நேருவைத்தான் கொன்றிருக்க வேண்டும்! காந்தியைக் கொன்றதற்கு பதிலாக என்றொரு கூப்பாடு கொலைகார பாசிச பரிவாரத்திடமிருந்து வந்தது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. [ ஆர்.எஸ்.எஸ் இன் ' கேசரி '. பி. கோபால கிருஷ்ணன் கட்டுரை ]அடுத்து காந்திஜியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் நாளைப் பின்னுக்குத் தள்ளி வல்லபாய் பட்டேலை உயர்த்திப்பிடிக்கும் பேதமைக்கு வெண்சாமரம் வீசப்படுகிறது.காந்தியை கொண்டாடுவதில் மோடி வகையராக்களுக்கு சில சங்கடங்கள் உண்டு. காரணம் காந்தியைக் கொன்றது இந்த பாசிச பரிவாரம்தான். இதனை கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே பெருமையோடு ஏற்றுக் கொள்கிறார்.நேரு நாள் தொட்டே காந்திஜி பிறந்த நாளுக்கு தரப்படும் விடுமுறைகளும் விழாக்களும் காந்தியின் உயிர் பறிக்கப்பட்ட ஜனவரி 30 க்குத் தரப்படவில்லை. மெல்ல மெல்ல காந்திஜியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேக்கு இந்திய நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் ' பாரத ரத்னா ' விருதை வழங்கும் காலம் வரலாம். இதை நாடாளுமன்றத்தில் எம்.ஐ.எம் கட்சியைச் சார்ந்த அக்பருதீன் உவைசி கூறினார்.ஜன நாயகத்தின் பலவீனங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக பயன்படுத்தி ஏற்பட்ட விபத்தில் பிரதமர் இருக்கையில் இருக்கும் மோடிக்கோ அந்த பாசிச வகையறாவுக்கோ ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த விடுதலைப் போரில் எள் மூக்கின் முனை அளவு கூட பங்கில்லை.அதே நேரத்தில் இவர்களுக்கு நேர் எதிரான ஒரு வரலாறு உண்டு. இந்திய சுதந்திர விடுதலைப் போரில் தங்களைத் தந்த மழவர்களைக் காட்டிக் கொடுத்த வரலாறுதான் அது. - இதில் 1941 இவர்களின் முன்னோடியின் வாஜ்பாய்க்கே ஒரு வரலாறு உண்டு. [ இதனை நாம் நமது எழுத்துக்களில் பெருமளவில் சுட்டிக்காட்டி இருக் கின்றோம்.]அதே போல இவர்களுக்கு பிரிதொரு வரலாறும் உண்டு. அது ஆங்கிலேயர்களிடம் அடிக்கடி மன்னிப்புக் கேட்ட வரலாறு. இவர்களின் குரு. சாவர்கர் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி! அந்தமான் சிறையிலிருந்து அவர் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கருணை மனுவில் ஆங்கிலேயர்களை இப்படி விழித்திருந்தார், ' ' The Mighty And Merciful ' [ பலமும் கருணையும் பொருந்திய ஆங்கிலேயர்களாம் ] சில மதங்களின் பக்தர்கள் தங்களின் இறைவனைத்தான் இப்படி விளித்து மன்றாடுவார்கல். ஆதாரம் சாவர்கரின் கருணை கோரும் மனு நவம்பர் 24, 1913.
இந்த சாவர்கரைப் பற்றி சுப்ராஜ் சன் தாஸ் குப்தா என்பவர் இப்படி பதிவு செய்கின்றார் : ' Veer Savarkar did. And by addressing the Colonial Oppressor as mighty and merciful, he initiated the RSS tradition of abject co - operation with the British ' அதாவது [ ஏனைய கைதிகள் செய்யாதவற்றை சாவர்கர் செய்தார். காலணியாதிக்க அடக்குமுறையாளர்களை பலமும், கருணையும் மிக்கவர்கள் என அழைத்து ஆங்கிலேயர்களுடன் கண்ணை மூடிக்கொண்டு ஒத்துழைக்கும் ஒரு பாரம்பரியத்தை தொடங்கி வைத்தார். ]{ Source : Andaman and The Origins Of Hindutuva (as Quoted in Savarkar And Hindutuva by A.G.Noorani. Pages : 48,49}
இதற்கு நேர் எதிரான ஒரு வரலாறு.
