அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்..அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது.
உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றது அமெரிக்கா. ஆனால் அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுத்திட முடியவில்லை.
அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த ஆய்வினை சுருக்கமாகப் பார்ப்போம்!.
அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு
US Religion Census
உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றது அமெரிக்கா. ஆனால் அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுத்திட முடியவில்லை.
அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
அந்த ஆய்வினை சுருக்கமாகப் பார்ப்போம்!.
அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு
US Religion Census
என்றொன்று ஆண்டு தோறும் நடைபெறுகின்றது இதனை அமெரிக்காவில் இயங்கும் மத அமைப்புக்கள் நடத்தி வருகின்றன. இதனை Association of Statisticians of American Religious Bodies
(அமெரிக்க மதங்களின் புள்ளிவிபர கணக்காயம்) என்ற அமைப்பு முன்னின்று ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது.
இவர்கள் இந்த புள்ளி விவரத்தை ( Association of Religion data Archives
) புள்ளி விவர குழுமத்தின் ஆவணக் காப்பகத்தில் வைத்து வருகின்றார்கள்.
இந்த வருடம் இந்தப் புள்ளிவிபரங்கள் மே,1,2012 இல் வெளியிடப்பட்டன.
இதில் கடந்த பத்து வருடங்களாக அதாவது 2000மாவது ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரை உள்ள ஆண்டில் எந்தெந்த மதம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற கணக்கை சமர்ப்பித்திருக்கின்றார்கள்
2000ம் ஆண்டில் அமெரிக்காவில் 10 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். (1 மில்லியன்)
2010ம் ஆண்டில் 20 லட்சத்து அறுபது ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பூர்வீகக்குடிகள்.
அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 66.77சதவிகிதம்
ஏனைய மதங்கள் :
அப்படியானால் ஏனைய மதங்களின் நிலைமை என்ன?
மோர்மான்ஸ்
mormons
(இவர்கள் ஒரு தனி மதப்பிரிவினர்) +45.5% சதவிகிதம் அதாவது இவர்கள் தங்களது முந்தைய எண்ணிக்கையை விட 45.5% விழுக்காடுகள் வளர்ந்துள்ளார்கள்.
எவாங்கிளிக்கல் புரட்டன்ஸ்டேன்ஸ் : evangelical protestants:+1.7% இவர்கள் கிருத்தவத்தின் ஒரு பிரிவு. ஏனைய மத நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு பார்த்திடும் போது இவர்கள் தாம் மிகவும் பின் தங்கி நிற்கின்றார்கள்.
கத்தோலிக்க கிருத்தவர்கள் (-5.0%) கத்தோலிக்க கிருஸ்த்தவர்கள் ஐந்து சதவிகிதம் விழுக்காடுகள் எண்ணிக்கையில் குறைந்திருக்கின்றார்கள் . அதாவது இந்த மதத்திலிருந்து பலர் தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள்.
பொதுவான புரட்டஸ்டான்ட் main line pnotestant -12.8% இதனை மிகப்பெரிய வீழ்ச்சி என்கின்றார்கள் பார்வையாளர்கள்.
இஸ்லாத்தைச் சுற்றி எல்லாம்:
கென்டுக்கி பல்கலைகழகத்தின் பேராசிரியர் Kentucky university
பேக்பை Bagby என்பவர் அமெரிக்காவில் இஸ்லாமிய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்.
இதனால் இவர் Islamic Studies இஸ்லாமியக் கல்வியை தனது சிறப்புத் துறையாக ஆக்கிக் கொண்டவர். இவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 2000ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 1000 மஸ்ஜித் பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்பொது 2010 இல் 2106மஸ்ஜித்துக்கள் பள்ளிவாசல்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்கள். இது அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் மிகப் பெரிய வளர்ச்சி என்கிறார்.
அமெரிக்காவில் எங்கே பார்த்தாலும் மெகா மாஸ்க்ஸ் Mega Mosques என்ற பெரிய மஸ்ஜித்களே நிர்மாணிக்கப் படுகின்றன. இந்தப் பள்ளிவாசல்கள் ஒவ்வொரு தொழுகையின் போதும் நிரம்பி வழிகின்றன. இதுவும் கெண்டுக்கி பல்கலைக் கழகப் பேராசிரியரின் அறிக்கையின் வெளிவந்த உண்மை
அமெரிக்கா டுடே பத்திரிக்கையின் அறிக்கை
அமெரிக்காவின் ஆய்வுபூர்வமான பத்திரிக்கைகளுள் ஒன்று USA Today
இந்தப் பத்திரிக்கை மத்திய அமெரிக்காவின் முக்கிய பகுதியான ஆர்லாண்டோஸ் ஆரஞ்ஜ் கன்ட்ரி-இல் (Orlando’s Orange Country) இஸ்லாத்தின் வளர்ச்சி 473 விழுக்காடுகள் எனக் குறிப்பிட்டுகின்றது.
இதற்கு புதிதாக இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை வழியாக ஏற்றுக் கொண்ட 10,000 பத்தாயிரம் முஸ்லிம்கள் தாம் காரணம் என்கின்றது.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
அதே “யுஎஸ்ஏ டுடே” பத்திரிக்கை இஸ்லாத்தின் இந்த வேகமான வளர்ச்சிக்கு 9/11 என்று அடையாளப்படுத்தப்படும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னணியில் நடந்த சதியும் உண்மையை அறிந்த அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்திட தொடங்கியதும் முக்கிய காரணங்களாகும் 9/11க்கு பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். 9/11 இஸ்லாத்தின் வளர்ச்சியை சூடேற்றி விட்டுவிட்டது என்று கூறுகின்றது. இதனை அந்தப் பத்திரிக்கையில் இடம் பெற்ற சொற்களால் சொன்னால் muslim growth has been fuelled by 9/11 converts முஸ்லிம்களின் வளர்ச்சி 9/11 ல் எரியூட்டப்பட்டு விட்டது.
