பின்வரும் நபிமொழி சுயதொழிலின் சிறப்பை எடுத்தியம்புகிறது.`` தன் சுய உழைப்பினால் [கிடைக்கும் வருமானத்திலிருந்து] உண்பவரை விட சிறந்த உணவை யாரும் உண்பதில்லை. இறைத்தூதர் தாவூது (அலை) அவர்கள் சுயதொழில் செய்து சாப்பிட்டு வந்தார்கள். ``( அறிவிப்பாளர் : மிகதாம் (ரழி) நூல் : அஹ்மது, புஹாரி )

பின்வரும் நபிமொழி வியாபாரத்தின் மேன்மையை விளக்குகிறது.`` நேர்மையான வியாபாரி மறுமையில் இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், உயிர்த்தியாகிகளுடன் எழுப்பப்படுவார். `` (அறிவிப்பாளர் : அபூசயீத் (ரழி) நூல் : திர்மீதி )

இந்த நபிமொழிகளை முன் வைத்து அறிஞர்கள் இம்மூன்றில் எது ஏற்றமானது என்பதை முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் இப்படியெல்லாம் வரையறுப்பதில்லை. மாறாக, சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவே முடிவு செய்ய முடியும் எங்கின்றனர்.

அதாவது உணவுப் பொருள் கள் குறைந்து விடும்போது, அன்றாட உணவுக்கே சமுதாயம் அல்லல்படும்போது மற்றவைகளை விட விவசாயமே சிறந்தது. ஏனென்றால் உணவின்றி வாழ்வில்லை. நம் அருகிலிருக்கும் தீமைகளில் மிகக் கொடியது பசிதான்.

எனவே பசியிலிருந்து சமுதாயத்தைக் காப்பதும் அதன் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இப்போதுள்ள சூழ்நிலைகளில் முன்னுரிமை தரப்படவேண்டியதாகும். இதில் ஏற்படும் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் இன்முகத்தோடு எதிர் கொண்டு சகிப்புத் தன்மையுடன் இதில் ஈடுபடுவது மிகச் சிறந்த சேவையாகும் எங்கின்றனர் அறிஞர்கள்.

உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகமாகிவிட்டால் எல்லோரும் ஏதேனுமொரு விவசாயத்தில் ஈடுபட்டுவிட்டால் தொழில் துறையை நோக்கி சமுதாயத்தின் தேவை திரும்பும்.இப்போது (யூதர்கள், கிருத்துவர்கள், சிலை வணங்கிகள்) போன்ற மாற்றுக் கொள்கையுடையோரைச் சார்ந்திருக்கும் அவலம் போக்கிடவும் வேலை வாய்ப்பை பெருக்கிடவும் ( போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதன் மூலம் ) முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தையும்தன் அரசின் எல்லைகளை காத்திடவும் உற்பத்தித் துறையில் முஸ்லிம் சமுதாயம் தன்னிறைவு பெற்றிடவும் தொழில் துறைக்கு முன்னுரிமை தந்திட வேண்டும்.

விவசாயமும் தொழிலும் எங்கும் வியாபித்துவிட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் தானியங்களையும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கொண்டு செல்லும் தேவை ஏற்படும். இது உற்பத்தியாளார்களுக்கும், பணியாளர் களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறுதியான பாலம். இதை ஒரு வியாபாரிதான் செய்கிறார்.எந்த பொருள் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுமோ அந்தப் பொருளைப் பதுக்கி வைத்து கொள்ளை இலாபம் அடிக்கும் தீய நோக்கம் கொண்ட பேராசைக் காரர்கள் விற்பனைச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்போதும் சரக்குகளின் விலையை ஏற்றி இறக்கி விளையாடு வோர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போதும் வியாபாரம் செய்வதே ஏற்றமானது.

குறிப்பாக கொடுக்கல் வாங்களுக்காக, வியாபாரத்துக்காக தடம் புரளாத நேர்மையாளர்கள் இதில் ஈடுபட வேண்டும். தர்மம் வழங்குதல், தொழுகையை நிலைநாட்டுதல், இறைவனைத் துதித்தல் என தமது அறப்பணிகளை உலக அற்ப செல்வங்களுக்காக புரக்கணிக்காத நல்லவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும்.

நாம் வாழும் இந்த காலம் தொழில் நுட்பப் புரட்சியின் காலம். டெக்னாலஜி, எனப்படும் தொழில் நுட்பம் உலகையே வளைத்துப்பிடித்துத் தன் கையில் வைத்திருக்கின்றது.நம் சமுதாயம் தொழில் நுட்பத்துறையில் முனைப்புடன் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம். இதில் நாம் பின் தங்கவோ பதுங்கவோ கூடாது. அறிவாயுதம் ஏந்தி களம் புக வேண்டும்.

அல்லாஹ் நமக்கு இஸ்லாத்தின் மூலம் கண்ணியம் தந்தான். பேரருள் புரிந்தான். இந்தப் பேரருளை உலகெங்கும் பரப்பிட இக்காலத்தில் இதுவே உகந்த வழி. முஸ்லிம் சமுதாயம் இது விடயத்தில் நிராயுத பாணியாகவே நிற்கிறது. பரிதாபம். பரிதாபம்.இஸ்லாத்தை பரப்பிடும் இலட்சியத்தை அடைந்திட தொழில் நுட்பத் துறையின் போதனை முறைகளில் நாம் படிப்படியாக முன்னேற வேண்டும். மற்றவர்களை விட நாமே இதில் முன்னணியிலிருக்க வேண்டும். இதற்கு தேவையான கல்விகளை கற்கவேண்டும்.இது இஸ்லாத்தில் அவசியத்திலும் அவசியம். காலத்தின் கட்டாயம். இது ஒரு மார்க்க கடமை.

குறிப்பாக கொடுக்கல் வாங்களுக்காக, வியாபாரத்துக்காக தடம் புரளாத நேரமையாளர்கள் இதில் ஈடுபட வேண்டும். தர்மம் வழங்குதல், தொழுகையை நிலைநாட்டுதல், இறைவனைத் துதித்தல் என தமது அறப்பணிகளை உலக அற்ப செல்வங்களுக்காக புரக்கணிக்காத நல்லவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னிரிமை தரவேண்டும்.

தமிழ் வடிவம் : கே.எம். இல்யாஸ் ரியாஜி.

முஸ்லிம்களின் வீழ்ச்சியால் உலகம் இழந்தது என்ன? இந்திய சமுதாய சீரமைப்பில் இஸ்லாத்தின் பங்கு!




நவம்பர் 2014


தொடர் = 34
இந்திய சமுதாய சீரமைப்பில் இஸ்லாத்தின் பங்கு!

அபுல் ஹசன் அலீ நத்வீ




கிலாஃபத்தை வீழ்த்திய முஸ்லிம் பெயர்தாங்கி முஸ்தபா கமால் அதாஅல் துர்க்


மொழிபெயர்ப்பு : அஹ்மது ஜலாலுத்தீன் நத்வீ.

இஸ்லாம் வென்ற பிறகு கிருஸ்த்துவத்தை தனது மார்க்கமாகக் கொண்ட ஐரோப்பாவிலும், சிலை வணக்கத்தை மதமாகக் கொண்டிருந்த இந்தியாவிலும் இஸ்லாம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியது.இவ்விரு பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை வழிமுறைகளிலும் பண்பாடுகளிலும் சமூக கலாச்சாரத்திலும் பெரும் சீர்த்திருத்தங்கள் ஏற்பட இஸ்லாமே காரணம். [Source : Infulenc of Islam on Indian Culture. By : Dr.Tarachand]
கலீஃபா அப்துல் மசீத் 2


ஓரிறைக் கோட்பாட்டின் பக்கம் மக்களைத் திருப்பியது இஸ்லாம். பெண்களுக்கு மரியாதையும், உரிமைகளையும் கிடைத்திட இஸ்லாம் காரணமாக இருந்தது. மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இல்லை. அனைவரும் சமமே என்ற பிரகடனம் நிலை பெற்றதில் இஸ்லாத்தின் பங்கு மிக முக்கியம்.ஷரியத் எனப்படும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் அதன் நாகரிகமும் உலகத்துக்கு அறிமுகப்படுத்திய எல்ல சீர்த்திருத்தங்களும் மக்களை வந்தடைந்தன.

வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர். இவர் இந்திய தூதராக எகிப்தில் பணியாற்றியவர். இந்திய மக்களின் சிந்தனையிலும் இந்து மதத்திலும் இஸ்லாத்தின் ஏகத்துவக் கோட்பாடு எப்படிப்பட்ட சீர் திருத்தங்களை ஏற்படுத்தியது என்பதை எடுத்துரைக்கின்றார்.இஸ்லாம் இந்தியாவிற்கு வந்திருந்த காலக்கட்டங்களில் இந்து மதத்தில் அது சீர் திருத்தங்களை ஏற்படுத்தியது மறுக்க இயலாத உண்மை. இந்து மதத்தில் ஓரிறைச் சிந்தனை ஏற்பட்டது இஸ்லாத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டதே.இந்து மதத்தின் தலைவர்களும் சிந்தனையாளர்களும் தம் கடவுள்களுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிக் கொண்டாலும் கூட வணங்கிட தகுதியுள்ள இறைவன் ஒருவனே! அவனே வெற்றியும், மீட்பும் தர வல்லவன் என்று அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறினர்.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நிலவிய போது உருவான மதங்கள், கொள்கைகளில் இஸ்லாம் ஏற்படுத்திய ஓரிறைக் கோட்பாட்டின் தாக்கம் இருந்தது. பக்தி மார்க்கம் மற்றும் கபீர்தாஸ் - ன் சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். [Source : A survey Of Indian History. P.132] 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறுகிறார். " வடமேற்கு இந்தியா வழி முஸ்லிம் போராளிகள் இந்தியாவுக்குள் வந்ததும் இந்தியாவிற்கு இஸ்லாம் வந்ததும் இந்திய வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வு. இந்து சமுகத்தில் வியாபித்திருந்த சீர்கேடுகளை வெறுத்தது இஸ்லாம். பிறப்பினால் வரும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, சாதிக்கூறுகள் இவற்றை இஸ்லாம் எதிர்த்தது. உலக வாழ்வை வெறுக்கும் துற்வுக் கோட்பாடு இந்தியாவில் பரவியிருந்தது. இதையும் கண்டித்தது இஸ்லாம்.

"இந்தியா இப்படி இருந்த போது இஸ்லாம் தந்த சகோதரத்துவம், சமத்துவம் இவற்றில் முஸ்லிம்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். இது இந்துக்களின் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதனின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மக்கள், சமத்துவம் மறுக்கப்பட்ட சமுதாயத்தினர் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாம் தந்த பலனை அனுபவித்தார்கள் " [Source : Discovery Of India]

நமது காலத்து அறிஞர் என்.சி.மேத்தா அவர்கள் தனது " இந்தியக் கலாச்சாரமும் இஸ்லாமும் " எனும் நூலில் கூறுகிறார்." பண்டைய நாகரிகங்கள் வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் ஆளாகி நின்ற நேரத்தில் இந்திய மக்களின் வாழ்வைக் கவ்விப் பிடித்திருந்த இருள்களைக் கிழித்திடும் இஸ்லாம் ஒளிவெள்ளமாய் இந்தியாவுக்குள் வந்தது. தெள்ளத் தெளிவான அதன் இலட்சியங்கள் இந்திய மக்களின் சிந்தனைகளின் உறுதியாக இடம் பிடித்தன. அரசியல் களத்தில் இஸ்லாம் பெற்ற வெற்றிகளை விட சிந்தனைத் தளத்தில் அது பெற்ற வெற்றி பெரியது. மகத்தானது. 

இது இந்தியாவில் மாத்திரமல்ல. இஸ்லாம் புகுந்த எந்த நாடுகளிலும் இப்படிப்பட்ட வெற்றிகளையே அது பெற்றது. "இந்தியாவில் இஸ்லாத்தின் வரலாறு அதன் அரசாங்கத்தோடு பின்னிப் பிணைந்தது. எனவே சத்திய இஸ்லாத்தின் மெய் வடிவம் எவருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டே இருக்கிறது. மனித குலத்திற்கு அது வழங்கிய உபகாரங்களும் அன்பளிப்புகளும் மனித பார்வைகளில் இருந்து மறைந்தே போய் விட்டது. இது நமக்கு ஒரு துரதிருஷ்டம்தாம் " [Source ; Indian civilization and ISlam ]

இன்றைய உலகில் வனப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு கொள்கையும் எந்த ஒரு நாகரிகமும் இஸ்லாத்திடமிருந்தும் முஸ்லிம் களிடமிருந்தும் சிறியதாகவோ பெரியதாகவோ எந்த பலனையும் அடைந்திடவில்லை என்று கூறிட இயலுமா? இயலவே இயலாது.

அறிஞர் ராபர்ட் பிரிஃபால்ட் அவர்கள் கூருகிறார் :" முன்னேறிய ஐரோப்பாவின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அதில் இஸ்லாமிய நாகரிகத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது. இஸ்லாம் தந்த சீர் திருத்தத்தின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கிறது. "[ Source : The Macking Of humanity.P.190 ]

அதே நூலில் மற்றொரு இடத்தில் அவர் இப்படி கூறுகிறார் : " அரபு மக்களின் பெருமைமிகு கல்விகளுள் ஒன்றான இயற்பியல்தான் ஐரோப்பாவிற்க்கு மறுவாழ்வைத் தந்தது என்றில்லை இஸ்லாம் தன் ஒளிச்சுடரை ஐரோப்பாவிற்குள் பாய்ச்சிய நாள்தொட்டே எல்லாத் துறைகளிலும் அது ஏராளமான சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. " [Source : The Macking Of humanity.P.202 ] 

இப்படியே போய்க் கொண்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆம் நதிகளை அதன் போக்கிலேயே ஓடவிட்டால் அதன் அழகே தனிதான். அல்லவா? வில்லைத் தயாரித்தவனிடமே கொடுத்து அதை பயன்படுத்திடச் சொன்னால் என்ன அருமையாக அதை அவன் பயன்படுத்துவான் அல்லவா?இதுபோல மனித குலத்தை வழி நடத்துவதற்காகவே படைக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்திடமே உலகத்தலைமை இருந்திருந்தால் மனித குலம் எல்லாமும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திருக்கும். மனித குலத்தின் வரலாறு சோதனைகளாலும் வேதனைகளாலும் அதிர்ச்சிகளாலும் சூழப்பட்டு இருக்கிறதே இப்போது! இப்படியா இருந்திருக்கும் முஸ்லிம்கள் உலகத்தலைமை ஏற்றிருந்தால்?

இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோமே அப்படி இருந்திருக்காது மனித வரலாறு. மனித வரலாறு அழகு மிளிரும் பேரும் புகழும் பெற்றுத் திகழும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும். அனைவரும் கண்ணும் கருத்தும் குளிர வாழ்ந்திருப்பார்கள். என்ன செய்ய? யாரைக் குறை சொல்ல முடியும்? விதி வேறுமாதிரியல்லவா? அமைந்துவிட்டது. ஆம் முஸ்லிம்களிடத்திலேயே வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.......

தொடரும்......



தமிழ் வடிவம் : கே.எம். இல்யாஸ் ரியாஜி.

உண்மை விளம்பி சுத்திர தீப் சக்கரவர்த்தி மரணம்!



சுப்ரதீப் சக்ரவர்த்தி



சுத்திர தீப் சக்கரவர்த்தி ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். கோத்ராவில் 2002ஆம் ஆண்டு நடந்த இரயில் எரிப்பை மையப்படுத்தித்தான் குஜராத் 2002 இனப்படுகொலைகளை சங்கப்பரிவாரம் நடத்திக்காட்டிற்று. அதற்கு இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதனை 2002 குஜராத் இனப்படுகொலை என்றும், மோடியின் மனித இனத்திற்கெதிரான குற்றம் என்றும் உலகெங்கும் அழைக்கிறார்கள்.


இந்த இனப்படுகொலைகளுக்காக மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி சிறையில் அடைக்கலாம் என ஏ.ஜி. நூரானி என்ற மூத்த வழக்கறிஞரும், பிரபலமான பத்திரிக்கையாளரும் தொடர்ந்து வாதிட்டு வருகின்றார்.ஆனால் ஜனநாயகம் எனும் கபடநாடகத்தில் சிறையிலிருக்க வேண்டிய மோடி சிம்மாசனத்தில் இருக்கின்றார். 

குஜராத்தில் 20,000 முஸ்லிம்களை கொலை செய்யப்பட்ட மொத்த நிகழ்விற்கும் குஜராத்தில் கோத்ரா என்ற இடத்தில் உள்ள இரயில் நிலையத்தைத்தான் காரணம் காட்டினார்கள்.இந்த இரயில் நிலையத்திலிருந்து சற்று வெளியேதான் சபர்பதி எக்ஸ்பிரஸ் என்ற இரயிலின் இரண்டு பெட்டிகள் எரிக்கப்பட்டன. இந்த இரயில் பெட்டிகளை கொளுத்தியதாக முஸ்லிம்கள் மேல் பழி. படுகொலைகள். 

ஆனால் இரயில் பெட்டிகள் எரிந்தது உள்ளிருப்பு என்பது பின்னர் தெரியவந்தது. இதனை மிகவும் ஆதாரப்பூர்வமான ஆவணப்படமாக தயார் செய்தவர் சுத்திர தீப் சக்கரவர்த்தி.அதில் வெளியிலிருந்து இரயில் பெட்டியை நோக்கி பெட்ரோலை வீசி இருக்கவியலாது ஏனெனில் இரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்த இடம் மிகவும் மேடானது. ஒரு மலை முகட்டின் மேல் நின்றுக் கொண்டிருந்த இரயில் பெட்டியின் மீது கீழிருந்து யாரும் பெட் ரோலை ஊற்றி இருக்கவியலாது என்பதை ஆணித்தரமாக படக் காட்சிகளின் மூலம் நிருபித்தார்.

சுத்திர தீப் சக்கரவர்த்தியின் ஆவணப்படத்தை பார்த்தவர்கள் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பு என்பது ஒரு போலி நாடகம் என்பதை புரிந்துக் கொண்டார்கள்.இதில் சுத்திர தீப் சக்கரவத்தியிடம் பாராட்ட வேண்டிய விவகாரம் என்னவென்றால், அவர் இந்த ஆவணப்படத்தை மோடியின் ஆட்சியின் போதே குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் திரையிட்டுக் காட்டினார். தங்களுடைய சதித்திட்டமும், உண்மையும் உலகமக்களுக்குத் தெரிந்திட வந்ததைக் கண்டு, ஆத்திரமடைந்த சங்கபரிவாரத்தினர் - அதாவது மோடியின் வகையறாக்கள் அவரை தாக்கினார்கள். இரத்தம் சிந்த வைத்தார்கள். அவருடைய திரைப்பட கருவிகளை உடைத்தெரிந்தார்கள்.அத்தனையையும் தாங்கினார் சுத்திர தீப் சக்கரவர்த்தி. ஆனாலும் தனது முயற்சியை கைவிடவில்லை. தனது ஆவணப்படத்தை நாட்டின் முக்கியத் தலை நகரங்களிலெல்லாம் வெளியிட்டுக்கொண்டே வந்தார். அப்போது அவர் சென்னை வந்திருந்த போது நாம் அவரை வரவேற்று, சிறியதொரு நிதி உதவியையும் செய்தோம். அவருடைய பேட்டி ஒன்றும் நம்முடைய பத்திரிக்கையில் வெளிவந்திருந்தது.

பின்னர் உலகின் பல அரங்கங்களிலும் இந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் சுத்திரதீப் சக்கரவர்த்தி அவர்கள்.இவர் கோத்ராவில் நடந்த இரயில் எரிப்பு பற்றிய மாற்றுச் சிந்தனையை ஏற்படுத்திய பின்னர், சங்கபரிவாரத்தின் உண்மை முகம் உலகுக்கு வெளிச்சமானது. தொடர்ந்து லல்லுபிராசத் அவர்கள், நீதி, Î.C..பானர்ஜி அவர்களின் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை நியமித்தார்கள்.

அந்த கமிஷன் " இரயில் பெட்டியின் உள்ளேயிருந்துதான் தீப்பிடித்திருக்கின்றது. அது வெளியே உள்ளவர்களின் வேலை அல்ல. " என்பதை வெளிப்படுத்தியது.இதற்கு முன்னால் டெல்லியில் ஒரு இரயிலில் இதே போல் தீப்பிடித்திருக்கின்றது, என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி முஸ்லிம்களுக்கும், கோத்ரா இரயில் நிலையத்திற்கு அருகாமையில் நடந்த இரயில் பெட்டி எரிப்பிற்கும், எந்த சம்பந்தமுமில்லை என்பதை தெளிவுப்படுத்தினார். 

ஆனால் இந்த கமிஷனின் அறிக்கை வெளியே வந்து விடாமல் தடுத்து விட்டார்கள். மோடிப்பேரவையாக இயங்கிய குஜராத் நீதி மன்றங்கள் அதை மறுத்து விட்டன. இத்தனையையும் இவருடைய " கோத்ர அட்டாக் " [gotra attack] எனும் ஆவணப்படம் சாதித்துக் காட்டியது. ஆனால் இரயில் பெட்டிகளில் தீவைத்தது, அதில் பயணம் செய்த கரசேவகர்களா என்பதை பற்றி ஆய்வு செய்திட அனுமதிக்கவில்லை அதிகார வர்க்கத்தினர். 

எதிர் தாக்குதல்கள்இந்தியாவில் முஸ்லிம்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களைக் கொலை செய்தால் அதைக் காவல் துறை அதிகாரிகள் செய்தால் அவர்களுக்கு பதவி உயர்வும், பதக்கங்களும், பாராட்டுக்களும் கிடைக்கும். இப்படி பல இளைஞர்கள் குஜராத்திலும், டெல்லியிலும், இப்போது தமிழகத்திலும் கொலை செய்யப்படுக்கின்றார்கள். இவற்றிற்கு எதிர் தாக்குதல் என்று பெயர். இந்த அநீதிகளுக்கு எதிராக ஆவணப்படங்களை தயாரித்தார்கள் சுத்திர தீப் சக்கரவர்த்தி அவர்கள். 

அந்த ஆவணப்படத்தின் குறுந்தகடுகளை விநியோகிப்பதிலும் தாருல் இஸ்லாம் தனது பங்களிப்புகளை தாராளமாக தந்தது. அந்த ஆவணப்படத்திற்கு காவிகளுக்காக நடக்கும் எதிர் தாக்குதல் என்ற கொலைகள் என்று பெயர் வைத்திருந்தார்.

வழக்கறிஞர்கள் கொலை இந்திய தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் மராட்டிய மாநிலம்தான். இங்கே உள்ள சித்பவன் எனும் இடத்திலிருந்துதான் அத்தனை சங்கப் பரிவார பாசிஸ்ட்டுகளும் பெருக்கெடுத்து வருகின்றார்கள். விடுதலையடைந்த இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே, பாபரி மஸ்ஜித்தை இடிக்க வகை செய்து தந்த தீவிரவாதி நரசிம்மராவ் ( இவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தார்) இவர்களையும் மும்பைத் தாக்குதலை நடத்திய அபிநவ் பாரத் என்ற இந்துத்துவ அமைப்பையும், சிவசேனா என்ற அமைப்பையும் தந்த மாநிலம் மராட்டிய மாநிலம்.

இப்படி பாசிசத்தின் பிறப்பிடமாகிய மராட்டிய மாநிலத்தில் இன்னொரு தீவிரவாதம் தொடங்கியது. அது அப்பாவி முஸ்லிம்களுக்காக வாதாடும் முஸ்லிம் வழக்கறிஞர்களை சுட்டு கொலை செய்தது. மும்பையில் மஜீத் மேமன் என்ற வழக்கறிஞர் மும்பையில் பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம்களுக்காக தானாக முன்வந்து வழக்காடினார். 

அவரை கொல்வதற்காக துப்பாக்கியால் சுட்டார்கள். அவருடைய மெய்க்காப்பாளர் அந்த துப்பாக்கிக் குண்டை தன் மார்பில் வாங்கி ஷஹீதானார். மேமன் உயிர்த் தப்பினார். ( இன்னா லில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம் அவனிடமே மீளூவோம் ).

அதே போல் பல அப்பாவி முஸ்லிம்களுக்காக வாதாடி அவர்களை சிறையிலிருந்து மீட்டவர் ஷஹீத் அப்பாஸ் ஹாஸ்மி. அவர் மீது சரமாரியாக குண்டு மழையைப் பொழிந்து கொலை செய்தார்கள். சங்கப்பரிவாரத்தினர். இவற்றையெல்லாம் ஒன்றிணைத்து ஓர் ஆவணப்படத்தைத் தயார் செய்தார் சுத்திர தீப் சக்கரவர்த்தி!  அதற்கு " நீதிமன்றத்திற்கு வெளியே முடிந்த தீர்ப்புகள் " () என பெயர் வைத்து ஆவணப்படம் ஒன்றைத் தயார் செய்தார். சங்கப்பரிவாரத்தின் வெறியாட்டங்களை உலகறிய செய்தார்.
துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான ஷாஹித் ஆஸ்மி

"குற்றமற்றவர்கள்" நீதிமன்றங்கள்நமது மத்திய உளவுத்துறை அதன் கட்டுப்பாட்டில் இயங்கிடும் காவல்துறையினர் இவர்களையெல்லாம் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்வையும், அதன் மூலம், அவர்களைச் சார்ந்து வாழும் பெற்றோர்களையும் சின்னாப் பின்னமாக்கி சீரழித்து வரு கின்றார்கள். இதற்கு அவர்கள் கையாளும் தந்திரங்களுள் ஒன்று ஓர் இளைஞனைப் பிடித்து நாடெல்லாம் ந்டக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இவர்களே காரணம் என்று குற்றப்பத்திரிக்கையில் கூறிவிடுவார்கள்.இதனால் இந்த இளைஞர்கள் நாடெங்கும் உள்ள நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்தி தங்களை விடுவித்திட வேண்டிய இமாலயப் பொறுப்பை சுமக்கிறார்கள். 

பெரும்பாலும் நமது தாய்மார்கள் தான் இந்தப் பெரும் பொறுப்பை சுமக்கிறார்கள். இவர்கள் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டாலும் அவர்களை குற்ற வாளிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் தான் உளவுத்துறையும், காவல் துறையும் பார்க்கிறது. விடுதலை அடைந்தவர்களை வேறு ஏதேனும் வழக்குகளில் இணைத்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுவந்திட ஓர் ஆவணப்படத்தைத் தயார் செய்தார் சுத்திர தீப் சக்கர வர்த்தி. அதற்கு " புயலுக்குப் பின் அமைதி இல்லை " என்ற பெயரில் வெளியிட்டார். 

முசாபர் நகர் அநீதி[உத்திரப்பிரதேசம்]உத்திரப்பிரதேசத்தில் 130 கலவரங்களை நடத்தி 72 நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றினார்கள் பாசிச பரிவாராத்தினர்.இதில் மிகப்பெரிய படுகொலையாக நடந்தது முசாபர் நகர் கலவரம். அங்கே வாழ்ந்த முஸ்லிம்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப் பட்டார்கள்.அவ்வாறு வெளியேற்றப் பட்டவர்களின் எண்ணிக்கை அகதிகள் முகாம்களில் 63,000 பேர் என முடிந்தது. முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறினால்தான் மீண்டும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குச் செல்ல முடியும் என்ற நிலை. ஆனால் முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிட முடியாது என்று கூறிவிட்டார்கள்.