இந்திய விடுதலைப் போரில் கலந்துக் கொண்டதற்காக இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலானா யஹ்யா அலீ, முஹம்மது ஜாஃபர் தானிசாரி, முஹம்மது ஷாஃபிகூரி, ஆகியோர் கைது செய்யப்பட்டு மரண தண்டனை தரப்பட்டார்கள்.
மரண தண்டனையை வழங்கிய நீதிபதி அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள் : You all will be hanged till death. Your Properties will be confiscated and your corpses will not be handed over to your relatives, instead you will be buried contemptuously in the jail compound' [ நீங்கள் அனைவரும் சாகும் வரை தூக்கிலிடப்படுவீர்கள். உங்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். உங்களுடைய உடல்கள் உங்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது. மாறாக உங்களுடைய உடல்கள் கண்டனங்களுடன் சிறையின் வளாகத்தில் புதைக்கப்படும். ]
இத்தனையையும் செவிமடுத்த அந்த ஆலிம்கள் கண்ணீர் சிந்தவில்லை. கருணை கடாட்சம் வேண்டி கடிதம் எழுதவில்லை. மாறாக ஆனந்தமடைந்தார்கள். சந்தோஷப்பட்டார்கள். தங்களுக்கு கிடைக்கும் மரண தண்டனை மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கையில் சொர்கத்தை பெற்றுத்தரும் என்பதால். மரண தண்டனையை அவர்கள் கொண்டாடத் தலைப்பட்டுவிட்டார்கள். ஏனெனில் சொர்கத்தின் நேரடி நுழைவுச் சீட்டு அவர்களின் கையில் கிடைத்து விட்டது.
இதனை அறிந்துதான் ஆங்கில நீதிபதி தனது தீர்ப்பை இப்படி எழுதினான் :' You rejoice over the sentence of death and you look upon it as martyrdom. The government therefore have decided not to award you the punishment you like so much. The death sentence passed against you has been changed to that of transportation for life ' [ நீங்கள் மரண தண்டனை பெற்றதால் மகிழ்ச்சி அடைகின்றீர்கள். நீங்கள் அதனை வீர மரணம் என எடுத்துக் கொள்கிறீர்கள். அதனால் நீங்கள் அதிகமாக மகிழும் இந்த மரண தண்டனையை உங்களுக்கு வழங்குவதில்லை என முடிவு செய்து உங்களது தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகின்றது. ]{ Source : Role Of Muslims In The Struggle For Freedom (Muslims In India. Pages : 112,113.)}
பின்னர் இவர்களும் இவர்களுடன் விடுதலைப் போரில் கலந்துக் கொண்ட ஏராளமான முஸ்லிம்களும் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களின் மரணமும் அங்கேயேதான் நிகழ்ந்தது. இதுபோன்ற எண்ணற்ற முஸ்லிம்கள் எந்த நினைவுச் சின்னங்களையும், சிலைகளையும், பாராட்டுக்களையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தங்கள் இறைவனிடம் கிடைக்கும் நற்கூலிகளையே நாடி நின்றார்கள். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தங்களை விடுதலைக்காகத் தந்தார்கள்.
ஆனால் இது காட்டிக் கொடுத்த கலகக்காரர்களின் காலமாய்ப் போனது. இந்த நிலை மாற்றப்படவேண்டும்.இன்னொரு வரலாறும் இங்கே உண்டு அது இந்திய மக்களை மதமாச்சர்யம், மனமாச்சர்யம் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று ஒன்றிணைத்து ஒருமுகப்படுத்திய பெருமை பகதூர் ஜா ஷாஃபர் அவர்களுக்கு உண்டு. அவர்கள்தாம் 1857 இல் எல்லா இந்திய குடிமக்களையும் ஒன்று திரட்டி முதல் விடுதலைப் போரை நடத்திக் காட்டினார்கள்.
அந்த தலைமை இங்கே வந்தால்தான் நிலைமை மாறும். எல்லா மக்களும் தங்களின் மத மாச்சர்யங்களுக்கு அப்பால் நின்று வாழ்வார்கள் - வாழவைப்பார்கள்.இன்ஷா அல்லாஹ் இவர்களை வழி நடத்திய இஸ்லாம் இங்கு நிலை நாட்டப்படும் வரை நமது கொள்கை பயணங்கள் தொடரும்.....
நூஹூக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான், ஆகவே (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும் இப்றாஹீமுக்கும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்: '' நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள் நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள் '' என்பதே! இணை வைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் (அவனை) முன்னோக்குபவரை அவன் தன் பால் நேர்வழி காட்டுகிறான்.

.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக