 |
| பாகல்பூர் கலவரத்தில் காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக |
மூன்று காவல் துறை இயக்குனர்கள்
இணைந்து ஓர் அறிக்கையை சமர்ப்பிக்கின்றார்கள்.அந்த அறிக்கையை இந்தியன்
எக்ஸ்பிரஸ் நாளிதழின் மும்பை நிருபர் சுமிதா
நாயர் இப்படி தலைப்பிட்டு எழுதினார்
:'' முஸ்லிம்களின் பார்வையில் நாம் ( காவல் துறையினர்
) முஸ்லிம்களுக்கு எதிரான மாச்சர்யம் கொண்டவர்கள்,
வகுப்புவாதிகள், ஊழல்மயமானவர்கள் '' முஸ்லிம்கள் காவல்துறையை எப்படி பார்க்கின்றனர். அல்லது
காவல் துறை முஸ்லிம்களை எப்படி
பார்க்கின்றது என்பது குறித்த அறிக்கையை
தயாரித்தவர்கள் மூன்று மாநிலங்களில் காவல்துறையை
இயக்குபவர்கள். DGP Director General of Police. அவர்களில்
ஒருவர் நமது தமிழகத்தின் காவல்துறை
இயக்குநரான இராமானுஜம்
ஆவார்.
 |
| Ramanujam |
 |
| Deo Raj |
 |
| Sanjeev Dayal |
காவல்துறையினர்
முஸ்லிம்களை எப்படி நடத்துகின்றார்கள் என்பதை
நன்றாக உணர்ந்த காவல்துறை இயக்குநர்களில் நமது இயக்குநரும் இருக்கின்றார்
என்பது தமிழ் நாட்டை சார்ந்த
நமக்குப் பெருமை சேர்க்கின்றது என்றாலும்
கீழ்கடையில் என்ன நடக்கின்றது என்பது
நம்மை நெகிழச் செய்கின்றது.
நமது காவல்துறை இயக்குநர் கே. இராமனுஜம் அவர்களுடன்
இந்த அறிக்கையை அதாவது முஸ்லிம்கள் காவல்
துறையை எப்படி பார்க்கின்றார்கள் என்ற
அறிக்கையை - தயாரித்த இன்னும் இரண்டு காவல் துறை
இயக்குநர்கள்:1. திரு. சஞ்சீவ் தயால்
இவர் மராட்டிய காவல்துறை இயக்குநராக இருந்தவர்.2. திரு. தியோராஜ் நாகர்
இவர் உத்திரபிரதேச காவல் துறையின் இயக்குநராக
இருந்தவர்.நடுவு நிலையான இந்த
மூன்று உள்ளங்கைகளோடு ஒரு உளவுத்துறை அதிகாரியும்
உண்டு. இவர்கள் 2013 ஆம் ஆண்டு இந்த
அறிக்கை அவ்வாண்டு நடந்த அகில இந்திய
இயக்குநர்களின் மாநாட்டில் சமர்ப்பித்தார்கள்.முஸ்லிம்கள் காவல் துறையை எப்படி
பார்க்கின்றார்கள் என்ற ஆய்வு சிறுபான்மையினர்
விவகாரங்களில் காவல் துறையினரை அக்கறையுடன்
நடந்துக் கொள்ள செய்திட ஓரு
வியூகம்.பல நல்ல பரிந்துரைகளை
உள்ளடக்கிய இந்த அறிக்கையை இரவு
நேர பாரதீய கட்சியாகிய காங்கிரஸ்
அரசு, தன்னுடைய கல்லாப்பெட்டிக்குள் வைத்து இறுக்கப் பூட்டிப்
போட்டு விட்டது. முஸ்லிம்களும், சிறுபான்மையினரும் மிகவும் குறைவாகவே காவல் துறையில், அங்கம்
வகிக்கின்றார்கள். இதனால், அவர்களுக்கு காவல்துறை மீதுள்ள அவநம்பிக்கை அதிகரித்து வருகின்றது. அவர்களின் அவ நம்பிக்கையை உறுதிபடுத்தும்
அளவில்தான் பல்வேறு வகுப்புக் கலவரங்களின் போதும் காவல்துறையினர் நடந்துக்கொண்டார்கள்.
முஸ்லிம்கள் மிகவும் முக்கியமானவர்கள் காரணம் அவர்கள் மிகப்பெரிய
சிறுபான்மையினர். இதன் மூலம் மக்கள் தொகையில் ஒரு பெரும் பகுதியினர். பெரும்பாலான மாநிலங்களில்
இதுவே நிலை. இதனால் காவல்துறையினரின் மனநிலையிலும் போக்கிலும், மாற்றங்களை விரைந்து
நிறைவேற்றிட வேண்டிய ஒன்று.
அதன் மூலம் காவல்துறையின் மீது
அவர்கள் இழந்துள்ள நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டும்.இந்த வகையில் முதன் முதலாக காவல்துறையின்
அனைத்து மட்டங் களிலும், மனநிலையில் மாற்றங்களைக் கொண்டுவந்திட வேண்டும். இதன் மூலம்
முஸ்லிம்களுக்கெதிராக நிலவும் மாச்சார்யத்தை உடைத்திட வேண்டும். இந்த தீர்வின் முதல்
படி - முதல் நடவடிக்கை காவல் துறையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு மாச்சர்யம் நிலவுகிறது
என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதேபோல காவல் துறையில் உள்மாற்றங்கள் வேண்டும் என்பதையும்
ஒத்துக்கொள்ளவேண்டும்.
இந்த நிலையை மாற்றுவதில் நாம்
காலம் தாழ்த்திட இயலாது. காரணம் இந்த மனநிலை காவல் காப்பதன் பல முக்கிய பகுதிகளைப்
பாதிக்கின்றது. இதில் தீவிரவாதத்திற்கு எதிரான நட வடிக்கைகளும் அடங்கும். இதனால் நாட்டின்
உள்நாட்டுப்பாதுகாப்பும் அடங்கும்.சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையிலிருந்து விடுபட்டிடும்
அளவில் காவல்துறையினருக்கு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.அத்தோடு மாநிலங்கள் அனைத்திலும்
இரண்டு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். சைபர் பிரிவு என்ற இணையதளங்களைக்
கண்காணிக் கும் பிரிவு ஒன்று அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் சிறுமான்மையினருக்கு
எதிரான வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுத்திடலாம். அத்தோடு சமூக தளங்களை மற்றும் சோசியல்
மீடியாவையும் கண்காணித்திடலாம். இதன் வழி வகுப்பு வெறிகள் தூண்டப் படுவதைத் தடுத்திடலாம்.