அதனால் அவர்கள் தங்கள் சொந்த இல்லங்களுக்கும், வீடுகளுக்கும் திரும்பிட இயலவில்லை.முஸ்லிம்கள் ஐந்து இலட்சம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தங்கள் இல்லங்களுக்குச் சென்றிடக் கூடாது. என முலாயம் சிங் - இன் அரசு எழுதி வாங்கியது. விடுதலையடைந்த இந்தியாவில் இதனையத்ததோர் கோர நிகழ்வு நடந்ததே இல்லை. 

இந்த முலாயம் சிங் - இன் அரசுக்குத்தான் முஸ்லிம்கள் சட்டசபை தேர்தலில் தங்கள் வாக்குகளை அள்ளித் தந்தார்கள்.அடுத்து முலாயம் சிங் - இன் சார்பில் உத்திரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்தும் அகிலேஷ் யாதவ், "144" ஊரடங்கு உத்தரவு செயலிலிருக்கும் போதே சங்கப்பரிவாரம். ஒரு லட்சம் இந்துத் தீவிரவாதிகளை ஒன்று திரட்டி வகுப்புக் கலவரங்களை நடத்தி முடித்தார்கள். அகதிகளாகவும் ஆனார்கள் முஸ்லிம்கள். 

அந்த அகதிகள் முகாம்களில் கூட நிம்மதியாக வாழ்ந்திட விடவில்லை அகிலேஷ் யாதவ். அகதிகள் முகாம்கள் தனது அரசுக்கு அவமானமாகவும் உலக அளவில் நெருக்கடிகள் வருவதாகவும் கூறினார். முஸ்லிம்கள் அனைவரும் உடனே அகதிகள் முகாம்களைக் காலிசெய்துவிட்டு வெளியேறிட வேண்டும் என்றார். மாற்று ஏற்பாடுகள் எதையும் செய்யவில்லை.அகதிகள் முகாம்களிலிருந்தும் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமான இடங்களில் சென்று தங்கினார்கள். அவையெல்லாம் அரசாங்க இடம் என்றும், அவற்றில் தங்கி இருப்பதின் மூலம் அவர்கள் அரசாங்க இடத்தை ஆக்கிரமித்து விட்டார்கள் என்றும் வழக்குகளை பதிவு செய்தார்கள். இதுதான் கஷ்டங்களிலும், நஷ்டங்களிலும் தங்களது கட்சிக்கு வாக்களித்த முஸ்லிம்களுக்கு தந்த சன்மானம். 

இந்த உத்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 69 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் சடலங்களாக வீற்றிருக்கின்றார்கள்.ஜனநாயகம்! அதிகமான சட்டசபை இடங்கள் இவையெல்லாம் அகதிகள் முகாம்களில் கூட உதவி செய்யாது.என்பதன் நிதர்சனமான எடுத்துக்காட்டுதான் உத்திரபிரதேசமும் முசாபர் நகர்களும். இவற்றையெல்லாம் ஆவணப்படமாக்கினார் சுத்திர தீப் சக்கரவர்த்தி....ஆனால் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.இந்த ஆவணப்படம் வெளிவராத நிலையில் தனது 42 வது வயதில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் ஆகஸ்ட் 25 ஆம் நாள் 2014 மரணமடைந்தார்கள். சுத்திர தீப் சக்கரவர்த்தி. அடுக்கடுக்கான அநீதிகளுக்கு ஆளாகி நிற்கும், முஸ்லிம்களின் அவலங்களை மக்கள் மன்றத்திற்கு தந்துக் கொண்டிருந்த விளக்கு அணைந்தது.-எம்.ஜி.எம்.

வியாழன், 1 ஜனவரி, 2015

மேற்குவங்கம் பர்துவான் குண்டுவெடிப்புகிரிமினல்களின் கைவண்ணம்.





பாரதீய ஜனதா கட்சி தேர்தகள் வரும் இடங்களில் கலவரமே எங்கள் வழி என்பதை நிரூபித்து வருகின்றது. ஓட்டுக்காக குண்டுவெடிப்பையும் நடத்திட இவை தயங்குவதில்லை. பாட்னாவில் வைத்த குண்டுகள்தாம் பீகாரிலும், ஆந்திராவிலும் அவர்களுக்கு பலன்களை பெற்றுத் தந்துள்ளது.2006 - இல் மேற்கு வங்கத்தில் பர்துவான் எனும் இடத்தில் குண்டு ஒன்று வெடித்தது. அது குண்டுகளைத் தயாரித்து கொண்டிருந்தவர்களின் வியாபார இடம். குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தவர்கள், குண்டு வெடிப்பில் உயிரை இழந்தவர்கள் என அத்தனை பேரும் முஸ்லிம்கள். இது பாரதீய ஜனதா கட்சியை மேற்கு வங்கத்தில் வளர்க்க வழிதெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அழகான வாய்ப்பாகப் போனது.குண்டுகள் வெடித்த உடனேயே வங்காளதேச தீவிரவாதம் இந்தியாவுக்குள் பாய்ந்து வந்துவிட்டது எனக்கூப்பாடு போட்டு அரசியலில் இலாபங்களைத் தேடிக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார்கள். நமது உளவுத்துறை இதற்கான தாளங்களை போட்டது. மக்கள் பெருமதிப்போடு போற்றி வந்த ' ழிமிகி 'என்ற நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்ஸியும் இதற்கு துணைபோனது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.பர்துவானில் நடந்த குண்டுவெடிப்பு அந்த மொஹல்லாவில் வாழ்ந்த முஸ்லிம்களையும் ஏன் மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஆகிய மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களையும் மத்திய உளவுத்துறையையும், தேசிய புலானாய்வுக் குழுவையும் ஏவிவிட்டு கபளிகரப்படுத்தினார்கள். பின்னர் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்பதால் வங்காள தேசம் என்ற நமது அண்டை நாட்டுக்குச் சென்று ஆய்வுகளை நடத்துகிறோம் எனக் கூறி அங்கே சென்றுள்ளார்கள்.இந்த கபளிகரத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள ஒரு மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த மாணவன் ஒருவனை நெருப்பிட்டுக் கொளுத்த முயற்சி செய்துள்ளார்கள். அங்கே இருக்கும் அரசு இஸ்லாத்திற்கு எதிரானது. அது நமது உளவுத்துறைக்கு பெரிய அளவில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. மேற்குவங்க முஸ்லிம்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்ட டெல்லியிலுள்ள மஜ்லிசே முஷாவரத் என்ற அமைப்பு களமிறங்கி உண்மைகளைக் கண்டறிந்திட முன்வந்தது.இந்த குழு கண்டறிந்த உண்மைகளை இங்கே தருகிறோம் :1. குண்டுகளை தயாரித்த காங்கிரகார்க் இல்லத்தில் குண்டுகளை தயாரிக்கும் பணி பல மாதங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இது அந்தப் பகுதியுலுள்ள காவல் நிலையத்திற்கு நன்றாகத் தெரியும். அதே போல் அங்குள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் நன்றாகத் தெரியும். எந்த அளவுக்கு என்றால் ஓர் அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே கட்டிடத்தில் காங்கிரகார்க் இல்லத்தில் தனது கட்சி அலுவலகத்தைத் தொடங்கியது. இதனால் காவல்துறையினர் மிகவும் அதிகமாக வந்து போகும் இடங்களில் ஒன்று இந்த காக்கிரா கார்க் இல்லம்.



2. குண்டுகளைத் தயாரித்தவர்கள் அவற்றை அரசியல்வாதிகளுக்கும், குண்டர்களுக்கும் விற்று வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். இந்த உண்மையை அனைவரும் அறிவார்கள். குண்டுகளைத் தயாரித்தவர்கள் அரசியல் வாதிகளும், குண்டர்களும் தந்த ஆதரவில் சொ வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்தாம். இதனால் அவர்கள் அந்த பகுதியில் மிகுந்த ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருந்தாரகள். இந்த உண்மைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டே ஊடகங்கள் முஸ்லிம்களை மிகவும் கேவலமாக சித்தரித்துக் கொண்டிருக்கின்றது.4. பாரதீய ஜனதா கட்சியினருக்கும் இந்தக் கூட்டத்தோடு அதாவது குண்டு தயாரிக்கும் கூட்டத்தோடு தொடர்பு உண்டு என எல்லோரும் கூறுகின்றார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் கட்சியாகிய திரினாமுல் காங்கிரஸ் தான் ஆட்சி செலுத்தி வருகின்றது.அதனிடமிருந்து பிர்பூம், பர்துவான் மற்றும் நாதியா ஆகிய மாவட்டங்களைக் கைப்பற்றிட பாரதீய ஜனதா கட்சி முயற்சி செய்து வருகின்றது. இந்த மாவட்டங்களில் தன்னை நிலைபெறச் செய்திட குண்டு வெடிப்பு அரசியல் பெரிய அளவில் உதவுமென பாரதீய ஜனதா கட்சி நம்புகிறது.இதனால் 2016 தேர்தலை மையப்படுத்தி இதுபோன்ற நிகழ்ச்சிகள் இன்னும் அதிகமாக நடக்கலாம். என மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அஞ்சுகின்றார்கள்.- அல் - இந்தியா மஜ்லிசே முஷாவரத் 155, Kasayar Road, Kolkata – 700017