அதேபோல் மருத்துவ துறையில் உலக முஸ்லிம்கள் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றார்கள். இப்போது அமெரிக்காவில் மருத்துவ துறையில் தான் வேலை வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே இந்தத் துறையில் வந்து குடியேறும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது.
முஸ்லிம் மாணவர்கள்:
இப்போது அமெரிக்காவில் பயின்று கொண்டிருக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பத்து விழுக்காடுகள் 10% முஸ்லிம் மாணவர்களே!
இதனால் இது வரை முஸ்லிம்களின் பெருநாள்களுக்கு விடுப்புக்களைத் தந்திடாத கல்வி நிறுவனங்கள் இப்போது விடுப்புகளை விடுகின்றன.
இதற்குத் தகுந்தாற்போல் மொத்த கல்வியாண்டும் மாற்றி அமைக்கப் படுகின்றது. இது அமெரிக்காவின் கல்வித்துறையின் முகத்தை மாற்றிடத் தலைப்பட்டு வருகின்றது. School Calender பள்ளிகால அட்டவணைகள் ஏற்கனவே மாற்றங்களுக்கு உள்ளாகி விட்டன.
அமெரிக்காவின் முக்கிய நகரமாகிய நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளில்
Newyork City School District
இலும் இதுவே நிலை. (Source US Today Article quoted in Milli Gazette 16-31 May 2012: Page 16)
கால்பந்து அட்டவணையும் முஸ்லிம்களும்:
அமெரிக்காவின் மற்றொரு முக்கிய பகுதி டெட்ராயிட் detrait அதன் புறநகர் டியர்பார்ன் dearborn இங்கே முஸ்லிம்கள் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றார்கள். Fox News
ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிக்கை இதனை இப்படிக்கூறுகின்றது.
Dearborn is located just outside of Detroit and it contains one of the densest Arab Communities outside the Middle East. Each day when the Loca Mosque’s Call to prayer can be clearly heard through out the city.
அதாவது டியர்போண்ட் என்பது டெட்ராயிட்இன் புறநகரில் இருக்கின்றது/ இங்கே தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்தாற்போல் அரபுக்கள் அடர்த்தியாக வாழுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் அந்த வட்டார மஸ்ஜித்களில் விடுக்கப்படும் தொழுகை அழைப்புக்களை அந்த நகர் முழுவதும் தெளிவாகக் கேட்கலாம்.
கால்பந்து ஆட்டப்பயிற்சி நேரங்களில் மாற்றம்.
கோடைக்காலங்களில் அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சி வழங்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் தாம் ரமழான் நோன்புகளும் வருகின்றன.
இதனால் கால்பந்தாட்டப் பயிற்சிகளை மாற்றி வைத்திட வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு. காரணம் அமெரிக்க கால்பந்தாட்ட அணியில் அங்கம் வகிப்பதில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். அனைவரும் தொழுகையை நிறைவேற்றுபவர்கள். நோன்பு நோட்பவர்கள்.
கோடைக்கால கால்பந்தாட்டப் பயிற்சிகளின் நேரம் இரவு 11 மணியிலிருந்து காலை 4 மணி வரை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை ஏனைய மத நம்பிக்கையைக் கொண்ட அன்பர்கள் எதிர்த்தார்களா?
இப்படி ஒரு கேள்வியை ஃபாக்ஸ் நியூசே (fox news) எழுப்பி பதிலும் சொல்லி இருக்கின்றது.
எவரும் எதிர்க்கவில்லையாம்.
காரணம் பெரும்பான்மையாக அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்கள் முஸ்லிம்கள் தானாம்.
மதமற்றோரின் நிலை:
இஸ்லாத்தை தொடர்ந்து இன்னும் வேகமாக வளர்ந்து வருவது மதமற்றவர்களின் எண்ணிக்கையாகும். இவர்கள் 32 சதவிகிதம் வளர்ந்துள்ளார்கள்.
இவர்கள் ஒரு கட்டத்தில் ஆன்மீகத்தையும் இறைவனையும் தேடுவார்கள். அப்போது அவர்கள் நிச்சயமாக இஸ்லாத்தின் பக்கம் திரும்புவார்கள் இன்ஷாஅல்லாஹ்! அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கட்டும்.
கிருஸ்தவத்தின் வீழ்ச்சி:
கிருஸ்தவம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக அதே ஃபாக்ஸ் நியூஸ் அறிவிக்கின்றது.
1990களில் அமெரிக்கர்களில் 86 சதவிகிதம் மக்கள் தங்களை கிருஸ்தவத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் கிருஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கிருஸ்தவர் களாகவே இருந்தார்கள்.
ஆனால் 2008ஆம் ஆண்டில் 76 சதவிகித்தினர் மட்டுமே தங்களைக் கிருஸ்தவத்தோடு அடையாளப் படுத்துகின்றனர்.
இதைச் சொல்லிவிட்டு ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் இன்னொன்றையும் சொல்கின்றார். இஸ்லாம் அமெரிக்காவின் முகத்தை மாற்றி வருகின்றது. அமெரிக்காவை இனி கிருஸ்தவ நாடு என அழைக்க முடியாது. இன்றளவும் அமெரிக்காவை மதசார்பற்ற நாடு என்று நம்பிக்கொண்டிருந்தவர்களுக்கு இதில் அழுத்தமானதொரு செய்தி இருக்கின்றது.
பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்திட படமெடுத்தவர்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் விரக்தி அடைந்தவர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக