நவம்பர் 2014
தொடர் = 34
இந்திய சமுதாய சீரமைப்பில் இஸ்லாத்தின் பங்கு!
அபுல் ஹசன் அலீ நத்வீ
![]() |
| கிலாஃபத்தை வீழ்த்திய முஸ்லிம் பெயர்தாங்கி முஸ்தபா கமால் அதாஅல் துர்க் |
மொழிபெயர்ப்பு : அஹ்மது ஜலாலுத்தீன் நத்வீ.
இஸ்லாம் வென்ற பிறகு கிருஸ்த்துவத்தை தனது மார்க்கமாகக் கொண்ட ஐரோப்பாவிலும், சிலை வணக்கத்தை மதமாகக் கொண்டிருந்த இந்தியாவிலும் இஸ்லாம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியது.இவ்விரு பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை வழிமுறைகளிலும் பண்பாடுகளிலும் சமூக கலாச்சாரத்திலும் பெரும் சீர்த்திருத்தங்கள் ஏற்பட இஸ்லாமே காரணம். [Source : Infulenc of Islam on Indian Culture. By : Dr.Tarachand]
![]() |
| கலீஃபா அப்துல் மசீத் 2 |
ஓரிறைக் கோட்பாட்டின் பக்கம் மக்களைத் திருப்பியது இஸ்லாம். பெண்களுக்கு மரியாதையும், உரிமைகளையும் கிடைத்திட இஸ்லாம் காரணமாக இருந்தது. மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இல்லை. அனைவரும் சமமே என்ற பிரகடனம் நிலை பெற்றதில் இஸ்லாத்தின் பங்கு மிக முக்கியம்.ஷரியத் எனப்படும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் அதன் நாகரிகமும் உலகத்துக்கு அறிமுகப்படுத்திய எல்ல சீர்த்திருத்தங்களும் மக்களை வந்தடைந்தன.
வரலாற்று ஆய்வாளர் கே.எம். பணிக்கர். இவர் இந்திய தூதராக எகிப்தில் பணியாற்றியவர். இந்திய மக்களின் சிந்தனையிலும் இந்து மதத்திலும் இஸ்லாத்தின் ஏகத்துவக் கோட்பாடு எப்படிப்பட்ட சீர் திருத்தங்களை ஏற்படுத்தியது என்பதை எடுத்துரைக்கின்றார்.இஸ்லாம் இந்தியாவிற்கு வந்திருந்த காலக்கட்டங்களில் இந்து மதத்தில் அது சீர் திருத்தங்களை ஏற்படுத்தியது மறுக்க இயலாத உண்மை. இந்து மதத்தில் ஓரிறைச் சிந்தனை ஏற்பட்டது இஸ்லாத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டதே.இந்து மதத்தின் தலைவர்களும் சிந்தனையாளர்களும் தம் கடவுள்களுக்கு பல்வேறு பெயர்களை சூட்டிக் கொண்டாலும் கூட வணங்கிட தகுதியுள்ள இறைவன் ஒருவனே! அவனே வெற்றியும், மீட்பும் தர வல்லவன் என்று அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறினர்.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி நிலவிய போது உருவான மதங்கள், கொள்கைகளில் இஸ்லாம் ஏற்படுத்திய ஓரிறைக் கோட்பாட்டின் தாக்கம் இருந்தது. பக்தி மார்க்கம் மற்றும் கபீர்தாஸ் - ன் சீர்திருத்த இயக்கம் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். [Source : A survey Of Indian History. P.132]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறுகிறார். " வடமேற்கு இந்தியா வழி முஸ்லிம் போராளிகள் இந்தியாவுக்குள் வந்ததும் இந்தியாவிற்கு இஸ்லாம் வந்ததும் இந்திய வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வு. இந்து சமுகத்தில் வியாபித்திருந்த சீர்கேடுகளை வெறுத்தது இஸ்லாம். பிறப்பினால் வரும் ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, சாதிக்கூறுகள் இவற்றை இஸ்லாம் எதிர்த்தது. உலக வாழ்வை வெறுக்கும் துற்வுக் கோட்பாடு இந்தியாவில் பரவியிருந்தது. இதையும் கண்டித்தது இஸ்லாம்.
"இந்தியா இப்படி இருந்த போது இஸ்லாம் தந்த சகோதரத்துவம், சமத்துவம் இவற்றில் முஸ்லிம்கள் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள். இது இந்துக்களின் சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதனின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு இந்தியாவில் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மக்கள், சமத்துவம் மறுக்கப்பட்ட சமுதாயத்தினர் இஸ்லாத்தை ஏற்று இஸ்லாம் தந்த பலனை அனுபவித்தார்கள் " [Source : Discovery Of India]
நமது காலத்து அறிஞர் என்.சி.மேத்தா அவர்கள் தனது " இந்தியக் கலாச்சாரமும் இஸ்லாமும் " எனும் நூலில் கூறுகிறார்." பண்டைய நாகரிகங்கள் வீழ்ச்சிக்கும் சரிவுக்கும் ஆளாகி நின்ற நேரத்தில் இந்திய மக்களின் வாழ்வைக் கவ்விப் பிடித்திருந்த இருள்களைக் கிழித்திடும் இஸ்லாம் ஒளிவெள்ளமாய் இந்தியாவுக்குள் வந்தது. தெள்ளத் தெளிவான அதன் இலட்சியங்கள் இந்திய மக்களின் சிந்தனைகளின் உறுதியாக இடம் பிடித்தன. அரசியல் களத்தில் இஸ்லாம் பெற்ற வெற்றிகளை விட சிந்தனைத் தளத்தில் அது பெற்ற வெற்றி பெரியது. மகத்தானது.
இது இந்தியாவில் மாத்திரமல்ல. இஸ்லாம் புகுந்த எந்த நாடுகளிலும் இப்படிப்பட்ட வெற்றிகளையே அது பெற்றது. "இந்தியாவில் இஸ்லாத்தின் வரலாறு அதன் அரசாங்கத்தோடு பின்னிப் பிணைந்தது. எனவே சத்திய இஸ்லாத்தின் மெய் வடிவம் எவருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டே இருக்கிறது. மனித குலத்திற்கு அது வழங்கிய உபகாரங்களும் அன்பளிப்புகளும் மனித பார்வைகளில் இருந்து மறைந்தே போய் விட்டது. இது நமக்கு ஒரு துரதிருஷ்டம்தாம் " [Source ; Indian civilization and ISlam ]
இன்றைய உலகில் வனப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு கொள்கையும் எந்த ஒரு நாகரிகமும் இஸ்லாத்திடமிருந்தும் முஸ்லிம் களிடமிருந்தும் சிறியதாகவோ பெரியதாகவோ எந்த பலனையும் அடைந்திடவில்லை என்று கூறிட இயலுமா? இயலவே இயலாது.
அறிஞர் ராபர்ட் பிரிஃபால்ட் அவர்கள் கூருகிறார் :" முன்னேறிய ஐரோப்பாவின் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் அதில் இஸ்லாமிய நாகரிகத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது. இஸ்லாம் தந்த சீர் திருத்தத்தின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கிறது. "[ Source : The Macking Of humanity.P.190 ]
அதே நூலில் மற்றொரு இடத்தில் அவர் இப்படி கூறுகிறார் : " அரபு மக்களின் பெருமைமிகு கல்விகளுள் ஒன்றான இயற்பியல்தான் ஐரோப்பாவிற்க்கு மறுவாழ்வைத் தந்தது என்றில்லை இஸ்லாம் தன் ஒளிச்சுடரை ஐரோப்பாவிற்குள் பாய்ச்சிய நாள்தொட்டே எல்லாத் துறைகளிலும் அது ஏராளமான சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. " [Source : The Macking Of humanity.P.202 ]
இப்படியே போய்க் கொண்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆம் நதிகளை அதன் போக்கிலேயே ஓடவிட்டால் அதன் அழகே தனிதான். அல்லவா? வில்லைத் தயாரித்தவனிடமே கொடுத்து அதை பயன்படுத்திடச் சொன்னால் என்ன அருமையாக அதை அவன் பயன்படுத்துவான் அல்லவா?இதுபோல மனித குலத்தை வழி நடத்துவதற்காகவே படைக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்திடமே உலகத்தலைமை இருந்திருந்தால் மனித குலம் எல்லாமும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திருக்கும். மனித குலத்தின் வரலாறு சோதனைகளாலும் வேதனைகளாலும் அதிர்ச்சிகளாலும் சூழப்பட்டு இருக்கிறதே இப்போது! இப்படியா இருந்திருக்கும் முஸ்லிம்கள் உலகத்தலைமை ஏற்றிருந்தால்?
இப்போது நாம் படித்துக் கொண்டிருக்கிறோமே அப்படி இருந்திருக்காது மனித வரலாறு. மனித வரலாறு அழகு மிளிரும் பேரும் புகழும் பெற்றுத் திகழும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்கும். அனைவரும் கண்ணும் கருத்தும் குளிர வாழ்ந்திருப்பார்கள். என்ன செய்ய? யாரைக் குறை சொல்ல முடியும்? விதி வேறுமாதிரியல்லவா? அமைந்துவிட்டது. ஆம் முஸ்லிம்களிடத்திலேயே வீழ்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.......
தொடரும்......
தமிழ் வடிவம் : கே.எம். இல்யாஸ் ரியாஜி.






இதனை அரபியில் எழுதியவர் யார் pls importent
பதிலளிநீக்குIndian scholar, abul hasan ali nadwi
நீக்குஇந்த நூலை அரபியில் எழுதியவர் யார்?
பதிலளிநீக்குIndian scholar, abul hasan ali nadwi
நீக்கு