இந்தப் பிரிவு மாநில அரசின் இணையதள பாதுகாப்புப் பிரிவு ( CERT ) இன் கீழ் இருந்திட
வேண்டும். பிரிதொரு பிரிவு மக்கள் தொடர்பு பிரிவாக இருந்திட வேண்டும். இந்த பிரிவு
உணர்வுகளைத் தூண்டிடக் கூடிய செய்திகள் குறிப்பாக சட்டம் ஒழுங்கு பற்றிய செய்திகள்
பரப்பப்படுவதைத் தடுக்க உதவும்.பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை இன்னொரு
செய்தியைப் பதிவு செய்கின்றது. அது வகுப்புவாத கலவரங்களை உருவாக்கும் சூழ்நிலைகளை முன்
கூட்டியே அறியத் தரும் முறை ஒன்றை நிறுவிட வேண்டும், இது வகுப்புக் கலவரங்களை உருவாகும்
சூழலை தடுக்கவும் வகுப்பு கலவரங்களை உருவாக்குபவர்களை கைது செய்யவும் உதவும்.
வகுப்புவாத சக்திகள் மிகைத்த
பகுதிகளில் அந்த சமுதாயத்தை நன்றாக அறிந்த, அதிகாரிகளையே அந்தப் பகுதியில் வேலையில் அமர்த்திட வேண்டும். ஆனால் அனைத்திற்கும்
முன்னதாக காவல் துறையின் உள்ளே குடியிருக்கும் மாச்சர்யங்களை அகற்றிட வேண்டும்.அத்தோடு
சமுதாயக் கண் காணிப்புகளை அதிகப்படுத்திட வேண்டும். வகுப்புக் கலவரங்கள் உருவாகிடும்
முன்னே தகவல்களைத் தெரிந்திடும் வண்ணம் உளவுத்துறையை முடக்கிவிட வேண்டும். கலவரங்களை
உருவாக்கிடும் அளவில் பேசுபவர்கள் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் போன்றவர்களை நாம்
கண்காணித்து அவர்களின் பேச்சுக்களையும், நிகழ்ச்சிகளையும் பதிவு செய்திட வேண்டும்.சட்டத்திற்கு
புறம்பாக மக்கள் கூடுவதை தடுத்திட இப்போது இருக்கின்ற சட்டங்கள் போதாது. இன்னும் கூர்மையான
சட்டங்கள் வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் சீருடை அணிந்து
அல்லது அணியாமல் அமைப்புகள் அணிவகுப்பை நடத்திடும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இத்தோடு
வகுப்புவாத அமைப்புகளுக்குப் பணம் வந்திடும் பாதைகளைக் கண்காணிக்கும் தனி நீதிமன்றங்களை
அமைத்திடவும் வழி கண்டிட வேண்டும்.இப்படி காவல்துறையின் மன நிலையை குறிப்பாக முஸ்லிம்களுக்கும்
ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிரான மனநிலையை மாற்றிடவும் வகுப்பு கலவரங்களைத் தடுத்திடும்
வகையிலும் தயாரிக்கப்பட்ட அறிக்கை குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்பட்டு விட்டது. இந்த
அறிக்கையில் குறிப்பிட்ட பல ஆலோசனைகள் செயலில் கொண்டு வந்திட இயலாதவை.இப்படியொரு அறிக்கை
சமர்ப்பிக்கப் படுவதிலும் அதில் காவல் துறையினர் ஒரு தலைபட்சமாக நடந்துக் கொள்கிறார்கள்
என்பது 2013 - இல் தான் நடந்தது என்றில்லை. மாறாக காவல்துறையின் வரலாறு முழுவதும் இப்படியே
பதிவாகி இருக்கின்றது.
ஆனால் இந்த செய்தியை வெளியிட்ட
இந்தியன் எக்ஸ்பிரஸ் அதில் கட்டுரையை எழுதிய சுமிதா நாயர் ஆகியோர் முதல் வரியில் முதன்முதலாகக்
காவல்துறை ஊழல் மயமானது, சிறுபான்மையினருக்கு எதிரான மாச்சர்யங்கள் உள்ளது என்பது ஒத்துக்
கொள்ளப்பட்டிருக்கின்றது என எழுதுகிறார்கள்.நமது இராமானுஜம் அவர்களைப் போல் எத்தனையோ
காவல்துறை உயர் அதிகாரிகள் இதற்கு முன்னால் இதுபோன்ற இன்னும் சொன்னால் இதைவிட அழுத்தமான
அறிக்கைகளைத் தாக்கல் செய்துவிட்டனர்.
 |
| காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக |
 |
| காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக |
 |
| காவல்துறை முஸ்லிம் பெண்களுக்கும் எதிராக |
 |
| தொப்பி போட்டால் அடி, உதை |
அவையெல்லாம் இந்த அறிக்கையைப்
போல் குப்பைத் தொட்டிக்குத்தான் சென்றன.ஜி.ஜி.கோஷ்என்ற காவல்துறை அதிகாரி 17 வகுப்புக்
கலவரங்களில் காவல்துறை அதிகாரிகள் எந்த அளவுக்கு இந்துத்துவ வெறியர்களைப் போல் முஸ்லிம்களைக்
கொலை செய்யவும், அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடிக்கவும் செய்தார்கள் என்பதைத் தெளிவுப்படுத்தி
யிருந்தார்கள்.தனது அறிக்கையை அரசாங்கம் கண்டுக்கொள்ளாததால் அவர் அதனை மக்கள் மன்றத்தில்
வைத்தார். அதற்கு உணர்வுப் பூர்வமான தலைப்பு ஒன்றையும் தந்தார். அந்த தலைப்பு (
Communalism - Let Us Combat ) வகுப்பு வாதம் அதை நாம் எதிர்த்து போர் செய்வோம்.
ஆனால் நிலைமை நாளுக்கு நாள்
மோசமானதே தவிர நிலைமை சீரடையவில்லை.இந்த ஆய்வு தொடர்ந்து இன்னும் பல ஆய்வுகளும் அறிக்கைகளும்,
அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளும் வந்தாலும் அவற்றிற்கெல்லாம் மகுடம் கட்டியதைப் போல்
வந்தது விபூதி நாராயண ராய் அவர்களின் ஆய்வறிக்கை.வெறும் ஆய்வறிக்கையாக மட்டுமில்லாமல்
அவருடைய முனைவர் பட்டத்திற்கும் வழிவகுத்தது.
இதில் எப்படி வகுப்பு கலவரங்களின்
போது மொத்த நிர்வாகமும் முஸ்லிம்களுக்கெதிராக சுழலுகின்றன. என்பதை தெளிவுப் படுத்தியிருந்தார்.இவருடைய
அறிக்கை ஆதங்கங்கள் இவற்றையும் நமது அரசுகள்
கண்டு கொள்ளவில்லை. ஆதலால் அவரது ஆய்வை செயலில் கொண்டுவந்திட அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை.
ஆதலால் அவரும் தனது ஆய்வை மக்கள் மன்றத்தில்தான் வைத்தார்கள்.பல்வேறு ஆய்வுகள், விசாரணைகள்,
இவற்றில் மேற்கோள் காட்டிடும் ஓர் ஆய்வாகத்தான் அது அமைந்தது.
ஆனால் அரசு அவருடைய ஆய்வை பரிந்துரை
செய்வதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரக்தி வயப்பட்ட விபூதி நாராயண ராய் அவர்கள்
தன்னுடைய ஆய்வு முடிவுகளை இன்னும் சணரஞ்ச கப்படுத்திட விரும்பினார்கள்.
தன்னுடைய ஆய்வை அடிப்படையாக கொண்டு
புதினம் ஒன்றை எழுதினார்கள். அதன்
பெயர் '' ஊரடங்கு உத்தரவு '' இதனை நாம் தமிழிலும்
வெளியிட்டோம். ( இந்த நூல் தற்போது
அச்சில் உள்ளது இன்ஷா அல்லாஹ்
மிக விரைவில் வேர்கள் வெளியீட்டகம் வழி வரும் ).ஆனால்
இவற்றின் வழி மக்கள் விளக்கங்களையும்
விபரங்களையும் பெற்றார்களே அல்லாமல் அரசு தரப்பில் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சங்கப்பரிவாரத்தின் பாசிச போக்கிற்கே எல்லா
அரசுகளும் துணை நின்றன. நிலைமை
இன்னும் மோசமானது.
 |
| பாகல்பூர் கலவரம் |
பாகல்பூர் படுகொலைகளை நடத்தின. இதில் காவல்துறையினர் முற்றாகக்
களமிறங்கி படுகொலைகளைச் செய்துக்கொண்டிருந்தனர். இந்த செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த
காவல்துறையில் ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர்
இவர் காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களைக் கொலை செய்வதைப் பொருத்துக்கொள்ள
இயலாமல் காவல்துறையினரை தடுத்தார். தடுக்க முயன்ற அடுத்த
நிமிடமே பிணமாக சாய்ந்தார். அவருடைய
உடலைப் பிளந்து சென்ற துப்பாக்கிக் குண்டு
அவருக்குக் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த
சப் இன்ஸ்பெக்டருடைய துப்பாக்கியிலிருந்து பாய்ந்தது.விசாரணைகள் ஆய்வறிக்கைகள் எல்லாம் வந்தன. ஆனால் அந்த
சப் இன்ஸ்பெக்டரை இடமாற்றம் கூட செய்திட இயலவில்லை.
முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புகளும் பிரதம அமைச்சர் வரை
சென்று சந்தித்து மனுக்கொடுத்தார்கள்.
இதே பாகல்பூரில் காவல்துறையில் அடைக்கலம் புகுந்த பல முஸ்லிம்கள் மறுநாள்
பிணமாக கிடந்தார்கள்.இதுவேதான் காசிம்புராவில் நடந்தது. காசிம்புராவில் கலவரம் நடந்துக் கொண்டிருக்கின்றன.
சங்கப் பரிவாரத்தினர் முஸ்லிம்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலிருந்து தெறித்து
ஓடுகின்றார்கள். ஒரு பணக்கார முஸ்லிமின்
பங்களாவில் அடைக்கலம் தேடுகிறார்கள். பங்களாவுக்கு சொந்தக்காரர் தொடர்ந்து காவல்துறைக்கு தொலைபேசியில் பேசுகின்றார். நீண்ட நேர முயற்சிக்குப்பின்
காவல்துறையின் வாகனம் ஒன்று அங்கு
வருகின்றது. '' ஆபத்துப்பாந்தவன் '' வந்துவிட்டான் என அந்த முஸ்லிம்கள்
சற்றே நிம்மதியடைகிறார்கள். அந்த முஸ்லிம்களை காவல்
துறை வாகனத்தில் ஏற்றுகின்றார்கள். பின்பு அடுத்த ஒரு
ஏரியில் அவர்கள் பிணமாகக் கிடக்கின்றார்கள். அதற்கான விசாரணை இன்றளவும் நடந்துக் கொண்டிருக்கின்றது.
இந்த படுகொலைகளை செய்த பல காவல்துறை
அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள்
பெற்றிட வேண்டிய பதவி உயர்வுகள், ஓய்வூதியம்,
ஓய்வு பெறும்போது பெற்றிட வேண்டிய மொத்த பணம் இவை
அனைத்தையும் பெற்றுவிட்டார்கள். இதற்கான வழக்குகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால்
இந்த விசாரணை, இதற்கான தீர்ப்பு இவற்றால் விளையப்போவது எதுவுமில்லை. அவர்கள் பெறவேண்டியவற்றை யெல்லாம் பெற்றுவிட்டார்கள்.
பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின் நிலைமை இன்னும்
மோசமானது. அங்கே கரசேவகர்கள் இடித்தது
போக மீதியை இடித்தவர்கள் மத்திய
அரசின் முகவர்கள். பாபரி மஸ்ஜித் - ஐ
இடித்ததில் பெருமைப்படுகின்றோம். என்று சொன்ன பால்த்தாக்கரே
சகல அவகாசத்தோடும் மும்பை படுகொலைகளை நடத்தினார்.
கையில் முஸ்லிம்களின் பெயர் பட்டியல்களை வைத்துக்
கொண்டு நடத்திய பட்டப்பகல் படுகொலைகள் அவை.
 |
| ஸ்ரீ. கிருஷ்ணா கமிஷன் |
அந்த படுகொலைகளை ஆய்வு செய்யவும். ஸ்ரீ. கிருஸ்ணா கமிஷன்
என்றொரு கமிஷனை நியமித்தார்கள். இந்த ஸ்ரீ. கிருஸ்ணா கமிஷனிடம் சில குறிப்பான விடயங்கள்
குறித்தும் ஆய்வுகள் நடத்தி அறிக்கை தந்திட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டது. அதில்
மும்பை கலவரங்களுக்கு யார் குற்றவாளிகள் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அவர்கள்
மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க வேண்டும் என்றெல்லாம் கேட்டுக்கொண்டார்கள்.
நீதிபதி ஸ்ரீ. கிருஸ்ணா அவர்கள்
காடு மேடுகளையெல்லாம் கடந்து சென்று நீதிபதியின் சிகரமாய் ஓர் அறிக்கையை தாக்கல் செய்தார்கள்.
இந்த அறிக்கையில் 2000 அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கு, பால்தாக்கரே தான்
காரணம். அவர் தொலைபேசியில் இங்கே சென்று கொல்லுங்கள் அங்கே சென்று கொல்லுங்கள் என உத்தரவுகளை
பிறப் பித்துக் கொண்டிருந்தார் என்பதை யெல்லாம் தக்க ஆதாரங்களுடன் சமர்பித்தார்.1992
- 1993 மும்பை படுகொலைகள் நடந்து முடிந்து நீதிபதி ஸ்ரீ. கிருஸ்ணா அவர்கள் தங்கள் அறிக்கையை
சமர்பித்தபோது, கொலைகளைச் செய்த பாசிச பரிவார கும்பலே ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த
கும்பல் ஸ்ரீ. கிருஸ்ணா அறிக்கையை சட்ட சபையில் சமர்பிக்கமாட்டோம் எனக் கூறிவிட்டது.
அதன் பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளிவந்தது. ஆனால் அதில் பிரதான குற்றவாளி
இனப்படுகொலைகளை தொடங்கி நடத்தியவர் என குற்றம் சாட்டப்பட்ட, பால்தாக்கரேயை கைது செய்திடவில்லை.

இதற்காகவும் தொடர் போராட்டங்கள்
நடத்தப்பட்டன.. பின்னர் கைது என்ற பெயரில் ஐந்து நிமிடங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஆனால் சிறைக்கு அனுப்பப்படவில்லை. அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொலை குற்றம் சாட்டப்பெற்ற
பால்தாக்கரே இறந்தார். அவரின் உடலின் மீது தேசியக் கொடியைப் போர்த்தினார்கள்.
அதாவது சங்கப் பரிவார பாசிசம்
தேசிய அங்கீகாரம் பெற்றது. இதற்கு பின்னும் நமது இந்தியாவில் நீதியும் நேர்மையும் நிலை
நாட்டப்படும் என்று எந்த முட்டாளும் நம்பமாட்டான்.அன்றிலிருந்து காவல் துறையினர் முஸ்லிம்களை
எதிர்தாக்குதல் என்ற பெயரில் கொலை செய்வது பெருகி வருகின்றது. இந்த எதிர்தாக்குதல்களை
எத்தனை இலாவகமாக செய்திட இயலுமோ அத்தனை இலாவகமாகச் செய்தார்கள்.எடுத்துக்காட்டாக மும்பையில் டயாநாயக் என்றொரு காவல்துறை துணை ஆய்வாளர் என்ற
சப் - இன்ஸ்பெக்டர். இவர் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை பிடித்து வைத்துக் கொள்வார்.
குஜராத் மற்றும் ஆந்திராவிலுள்ள காவல்துறையினரிடம் என்கவுண்டர் செய்திட முஸ்லிம் இளைஞர்கள்
வேண்டுமா? குண்டு வெடிப்புகளில் இணைத்திட முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமா? எனக்கேட்பாராம்!
இவர் குறுகிய காலத்திலேயே பலகோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்.
ஆனால் இவரைச் சட்டம் சீண்டிப்
பார்த்திடவில்லை.இப்படி முஸ்லிம் இளைஞர்களை எதிர்த்தாக்குதலில் பயன்படுத்திடும் பொருள்களாகப்
பயன்படுத்தி இருக்கின்றார்கள். இன்றளவும் அதனை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக் கின்றார்கள்.
அதில் ஒன்றுதான் - அந்த ஏளனமான மன நிலையின் வெளிப்பாடுதான் எஸ்.பி. பட்டிணத்தில் நடந்தது.
அதனை நமது நிறுபர்கள் தந்தப்படி இங்கே பதிவு செய்கின்றோம்.
எஸ்.பி.பட்டிணத்தில்
நடந்தது என்ன?
தமிழகத்தின் கடலோர மாவட்டம்
இராமநாதபுரம். அதில் கடற்கரை பகுதி எஸ்.பி.பட்டிணம். இங்கு செய்யித் முஹம்மது என்றொரு
முஸ்லிம் இளைஞன். தந்தை இல்லை. கூலி வேலை செய்து தன் தாயாரை காப்பாற்றி வருபவன்.இங்கு
பைக் முதலியனவற்றை பழுது பார்ப்பவர் அருள்தாஸ். அவரிடம் செய்யித் முஹம்மதின் நண்பன்
பைக்கை பழுதுப்பார்க்க கொடுத்திருக்கிறார். அதை வாங்கி வர தன் நண்பனின் கோரிக்கையின்
கீழ் சென்றிருந்தான் செய்யத் முஹம்மது.
ஆனால் அவன் செல்லும் போது பைக்
தயாராகவில்லை. இதனால் காலம் கடந்த அருள்தாஸ் பைக் - ஐ கொடுத்த செய்யத் முஹம்மதுவின்
நண்பனிடம் போனில் தொடர்பு கொண்டு பைக்கை செய்யதிடம் தரலாமா? என கேட்டிருக்கிறான். அவனும்
கொடுக்கலாம் என கூறியிருக்கிறார். ஆனால் அருள்தாஸ் பைக் தயாராக இல்லை. சிறிது நேரம்
கழித்து வந்து வாங்கிக் கொள்ளலாம் என வாய்தா போட்டார்.வாய்தா காலம் முடிந்து வந்தார்
செய்யத் முஹம்மது. வண்டியை கேட்டார். ஆனால் அருள்தாஸ் அப்போதும் தன் வேலையைக் காட்டவே
வாய்ச்சண்டை நடந்திருக்கிறது. சற்று சூடு அதிகமாகவே வாய்ச்சண்டை கைகலப்பாக மாறி இருக்கின்றது.
ஊர் நாட்டில் நடப்பது போல் அக்கம் பக்கத்தினர் வந்து
விலக்கி விட்டிருக் கின்றனர்.ஆனால் மெக்கானிக் அருள்தாஸ் தனக்கு எல்லாவகையிலும் உதவி
வரும் பக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் சென்று கூறியுள்ளார். ஆனால் புகார் எதுவும்
எழுதித்தரவில்லை. அதன் பின் காவல்துறையினர் செய்யத் முஹம்மதுவை அடித்து இழுத்து சென்றுள்ளனர்.
மேலும் காவல் நிலையத்தில் வைத்து நையப்புடைந்துள்ளார்கள்.அடி தாங்க முடியாமல் செய்யத்
முஹம்மது அலறி இருக்கின்றான். அலறல் சப்தம் கேட்டு சிலர் காவல் நிலையம் சென்று பார்த்துள்ளனர்.
ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. காவல்துறையினரின் தொடர் கொடூரங் களால் மூர்ச்சையானான்
செய்யத் முஹம்மது. இவையெல்லாம் மதியம் 2 மணிக்கே முடிந்துவிட்டது.இந்த காவல் நிலையத்தில்
காளிதாஸ் என்பவர்தான் துணை ஆய்வாளர். இவர் மதியம் 3 மணிக்கு தன் கடமைகளைச் செய்திட
காவல் நிலையம் வந்திருக்கின்றார். பின் எஸ்.ஐ. காளிதாஸ் தன் பங்கிற்கு செய்யத் முஹம்மதுவை
கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இவரின் தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டவே செய்யத் முஹம்மது
இறந்து போனான்.சையது முகம்மது கத்தும் சத்தம் பின்னர் கேட்கவில்லை. மருந்து கடை இரமேஷ்
இறப்பை உறுதி செய்துள்ளார். ஆயுர்வேதிக் படித்து பார்மசிஸ்ட்டாக உள்ள இரமேஷ் சுமார்
ஐந்து மணியளவில் ஒரு காவலரால் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு, அந்த காளிதாஸிற்கு
ஏற்பட்ட இடது கை, இடதுபக்க வயிற்றுக் கீறல்களை காண்பித்து நரம்பு தேசம் அறுந்து விட்டதா
என்று கேட்டுள்ளார். அதன் பின் அதற்கு பஞ்சு வைத்து கட்டிவிடவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
ஆனால் இரமேஷோ இதற்கு நான் மருத்துவம்
பார்க்கக் கூடாது என்று திரும்பி வந்து விடுகிறார்.அப்போது இரமேஷ் ஒரு அறையில் ஒருவர்
சாய்ந்து படுத்து இருப்பதை பார்த்துள்ளார். அவர் வெள்ளை நிற அங்கி அணிந்திருந்தார்.
அவருடைய உடம்பிலோஒரு சொட்டு இரத்தம் கூட இல்லையென்று தெரிவித்தார்.ஆம்புலன்ஸ் ஓட்டுனர்
ஆசாத் ஆசாத் நம்மிடம் கூறும்போது தாம் டி.என்.டி.ஜெ விற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருப்பதாகவும்,
சம்பவம் நடந்த அன்று மாலை சுமார் 4.30 முதல் 4.45 மணிக்குள் தன்னை அழைத்ததாகவும், தாம்
தொண்டியிலிருந்து 10 நிமிடத்தில் காவல் நிலையத்திற்கு வந்து விட்டதாகவும் தெரிவித்தார்.அவரை
காவல்துறையினர் கேட்டுக்கு வெளியே இருக்கும் படி சொல்லியுள்ளனர். இவர் கூற்றுப்படி
பார்த்தால் சையது முகம்மது 4.30 மணிக்கு முன்பாகவே இறந்துவிட்டார். இவர் மருந்து கடை
இரமேஷ் உள்ளிருந்து வெளியே வந்ததை பார்த்துள்ளார். சிறிது நேரத்தில் எஸ்.ஐ. காளிதாஸ் காவல் நிலையத்தில்
இருந்த ஒரு சிவப்பு காரில் ஏறி சென்றுவிட்டதாக தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் தான்
£வெளியில் நின்றதாகவும் ஆசாத் தெரிவித்தார்.பின்னர் தன்னை காவலர்கள் உள்ளே வரும்படி
அழைத்ததாகவும் தன்னிடம் உள்ள செல்போனை வாங்கிக் கொண்டதாக கூறினார். தான் வண்டியில்
ஏறி உட்கார்ந்து பின்னால் உள்ள ஜன்னல் வழியாக பார்க்கும்போது, இரண்டு காவ லர்கள் சையதுவின்
உடலைக்கொண்டு வந்து போட்டதாகவும், பின்னர் தான் `` என்ன சார் யாரோ காயம் அடைந் துள்ளார்
என்று கூறினீர்கள் இப்போது உடலைக் கொண்டு வந்து போடுகிறீர்கள்? `` எனக் கேட்டபோது இதனை யாரிடமும் வெளியே சொல்லவேண்டாம் என காவல்துறையினர்
கேட்டுக் கொண்டதாகவும். டி.எஸ்.பி.சேகர் வந்து எஸ்.ஐ. (இவர் வேறோரு எஸ்.ஐ) சொல்லும்படி
வண்டியை ஓட்டும் படியும் வழியில் யார் நிருத்த சொன்னா லும் நிறுத்த வேண்டாம் என கேட்டுக்
கொண்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் வண்டியை திருபாலகுடி
காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் அங்கு எஸ்.பி. மயில் வாகனன் வந்து ஆம்புலன்ஸில்
இருந்த உடலை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். இங்கு ஆம்புலன்ஸ்
சுமார் அரை மணி நேரம் நின்றதாகவும் பின்னர் சுமார் 7.10 மணிக்கு இராமநாதபுரம் அரசு
மருத்துவமனைக்கு சென்றதாகவும் தெரிவித்தார். தான் இதனையே மாஜிஸ்ரேட்டிடம் தெரிவித்ததாக
நம்மிடம் சொன்னார்.
சையது அலி ஃபாத்திமா சையது
அகமது தாயார்இவர் இரண்டு முறை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர், இன்னும் இவர் கணவர்
காட்டுபாவா அவர்கள் இறந்து 10 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. 2 மாதத்திற்கு முன்புவரை
இவரது மகன் சையது சென்னையில் கார் டிரைவராக இருந்துள்ளார். கடந்த இரண்டு மாத காலமாக
இறால் பண்ணையில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்வதாக தெரிவித்தார். இன்றும்
உடல் நிலை பாதிக்கப்பட்டு இவர் அழுதுக் கொண்டே இருந்ததால் இந்த தகவலை இவரின் சகோதரி
அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்.தன்னுடைய மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற விவரத்தை
தம்மிடம் கூறாமல் மறைத்து விட்டதாகவும், இன்னும் தன்னுடைய மகன் இறந்த விடயமே தனக்கு
தொலைக்காட்சியை பார்த்த பின்புதான் தெரிந்ததாக கூறினார். மறுநாள் 15.10.14 அன்று ஆய்வாளர்
துரை பாண்டி தவறு நடந்து விட்டது என்று சொல்லி திருவாடணை டி.எஸ்.பி சேகர் கொடுத்த கடிதத்தை
காண்பித்து அதில் கையெழுத்து போடுமாறு கேட்டுள்ளார்.
அதில் `` இன்று 14.10.2014
மாலை 3.மணிக்கு எஸ்.பி. பட்டிண காவல் நிலைய கு.எண் : 90/2014 வழக்கில் விசாரணைக்காக
அழைத்து செல்லப் பட்ட தங்களது மகன் சையது முகமது காயம் பட்டு அதன் தொடர்பாக இராம நாதபுரம்
அரசு தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார் என்பதனையும்
இது தொடர்பாக எஸ்.பி. பட்டிணம் காவல் நிலையம் கு.எண் : 91/2014 பிரிவு 176(4) கீழ்
சி.ஆர்.பி.சி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை
தெரிவித்துக் கொள்கிறேன் `` என்று இருந்தது. ஆனால் அந்த கடிதத்தில் கையெழுத்து போட
குடும்பத்தார்கள் மறுப்பு தெரிவித்து அனுப்பி வைத்ததாக கூறினார்கள். இதில் ஒரு கொலையை
மறைக்க ஆய்வாளர் துரை பாண்டி மற்றும் டி.எஸ்.பி சேகர் மற்றும் எஸ்.பி மயில் வாகனன்
போன்றோர் முயற்சி செய்தது தெரிகின்றது.
இந்நிலையில் இந்த செய்தியை
கேள்விப்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கு முன் கூடிவிட்டனர்.
அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன. உடனே சம்பவ இடத்திற்கு எஸ்.பி, ஐ,ஜி, டி.ஐ.ஜி போன்றவர்கள்
வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். இன்னும் கிட்டதட்ட முன்னூறுக்கும்
மேற்பட்ட போலிஸார் அங்கு குவிக்கப்பட்டார்கள். மக்கள் மறியலில் இருந்த போது தைக்கால்
பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் மைக் மூலம் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக
கூறியுள்ளனர். எனவே கலைந்து செல்லுங்கள் என்று கூறியவுடன் மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.
மாலை 5.30 மணிக்கு பிறகு ஆம்புலன்ஸ் சென்றவுடன் வெள்ளதுறை ஏ.டி.எஸ்.பி காவல் நிலையத்திற்கு
வந்துள்ளார்.
இவர் இரவு முழுவதும் அங்கிருந்து
மக்களை அடக்கும் திட்டத்தை நிறைவேற்ற முகாமிட்டிருந்த தாக மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.மறுநாள்
15.10.2014 உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி
நீதிபதி என். வேலுச்சாமி மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
அவர் மாலை நடைபெற்ற உடல் பரிசோதனையின் போது உடன் இருந்தவர். மேலும் தலைமை மருத்துவர்
தலைமையில் சுமார் 5 மருத்துவர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டார் கள். இதனை வீடியோ படம்
எடுக்கப்பட்டது. இரண்டு வழக்கறிஞர்கள் உடன் இருந்துள்ளனர்.ஊர் மக்கள் 302 கொலை வழக்கு
பதிவு செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறியுள்ளனர். மறுநாள் 16.10.2014 அன்று
மதுரை உயர் நீதி மன்றத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக மனுதாக்கல் செய்யப் பட்டது. அதில்
இரண்டாவது முறையாக உடல்பரிசோதனை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் எல்லாம் உச்ச நீதிமன்ற
வழகாட்டுதல்படி நடந்துள்ளது என் அரசு தரப்பு வழக்கறிஞர் சொன்னதால் வழக்கில் இரண்டாவது
உடற்பரிசோதனை தேவையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் அன்று மாலை
6.00 மணிக்கு மேல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் இருந்த இடத்தில் உள்ளூர் மக்கள், மற்றும்
சில இயக்க உறுப்பினர்கள் கூடி பேசினார்கள். இதில் அவர் உச்ச நீதி மன்றம் சொன்ன 13 விதிகளும்
பின்பற்றப்பட்டதால் உடலை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறினார். இதனை சிலர் 302 கொலை வழக்கு
போடுவது பற்றி கேட்டுள்ளனர். இறுதியில் அவரின் நிர்பந்தத்தால் உடலை பெறுவது என மக்கள்
முடிவு செய்துள்ளனர். மறுநாள் மஃரிப் தொழுகையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.வைகறை
நிருபர் மாஜிஸ்ரேட் விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்தார், மாஜிஸ்ரேட் சம்பவம் நடந்த எஸ்.ஐ.காளிதாஸ் அறையை பார்வையிட்ட
போது அவரும் பார்த்தார் அப்போது அந்த அறையில் எந்த ஒரு சிறு சேதாரமோ,சிதறலோ, இரத்தக்கறையோ
இல்லாமல் இருந்ததை பார்த்தார். இங்கு காவல்துறையினரால் தடயம் அழிக்கப்பட்டது தெளிவாகிறது.
இன்னும் சையது ஒரு ரவுடி என்று காவல் துறை சொன்னதை பற்றி மக்களிடம் கேட்டபோது அதனை
மக்கள் மறுத்தனர், இன்னும் சையது ஜெயலலிதா கைதை தொடர்ந்து எஸ்.பி பட்டிணத்தில் பஸ்
எரிக்கப்பட்டபோது இவர் சென்று பலரை காப்பாற்றியுள்ளார்.
நமது நிருபர்கள் இக்பால் மற்றும்
ரிஸ்வான்.
என்கவுண்டர்
என்ற எதிர் தாக்குதலில் காவல்துறை கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்.
காவல்துறையினர் அப்பாவிகளை
அழைத்து வந்து கொலை செய்வது பின்னர் எதிர் தாக்குதல் எனப்பட்டம் கட்டுவது. பொய்களையும்
புனைந்துரைகளையும் பக்கம் பக்கமாக எழுதி அந்தக் கொலையை நியாயப்படுத்துவது. இது காவல்
துறைக்கு கைவந்த கலை.இவர்களின் இந்த கொலைகளுக்கு பாராட்டுக்கள் பதக்கங்கள். அதுவும்
விழாக்களில். அதாவது காவல்துறையினர் நடத்தும் கொலைகளுக்கு அரசியல் நடத்துவோர் அங்கீகாரம்
தருகின்றனர்.பின்னர் விவகாரம் நீதிமன்றம் செல்கிறது. நீதிபதிகள் காவல்துறையின் ' ஏட்டைய்யா
' போல நடந்துக்கொண்டு மொத்த நீதியையும் குழிதோண்டிப் புதைத்து விடுகிறார்கள். இதில்
பெரும்பாலும் அ நாதைகளும் அடித் தட்டுக்கு அல்லாடும் அன்றாடம் காய்ச்சிகளும்தான் பாதிக்கப்படு
கிறார்கள். அதனால் அவர்களால் துப்பாக்கிகளைத் ' துஷ்பிரயோகம் ' செய்யும் இந்த அடங்காத
காவல் துறையின் முன்னால் நின்றிட முடிய வில்லை.
இப்படி இந்தியக் குடிமக்களை
- இந்திய குடிமக்களின் வரிப்பணத்தில் தங்கள் தொப்பைகளை நிரப்பிக் கொண்டும் கொலை செய்யும்
பெரும் பாதகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.கீழ் நிலையில் உள்ளவர்கள் செய்யும் கொலைகளுக்கு
மேல் ' மட்டத்தில் ' உள்ள காவல்துறை அதிகாரிகள் தரும் ஆதரவுக்கு அளவே இல்லை. இறந்தவர்களின்
உடல் அடக்கப் படுவதற்கு முன்னரே அவர்களுக்குப் பதக்கங்களைத் தர காத்துக் கிடக்கும்
ஆட்சியாளர்கள். இப்படி கொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் பட்சத்தில் இந்த
பதவி உயர்வுகளும் பதக்கங்களும் மின்னல் வேகத்தில் வழங்கப்படுவதுண்டு.
அரசியல் வாதிகளின் - அரசுகளின்
இஸ்லாத்திற்கு எதிரான மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகள், மாநில முதல்வர்களையும்
ஏன் குடியரசு தலைவர் களையும் ஏமாற்றிய வரலாறுகள் ஏராளம்! தாராளம்! இவற்றை நாம் வைகறை
வெளிச்சம் இதழில் நிரம்பவே சுட்டிக்காட்டியுள்ளோம். [இன்ஷா அல்லாஹ்] இன்னும் அதிகமாக
வெளிக்கொணர்வோம்.இந்த அநியாயங்களையெல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்திட உச்ச நீதிமன்றத்திடம்
முறையிட்டார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். குறிப்பாக PUCL - என்ற மனித உரிமை அமைப்பு[People`s Union For
Civil Liberties ] உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த
பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் ' 13 கட்டளைகளை ' பிரஸ்தாபித்துள்ளது. அவற்றை தொகுத்து
தருகிறோம்.
கட்டளை - 1 குரூரமான குற்றங்கள்
நடக்கும் என்ற தகவல் அல்லது உளவு காவல்துறையை எட்டினால் காவல்துறை உடனேயே அதற்கு எழுத்து
வடிவம் தந்து ஏதாவது வடிவில் பதிவு செய்ய வேண்டும். இதனை காவல் நிலைய டைரியில் - நிலைய
நாட்குறிப்பில் பதிவு செய்திட வேண்டும்.[ Preferably in The Case Diary Or Some
Electronic Form] அதாவது கம்யூட்டர் போன்றவற்றில் பதிவு செய்து வைத்திட வேண்டும். இதனை
ஏட்டைய்யா செய்கிறார். கொலை நடந்தப்பின்.
கட்டளை - 2 [ என்கவுண்டர்
] என்ற எதிர்த்தாக்குதல் நடந்தால் அதில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டால்
அதன் விளைவாக மரணம் நிகழ்ந்தால் உடனேயே F.I.R
என்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவேண்டும். அதனை உடனேயே 157. CRPCஇன் கீழ்
நீதிமன்றத்திற்கு அனுப்பிட வேண்டும். இதில் தாமதம் ஏதும் கூடாது.
கட்டளை - 3 எதிர்த்தாக்குதல்
அல்லது நிகழ்வு நடந்த காவல் நிலையம் அல்லாத இன்னொரு காவல் நிலையம் வழி, ஒரு காவலர்
குழுமம் [Police Team] அல்லது உளவுத்துறை
CID ஒரு விசாரனையை நடத்திட வேண்டும். இதனை உயர்மட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கண்காணித்திட
வேண்டும்.காவல்துறையினர் செய்யும் எதிர்த்தாக்குதல் என்ற படுகொலையை காவல்துறையே விசாரிக்க
வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது அத்தனை அநீதிக்கும் வழிவகுக்கும். ஒரு
பேட்டை ரவுடி செய்யும் கொலையை இன்னொரு பேட்டை ரவுடி தனது தாதாவின் மேற்பார்வையின் கீழ்
விசாரித்து உடனயே அறிக்கையை தரவேண்டும் என இனி நமது நீதிபதிகள் நீதியை ஜனரஞ்ச படுத்தினால்
ஆச்சர்யபடுவதிற்கில்லை.
கட்டளை - 4 ஒரு மாஜிஸ்டிரேட்
என்ற நடுவரைக் கொண்டு ஒரு விசாரணையை நடத்திட வேண்டும். இது CRPC - 176 ஆம் பிரிவின்
கீழ் நடந்திட வேண்டும். இது எதிர்தாக்குதலில் துப்பாக்கி சூடு வழியாக மரணம் நிகழும்
போதெல்லாம் நடத்தப்பட வேண்டும்.
கட்டளை - 5 எதிர் தாக்குதலில்
காயம்பட்டு அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அவரிடம் ஒரு வாக்கு மூலம்
வாங்கிட வேண்டும். அந்த வாக்கு மூலம் ஒரு நடுவரால் - மாஜிஸ்டிரேட்டால் வாங்கப்பட வேண்டும்.
அல்லது அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரியால் வாங்கப்பட வேண்டும்.
கட்டளை - 6 முதல் தகவல் அறிக்கை
F.I.R நிலைய வழக்கு பதிவேடு [Case Diary] ஆகியவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்புவதில்
தாமதம் ஏதும் இருக்கக்கூடாது. நம்ம ஊரில் இதெல்லாம் நடப்பதில்லை. கொலையை செய்யும் காவல்துறை
அதிகாரிகள் கொலைச் செய்யப்பட்ட வர்களின் இல்லங்களில் என் மகன் தானாகவேதான் இறந்தான்
என அறிக்கைகள் தயார் செய்து தந்து விடுவது மிகவும் எளிதாக நடக்கிறது. இதில் காவல்துறை
அதிகாரிகள், (S.P.. முதல்) தலைமைக் காவல்துறை அதிகாரி முதல் கடைசி காவல்துறை ஏவலர்
வரை ஒரே அணியில் செயல்படுகின்றார்கள். தங்களின் முரட்டு அதிகாரத்தைத் தாராளமாகப் பயன்படுத்துகின்றார்கள்.
ஏழை எளிய மக்களால் இவர்களின் கெடுபிடிகள், கொடூரங்கள் இவற்றைத் தாங்கிட இயலுவதில்லை.
ஒரு பையனோடு போகட்டும் என விட்டுவிடு கின்றார்கள்.மேலும் காவல் துறையின் கெடுபிடிகள்
தாங்கிட முடியாமல் அவர்கள் காட்டும் இடத்தில் கையப்பம் போட்டுக் கொடுக் கின்றார்கள்
மகனைப் பறிகொடுத்த பெற்றோர்கள். இந்த வழி காட்டுதல்கள் வெரும் ஏட்டுச்சுரைக் காயாகத்தான்
நாட்டில் நடந்து கொண்டி ருக்கின்றது. இனியும் அப்படியேத்தான் இருக்கும்.
கட்டளை எண் - 7 புலண்விசாரணை
முடிந்தவுடன் நீதிமன்றத்தில் அறிக்கையை விரைந்து தந்திட வேண்டும். இது CRPC - 173 இன்
கீழ் நடக்க வேண்டும். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமேயானல் விரைந்து விசாரணையை
நடத்திட வேண்டும். உச்ச நீதிமன்றம் இதில் புதிதாக ஒன்றையும் பிரஸ்தாபித்து விடவில்லை.
ஏற்கனவே நடப்பில் உள்ளவற்றைத்தான் உச்ச நீதிமன்றம் பீற்றித்திடிகின்றது. உச்சநீதி மன்றம்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இதுவெல்லாம் இங்கே நடப்பதில்லை.
கட்டளை - 8 எதிர்தாக்குதலில்
மரணம் நிகழ்ந்து விட்டால் இறந்தவரின் நெருங்கிய உறவினர்களுக்கு உடனேயே தகவல் சொல்லிட
வேண்டும்.
கட்டளை - 9 புலனாய்வுக்குப்பின்
தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் சம்பந்தப்பட்ட காவலர் துப்பாக்கியைப் பயன்படுத்தி
யிருக்கின்றார், அவர் குற்றம் புரிந்திருக்கின்றார், என்பன போன்ற தகவல்கள் கிடைத்தால்
அவர் மீது உடனேயே வழக்குப் பதிவு செய்திட வேண்டும். அந்த வழக்கை விரைந்து நடத்திட வேண்டும்.
கட்டளை - 10 பாதிக்கப்பட்டவர்களுக்கு
இழப்பீடு வழங்குதல் பொருத்தவரை CRPC 357 ஐ உடனேயே பின்பற்றிட வேண்டும். இந்த சுண்டக்காய்
இழப்பீட்டை கொலை செய்யும் காவல்துறையின் ' தாதா ' தலைமை காவல்துறை கண்காணிப்பாளர்
(SP) யே முடிவு செய்து கிடைப்பதை வாங்கிக்கொள் அல்லாமல் நீங்கள் ஒன்றும் செய்திட இயலாது
என்கிறார். இதை இழப்பீட்டை பெற்றுக் கொள்ள அவர்கள் போடும் தாளங்கள் அனைத்திற்கும் ஆடிட
வேண்டியதிருக்கின்றது. இந்த அநீதியை களைந்திட
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் எள்ளளவும் உதவிடவில்லை.
கட்டளை - 11 சம்பந்தப்பட்ட
காவல்துறை அதிகாரி, தன்னுடைய ஆயுதத்தையும், அதோடு தொடர் புடைய இதர கருவிகளையும் புலனாய்வு
செய்யும் குழுக்களிடம் உடனேயே ஒப்படைக்க வேண்டும். இது அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு
20 - இன் கீழ் நடந்திட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டு தலும் வெள்ளறிக்
காயில் வெண்ணை தடவியது போல் தான் இருக்கின்றது.
கட்டளை - 12 எதிர்தாக்குதலில்
ஈடுபட்டவர்களுக்கு உடனேயே சாகச விருதுகள் அதிரடி பதவி உயர்வுகள் போன்றவற்றை வழங்கிடக்
கூடாது. அவர்களின் ' சாகசம் ' சந்தேகங்களுக்கு அப்பால் நிருபிக்கப்படும் வரை இவற்றில்
எதையும் வழங்கிடக் கூடாது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் அக்கட்டளை முன்னரே செயலுக்கு
வந்திருந்தால் ஆயிரக்கணக்கான போலி என்கவுண்டர்கள் தவிர்க்கப் பட்டிருக்கும். பல்லாயிரக்
கணக்கான அப்பாவி உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கும். காரணம் அண்மை காலங்களில் நடக்கும்
அத்தனை என்கவுண்டர்களும், பணம், பதவி உயர்வு, பதக்கம், ஆகியவற்றிற்காகவே நடத்தப்பட்டன.
முதலமைச்சர்கள் முதல் ஜனாதிபதி என்ற குடியரசு தலைவர் வரை ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள்.
இந்த விவகாரத்தில் இனி இப்படி சன்மானங்கள்
வழங்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைக் காட்டி நாம் அவற்றை நிறுத்தலாம்.
இதனை செய்திட மக்கள் முன்வர வேண்டும்.
கட்டளை - 13 காவல்துறையினர்
செய்யும் கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மேலே சொல்லப்பட்ட இந்த நெறிமுறைகள்,
பின்பற்றப்படவில்லை, அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. விசாரணைகள் சுதந்திரமாக
இல்லை, இந்த விசாரணையில் சிலர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள், என்றால் மாவட்ட நீதிமன்றத்தில் [மாவட்ட தலைமை நீதிமன்றத்தில்] புகார்
மனுவை தாக்கல் செய்யலாம். இப்படியரு மனு தாக்கல்
செய்யப்படுமேயானால் மாவட்ட நீதிபதி அதனை ஆய்வுக்குட்படுத்தி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும்.
இது இப்போது கடைபிடிக்கப்படாத
ஒரு நியதி. இதனை செய்திட பொதுமக்களும் சமுதாய அமைப்புகளும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகளை
மேற் கொண்டிட வேண்டும். நீதிமன்றங்களும். கண்ணை மூடிக் கொண்டு காவல்துறை சொல்வதையெல்லாம் நம்புவதை நிறுத்திட வேண்டும்.உச்ச
நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த நெறிமுறைகளுக்காக நாம் உச்ச நீதிமன்றத்தைப் பாராட்டிட
இயலவில்லை. காரணம் எல்லா என்கவுண்டர்களிலும் கொலையை செய்யும் காவலர் மீது இந்தியத்
தண்டனை சட்டம் பிரிவு 302 இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவேண்டும் என்ற நியதி இங்கே
மீண்டும் வலியுறுத்துப் படவில்லை.
காவலர்களைத் தூக்கிலிட வேண்டும்.
Potlice men involved in encounters should be hanged ] அன்றொரு நாள் இப்படி ஒரு அறிவிப்பைச்
செய்தது நமது உச்ச நீதிமன்றம். ஆதாரம் : [The hindu = Tuesday, Aug,9.2011 ]
"They are nothing but cold
blooded brutal murder"should be treated as the rarest of rare offences,
and police pensonnel responsible for it should be awarded death sentense. They
should be hanged justice katji said'' (ibid) TH. Aug 9/2011.என்கவுண்டர் என்பவை பட்டப்
பகலில் நடக்கும் குரூர கொலைகள் அல்லாமல் வேறொன்றுமில்லை. இந்த குற்றங்களை அரிதானவற்றிலும்
அரிதானவை என எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பொருப்பான காவலர்களுக்கு மரண தண்டனை
வழங்கிட வேண்டும். அவர்களைத் தூக்கிலிட வேண்டும். இந்த காரமும் கசப்பும் உச்ச நீதிமன்றத்தின்
இப்போதைய பரிந்துரையில் இல்லை. – எம்.ஜி.எம்.